Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-சிறுகதை.

மம்முடு

பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்டது என்று எல்லாமே நான் தான். எனக்கு தங்கையோ சகோதர்களோ இருக்கவில்லை. ஒருவேளை எனக்கு ஒரு தங்கைச்சியோ அக்காவோ இருந்திருந்தால் பெண்வாசம் என்றால் என்னவென்று தெரிந்திருக்குமோ என்னவோ. இப்பொழுதெல்லாம் எனக்கு கலியாணத்தில் பெரிதாக ஆர்வம் வரவில்லை. உடல் மனம் இரண்டின் தேவைகளை அதன் போக்கில் இயல்பாக இருக்க விட்டு விட்டேந்தியாக வாழ்வதும் ஒரு ஜென் நிலைதான் என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. சிலவேளைகளி...

தெய்வானை-சிறுகதை-கோமகன்

நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்துப் பின்னர் மேலே எழும்பிய சுவர் பனையோலையினால் நன்கு வேயப்பட்டிருந்த கூரையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. மாலின் உட்புறமாக இருந்த பாரிய வட்டத்தின் குறுக்குப்பாடாக சாமான்களை போட்டு வைப்பதற்கான களஞ்சிய அறை இருந்தது. அதற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த புகட்டில் மூன்று கண்களைக் கொண்டு சுட்ட களிமண்ணினால் வனையப்பட்டிருந்த நான்கு சூட்டடுப்புகள் இருந்தன. அதில் ஒன்றின் மீத...

வெந்துருதி தி(த்)றைஸ்-சிறுகதை-கோமகன்

முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக்கங்கள் எல்லாமே முழு உருவங்களாக இல்லாது குவியல்களாக இருந்தன. பின்னர் அவை மருத்துவர்களால் சீர்செய்யப்பட்டு உருப்பெறலாம். 0000000000000000000 அல்ஜீரியாவின் வடக்கு பிராந்தியமான கபிலி-யில் (Kabylie) மார்க்க சிந்தனைகளில் ஊறித்திளைத்த அபூபக்கர் பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வியாக பிறந்த ஆயிஷா பாரிஸ் வந்து பதினைந்து கோடைக்காலங்களைக் கடந்து விட்டாள். தானும் தன்பாடும்...

செய்ன் மிஷேல் (SAINT MICHEL) -கோமகன்-பிரான்ஸ்

1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை நேரம் அலாரம் சிவாவினது நித்திரைக்கு உலை வைத்தது. சிவா வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு. இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் தூக்கத்தை மைதிலியின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு. அவனது கை கட்டிலின் மறுபுறம் துழாவியபோது அந்த இடம் வெறுமையாகவே இருக்க” இந்த நேரத்தில் மைதிலி எங்கே போய்விட்டாள்”? என்று நினைத்தவாறே கட்டிலில் இருந்து விசுக்கென்று எழுந்தான். வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது,மைதிலி முழுகிவிட்டு பல்கனியில்த் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் அவனுக்குத் தெரிந்தது. அந்தக்காலை வேளையில் அவளது நீண்டகருமையான கூந்தல் கருநாகம் போல அவளதுமுதுகில் பரவியிருந்தது. அவள் அவனுக்காகத் தயாரித்திருந்த கோப்பி ஆவிபறந்தபடி குசினிக்குள் காத்திருந்தது. சிவா கோப்பியை எடுத்துக் கொண்டு பல்கணியில் மைதிலிக்குப் பக்கத்தில் நின்று கொண்டான். மைதிலி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது வேலையில் ஈடுபாட்டுடன் இருந்தாள். நேற்று இரவு இருவரும் வாயால் சண்டைபிடித்தது மனதில் வந்து அவனை அலைக்கழித்தது க்கொண்டிருந்தது. ஒருப...

ஆக்காட்டி

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதைத் தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது. 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு அலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப்பரக்கப் பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்குப் பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் “ஹலோ ” என்று அனுங்கியவாறே ரிசீவரை காதுக்கு அருகில் வைத்தேன். ” டேய் மச்சான் கதிர் ! நான் குமணன். கொட்டிவாறிலை (Côte d’Ivoire) இருந்து கதைக்கிறன். என்னை உங்கை அனுப்பி விடுறாங்கள். நீதான் வந்து என்னை கூட்டி கொண்டு போகவேணும். நான் உனக்கு பேந்து எடுக்கிறான்”. என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசியின் எதிர்முனை அடங்கியது. ...

சுந்தரி

வேம்படியில் வாழ்ந்த வந்த தங்க வேலாயுதத்தாருக்கும் தெய்வானைபிள்ளைக்கும் மூத்த மகளாக பிறந்த கனக சுந்தரிக்கு நண்டும் சிண்டுமாக நான்கு தம்பிகளும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். தங்க வேலாயுதம் ஆசிரியர் தொழிலுடன் பதினைந்து பட்டி தோட்டமும் செய்துவந்ததால் அந்தப் பெரிய குடும்பம் ஓரளவு வசதியாக இருந்து வந்தாலும், யுத்தத்தின் கோரப்பிடியினுள் சிக்கிய அந்தக் குடும்பம் படிப்படியாக அதன் வளங்களை இழக்கத் தொடங்கியது. தங்க வேலாயுதத்துக்கு பிள்ளைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது. கனக சுந்தரி பல்கலைக்கழகப் பட்டப் படிப்பும் முடித்து கலியாண வயதையும் எட்டி விட்டாள். அவளது அழகில் கடவுள் எதுவித வஞ்சகமும் செய்யாத காரணத்தால் கனகசுந்தரியின் அழகில் மயங்காத பெடியளே வேம்படியில் இல்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ அவளுக்குப் பேசிவந்த கலியாணங்கள் எல்லாம் அவளது செவ்வாய் குற்றத்தினால் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தன. இது தெய்வானைப்பிள்ளைக்கு மனதளவில் பெரிய தாக்கமாக இருந்தது. தெய்வானைபிள்ளை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டாள். நோய்வாய் பட்ட தாய்க்குப் பிறகு கனகசுந்தரியிடமே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்தன. கோழி ...