Skip to main content

பகிரங்கமாகவே விலகுகின்றேன்.




இன்று மாலை எனக்கு யாழ் இணைய நிர்வாக மட்டத்தில் இருந்து ஓர் கடிதம் வந்து இருந்தது அது சொல்லிய செய்தி என்னவென்றால்,

0000000000000000000000000

வணக்கம் கோமகன்,

சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் யாழையும் யாழ் கள உறுப்பினர்களையும் தரம் தாழ்த்தி எழுதுவது நாம் அறிந்தது தான். அதன் வழியில் சுயமதிப்பீடு பற்றி யாழில் கேள்வி கேட்டவர்களை கொசுக்கள் என்று மிகவும் தரம் தாழ்த்தி சமூக வலைத்தளங்களில் நீங்கள் எழுதியதையும் நாம் அறிவோம்.

யாழ் இணையம் மீது உங்களுக்கு விமர்சனம் இருப்பின் எம்மிடமோ அல்லது அதனை சகல உறுப்பினர்களும் அறியும் வண்ணம் நாற்சந்தியிலோ கேட்டு இருக்கலாம். ஆனால் அப்படிக் கேட்காமல் இப்படி யாழ் உறுப்பினர்களையும், நிர்வாகத்தினையும், யாழ் இணையத்தினையும் தரம் தாழ்த்தி யாழுக்கு வெளியே சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

இப்படியான விடயங்களை நீங்கள் செய்வது இது முதல் தடவையும் அல்ல என்பதை நாம் அறிவோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

உங்களுக்கு மூன்று தெரிவுகளைத் தர விரும்புகின்றோம்.

ஒன்று:

யாழ் கள உறவுகளிடம் மன்னிப்புக் கேட்பது.

இரண்டு:

யாழ் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் 'கொசு' என்று குறிப்பிடும் வண்ணம் மோசமான எண்ணம் கொண்ட நீங்கள் ஒன்று, நீங்களாகவே யாழை விட்டு தானாகவே வெளியேறுவது.

மூன்று:

எம்மால் வெளியேற்றப்படுவது

உங்களுக்கு வசதியான முடிவை எடுக்கும் உரிமையை உங்களிடம் விட்டு விட்டு உங்கள் முடிவை உடனடியாக அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.

யாழ் இணைய நிர்வாகிகள்.

000000000000000000000000000

யாழ் இணையம் தமிழையும் தமிழர் தேசியத்தையும் வளர்த்தெடுக்குமுகமாக உலகத்தமிழரை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட கருத்துக்களத்துடன் கூடிய இணையைத்தளமாகும். ஆனால் கடந்த சில வருடங்களாக அது தனது பாதையில் இருந்து முற்று முழுதாக விலகி ஒரு சிலரின் சந்தோசத்துக்காகவும் , நிர்வாக மட்டத்தில் இருக்கும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் இயங்குகின்ற இணையமாகவே காணப்படுகின்றது. அத்துடன் கருதக்கள விதிகளை நிர்வாகமே இயற்றி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு களவிதிகளில் தாராளமாகவே சலுகைகளையும் காட்டி, தங்களுக்கு பிடிக்காதவர்களை அதே களவிதிகளை போட்டு பழிவாங்கும் போக்குகளால் நானாகவே இந்த இணையத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தேன். அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தில் நான் கள உறவுகளிடம் " மன்னிப்பு " கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இது அநாகரீகத்தின் உச்சக்கட்டமாகும் . ஏனெனில் கருத்துக்களத்தில் எல்லோருமே புனைபெயர்களில் முகமூடிகழுடன் வருபவர்கள். ஒரு முகமூடி இன்னொரு முகமூடியிடம் மன்னிப்பு கேட்பது என்பது கருத்துப்பயங்கரவாதாமாகும். யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் நான் பின் வரும் கேள்விகளை எழுப்பி அவர்களை பொது விவாத்துக்கு அழைத்தேன் .

01 சமூக வலைதளங்களில் கள உறவு ஒருவர் தனது சிந்தனைகளை வெளிபடுத்த கருத்துக்கள விதிமுறைகள் தடை செய்கின்றனவா ?

02 நான் எந்த இடத்தில் எங்கு என்ன திகதியில் நிர்வாகம் சொல்கின்ற குற்றங்களை செய்தேன் என்பதை நிர்வாகம் ஆதார பூர்வமாக இந்த பதிவில் வெளிப்படுத்துமா ?

அப்பொழுது நான் முக நூலில் யாழ் இணையத்தின் கள உறவை "கொசு" என்று அழைத்ததாக சொல்லப்பட்டது. கொசு என்ற பெயர் தமிழில் அவ்வளவு தரம் கேட்ட வார்த்தையா என்ன ? நான் விலகியதன் பின்பும் எனக்கு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் எனது சுய விபரக்கோவையில் " தடை செய்யப்பட்டோர் " என்று மேலதிக சொல்லாடலயும் போட்டு என்னை அவமானப்படுத்துவதிலேயே நிர்வாகம் குறியாக இருக்கின்றது. நானும் , யாழ் இணையத்தின் வளர்ச்சி மீது அக்கறை கொண்ட ஒருசிலரும் மேற்கொண்ட உள்ளகத் தொடர்பாடலுக்கு இது வரை எந்த விதமான பதில்களையும் தராது யாழ் இணைய நிர்வாகம் ஜனநாயக விரோதப்போக்கையே தொடர்கின்ற நிலையில் இந்த எதிர் வினைய எனது வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் .மேலும் இது எனது தனிபட்ட பிரச்னை இல்லை . ஒரு கருத்துக்கள உறவை நிர்வாகம் தடை செய்வது என்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை . அதற்கு கருத்துக்கள விதிமுறைகளும், பெரும்பான்மையான கருத்துக்கள உறவுகளினது ஆதரவும் இருக்க வேண்டும். அதை விடுத்தது தனிபட்ட ஒருவர் தனது விருப்பு வெறுப்புகளின் படி நிர்வாகத்தில் செயல்படுவது என்பது, ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் கேலிசெய்வதுடன் மட்டுமில்லாமல், எந்த நோக்கத்துக்காக யாழ் இணையம் ஆரம்பிக்கப்பட்டதோ அதன் நோக்கத்தையே காலடியில் போட்டு மிதிப்பதாகும் .

எந்த வித ஆதாரங்களும் இன்றி சகட்டு மேனிக்கு என்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி மீண்டும் என்மீது சேறு அடிப்பதையே நிர்வாகம் செய்து கொண்டு இருக்கின்றது. யாழ் இணையம் கள உறவுகளின் பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொண்ட இணையதளமாகும். நான் சமூகத்தளங்களில் எனது சிந்தனைகளை எழுதவதற்கு பூரண சுதந்திரம் உடையவன். நான் எந்த இடத்திலும் யாழையோ எனது சக கள உறவுகளையோ தரக் குறைவாக எழுதியது கிடையாது. எனது வலைப்பூவில் வந்த ஒரு அனோமதேய கருத்து ஒன்றிற்கே எனது சிந்தனைகளை முக நூலில் குறிப்பிட்டிருந்தேன். எனது வலைபூவில் வரும் அனோமதேய கருத்துக்களை நான் வரவேற்று அதை வெளியில் விடுவதில்லை. ஏனெனில் தனது சொந்த கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்களே பெயரை குறிப்பிடாது அநோமதேயமாக வந்து கருத்து போடுவார்கள் என்பது எனது தனிபட்ட கருத்தாகும் . இது இப்படி இருக்க நிர்வாகத்தின் இன்றைய கடிதம் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

நான் இதுவரைகாலமும் கருத்துகள உறவுகளுடன் அநாகரிகமான சொல்லாடல்களை மேற்கொண்டதில்லை. எல்லோருடனும் பண்புடனேயே நடந்து வந்து கொண்டு இருக்கின்றேன். இல்லாத விதிகளை சேர்த்து நிர்வாகம் என்னை தடை செய்வதை விட நானாகவே கௌரவத்துடன் இன்றில் இருந்து விலகி கொள்கின்றேன். இறுதியாக வேண்டா பெண்டில் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று நினைக்கும் நிர்வாகத்துடன் நான் மல்லுக்கட்ட விரும்பவில்லை. ஆனால் எனது எழுத்துப்பணி இணய வெளி எங்கும் பரவும். கள உறவுகள் எனது ஆக்கங்களை எனது வலை பூவிலும் முக நூலிலும் பார்த்துக் கொள்ளலாம். நன்றி வணக்கம்.






June 07, 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...