Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 12




புலனாய்வு 

ஹாய் யூத்ஸ் அண்ட் கேர்ல்ஸ்,

என்ரை ஐ போனை பாத்துப்போட்டு அதென்ன நீ மட்டும் புது புது போனுகள் வைச்சிருக்கலாம் நான் என்ன குறைச்சலோ? எண்டு கொஞ்ச காலத்துக்கு முன்னாலை என்ரை தறும பத்தினி, எனக்கொரு ஐ பாட் வாங்கி தாங்கோப்பா எண்டு என்னட்டை ஆசையாய் கேட்டாள். சரி பெரிசாய் அவள் ஒண்டும் கேக்கிறேலைத்தானே எண்டு நானும் ஒரு " ஐ பாட் எயார் "வாங்கி குடுத்தன். ஆளுக்கு அப்பத்தான் தானும் என்னை மாதிரி ஈக்குவலாய் இருக்கிறதெண்டு புள் ஹப்பியாய் இருந்திச்சுது. றோட்டாலை போற சனியை தூக்கி நடுவீட்டுக்கை செற்றியிலை இருத்தி வைச்சிருக்கிறன் எண்டு எனக்கு சிவசத்தியமாய் தெரியேலை பிள்ளையள். இண்டைக்கு ஒரு அலுவலாய் வெளியாலை போனன். அலுவலை முடிச்சு போட்டு வீட்டை வர பிந்திப்போச்சுது. நான் பசி அவதியிலை சாப்பிடேக்கை மனுசி கேட்டுது, "இன்ன இன்ன இடத்திலை எல்லாம் நிண்டனி. அங்கை உனக்கு என்ன வேலை எண்டு?" நான் போன இடமெல்லாம் எந்த கிரகம் நான் இங்கை வாறதுக்குள்ளை போட்டுக்குடுத்தவன் எண்டு எனக்குள்ளை யோசிச்சு கொண்டு,

 "என்னப்பா இவ்வளவு நேரமும் அலுவல் பாத்துப்போட்டு வாறன். விசர் ஞாயம் பறையிறீர்" எண்டன்.

அதுக்கு அவா சொல்லுறா, " இல்லை நீங்கள் போன் பண்ணாட்டிலும் எங்கை நிப்பியள் எண்டு எனக்கு சொல்ல ஆக்கள் இருக்கினம்" எண்டு கூலாய் சொன்னா. பேந்து நான் கொஞ்ச நேரத்தாலை என்ரை ஐ போனை நோண்டினால் அதுலை "பைண்ட் ஐ போன் " எண்ட அந்த சனியன் கிடக்கு. அதாலை பிள்ளையள் வீட்டிலை ஒரு ஐ போன் மட்டும் வைச்சிருங்கோ. இல்லாட்டில் சனி உங்கடை கையுக்கை கிடக்கு. சுறுக்கர் இப்ப ஒருஇடமும் அரக்கேலாமல் கிடக்கு எண்டால் பாருங்கோவன்.

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000

சின்னன் பொன்னனுகள் 

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது. சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ. ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் பிறசர் தான் ஏறும். சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம். அங்காலை மகிந்தனும் சின்னனுகளைதான் எயிம் பண்ணித்தான் அடிச்சான். ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவம் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ.

ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது. இதுக்கெண்டே வெள்ளையள் அங்கை போய் சொர்க்கத்தை காணினம். ஏனெண்டால் இங்கை சின்னனுகளிலை கையை காலை போட்டால் பெரிய பிரச்சனையாய் போடும் அவையளுக்கு. இது காணாதெண்டு அங்கை பள்ளிக்கூடத்துக்கு போற வாற பெடி பெட்டையள் ஒழுங்காய் போய் வரேலாமல் கிடக்கு. எங்கடை சனமே அவ்வளவு காய்ச்சலிலை திரியுதுகள். அதுகளை ரேஸ்ட் பண்ணிப்போட்டு கோதாரியிலை போவார் மேர்டர் எல்லோ பண்ணுறாங்கள். சுறுக்கரை கேட்டால் உவங்கள் தரவளிக்கு பாக்குவெட்டி றீட்மெண்ட் தான் சரி. அதோடை அவைக்கு நல்லாய் செக்ஸ் என்னண்டால் என்ன எண்டு படிப்பிக்கவேணும் கண்டியளோ.

சும்மா இண்டைக்கு மாத்திரம் ஹப்பி சில்றன்ஸ் டே எண்டு சொல்லாமல் நாங்களும் மாறவேணும். சின்னனுகளை சின்னனாய் இருக்க விடவேணும். இங்கை அதுகளுக்கு அது பழக்கிறன் இது பழக்கிறன் எண்டு அதுகளை ராச்சர் பண்ணாமல் இருக்கவேணும். முக்கியமாய் சண்டையிலை எபெக்ட் ஆன சின்ன பிள்ளையளை ஒராளை தன்னும் தத்து எடுத்து நாங்கள் படிப்பிக்க வேணும். பேந்து அதுகள் உங்களை கடைசி வரைக்கும் மறக்க மாட்டுதுகள். இதுகளையெல்லாம் உடனை செய்யவேணும். இல்லாட்டில் எங்கடை சின்னனுகளை ஆராலையும் காப்பாத்தேலாது .

சுருக்கு சுறுக்கர்

0000000000000000000000000000


வணக்கம் பிள்ளையள்,

ஆயிரம் பிக்கல் பிடுங்கலுகள் எங்களுக்கும் சோமாரி சோ வுக்கும் இருக்ககலாம், அனால் பொழுது போகாத கிரகங்கள் கொஞ்சம் அந்தாள் மண்டையை போட்டுட்டுதெண்டு புசத்த ஏரியா ரெண்டு பட்டுப்போய் கிடக்கு. ஆரெண்டாலும் உயிரோடை இருக்கிறவையை செத்துபொனதெண்டு சொல்லுறது சுறுக்கருக்கு துண்டாய் பிடிக்கேலை கண்டியளோ.

சுறுக்கரின் அவதானம்

00000000000000000000000000000

புலத்து விறாண்டல் 

ஹாய்........... போய்ஸ், , கேர்ல்ஸ் ,ஆண்ட்டீஸ், அண்ட் மாம்ஸ் ,
சுருக்கு சுறுக்கர்,ஐமிச்சம் ஐயம்பிள்ளை ஆக்கடை ரேஞ்சுக்கு தவறணையிலை போய் உடன் கள்ளு அடிச்சால்த்தான் திறம் கண்டியளோ.  ஆனாலும் இந்த புலம் பெயர் டமில்சுக்கு யாழ்ப்பாணத்திலை இருக்கிற பெடி பெட்டையள் பியர் அடிக்கிறது பெரிய இடைஞ்சலாய் கிடக்கு. வாட் எ சேம் ..............

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000

சுறுக்கரும் சோலைவரியும்

ஹாய் "கிறாண்ட்"பாஸ் அண்ட் "கிறாண்ட்மா"ஸ்,

( லண்டனிலை இருந்து ஒரு ஆண்டி தங்களை கூப்பிடேலை எண்டு என்னை பிடிச்சு கடிச்சு போட்டா ) சரி....... பிரச்னைக்கு வாறன். சுறுக்கர் ஒரு வீடு வாங்கினவர் கண்டியளோ. சுறுக்கற்றை வீட்டுக்கு கார் பார்க்கிங் செப்பறேற்ராய் ஒப்பின் வெளியிலை இருந்தது. இதாலை இன்கம் ரக்ஸ்காறன் வீட்டுக்கு ஒரு சோலைவரியும், பார்க்கிங்க்கு ஒரு சோலைவரியும் போட்டுகொண்டு வந்தான். ஊரிலை திருக்கை மாட்டு வண்டிலை ஓடித்திரிஞ்ச சுறுக்கருக்கு கார் ஒடப் பத்தியப்படேலை கண்டியளோ. எண்டாலும் தான் பாவிக்காத கார் பார்க்கிங்க்கு சட்டத்தை மதிச்சு ஒழுங்கு முறையாய் சுறுக்கர் சோலைவரி கட்டிக்கொண்டு வந்தவர் பாருங்கோ. உது ஐஞ்சாறு வரியமாய் நடந்து கொண்டு வந்துது.

ஒருநாள் ஒரு சமுசியத்திலை தன்ரை கார் பார்க்கிங் உண்மையிலை இருக்கோ? எண்டு பாக்க அந்த இடத்துக்கு போனன். அட கோதாரி அங்கை ஒரு காரையும் காணேலை. பார்க்கிங் பூட்டிக்கிடக்கு. என்னவாயிருக்கும்? ஒருவேளை வீட்டை வித்த ஏஜென்சி காறார் எனக்கு பினாட்டு அடைஞ்சு போட்டாங்களோ? எண்ட பதகளிப்போடை வீட்டு கார்டியனிட்டை மெல்லிசாய் கதையை விட்டன். அவன் சொன்னான்,

 " உங்களுக்கு விசயம் தெரியாதோ சுறுக்கர்? பார்க்கிங்கை இப்ப கவுன்சில் காறங்கள் எடுத்துப்போட்டாங்கள். இப்ப எல்லாரும் வெளி இடத்திலைதான் கார் பார்க் பண்ணுறவை "எண்டான். "எடே நான் அதுக்கு சோலை வரி கட்டிக்கொண்டு இருக்கிறன். உவங்கள் எனக்கு அறிவிக்கேலை. எப்ப எடுத்தவங்கள்?" எண்டு கேட்டன். அதுக்கு அவன் சொன்னான்," அது இப்ப மூண்டு வாரியத்துக்கு மேலை ஆகுது " எண்டான்.

எனக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்திப்போய் கவுன்சில் காறனிட்ட போய் லோ எடுத்தன். அவன் சொன்னான், 

"நீ சொலைவரி காறனிட்டை போய் நாங்கள் தாற கடிதத்தை குடு. நீ இவ்வளவு காலமும் கட்டின காசை தருவாங்கள்" எண்டு . நான் போய் சோலை வரிகாறங்களிட்டை போய் சொன்னன்,

 "பாவிக்காத ஒரு கார் பார்க்கிங்குக்கு நீங்கள் எப்பிடி சோலைவரி போடேலும்? என்னாலை இனி வரி கட்டேலாது. நான் இவ்வளவுகாலமும் கட்டின வரியை திருப்பி தாங்கோ" எண்டு சொன்னன்.

 அதுக்கு அவை சொல்லுகினம்,

" நீ வீட்டு ப்றோப்பரைட்டர். பார்க்கிங்கை ஊத்தையாய் வைச்சிருக்கிறது. கார் பார்க் பண்ணிறது உன்ரை பிரச்சனை. கவுன்சில் எடுத்ததாய் சொல்லுறாய். அதாலை உன்ரை சோலை வரியை குறைச்சு விடிறம் " எண்டு சொல்லிச்சினம்.

எனக்கு மண்டை கலங்கீச்சுது. பிள்ளையள் நீங்களே சொல்லுங்கோ "பார்க்கிங் பாவிக்கேலாத கொண்டிசன் எண்டு அதை கவுன்சில் எடுத்து போட்டுது. என்னட்டை பாவிக்காத இடத்துக்கு சோலை வரி எண்டு ஆட்டைய போட்டுடாங்கள் இன்கம்ரக்ஸ் காறர். மச்சான் பிறான்சுவா ஹோலாந் இன்னும் ரெணடு வரியத்திலை சுறுக்கரை தேடி வருவியள் தானே? அப்ப இருக்கடி சங்கு..............

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000

சுறுக்கருக்கு ஆப்படிச்ச டமில் மான்

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ,

காத்தாலை சுருக்கருக்கு ஒருத்தன் கொதியை கிளப்பி போட்டான் கண்டியளோ. இண்டைக்கு காத்தாலை நான் வேலையிலை படு மும்மரமாய் இருந்தன். ஒரு எட்டரை போலை எங்கடை டமில்ஸ் கப்பிள்ஸ் சாப்பிட வந்தீச்சினம். எனக்கு தூர கண்டவுடனையே விளங்கீட்டுது, இண்டைக்கு நான் துலைஞ்சன் எண்டு. அப்ப அவை வந்து எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாத்துபோட்டு அலுவலாய் நிண்ட என்னை பிடிச்சு இங்கிலிசுவிலை தங்கடை இன்குவறியை தொடங்கீச்சினம். சுறுக்கர் லேசுப்பட்ட ஆளில்லை கண்டியளோ. அவரும் இங்கிலிசுவிலை மறுமொழி சொல்லி கொண்டிருக்க, இருந்தால் போலை மிஸ்ட்டர் டமில் "நான் சிறிலங்கனோ?" எண்டு என்ரை நேம் பட்ச்சை பாத்துப்போட்டு இங்கிலிசுவிலை கேட்டார். நான் சிரிச்சன். அப்ப அவர் சொன்னார் "தானும் சிறிலங்கன் தான்" எண்டு. சுறுக்கருக்கு வாய் கேக்காமல் "நீ சிறிலங்காவிலை எந்த இடம்?" எண்டு கேட்டார்.அதுக்கு அந்த மிஸ்ட்டர் டமில் சொன்னார் " தான் ஒறிஜின் சிறிலங்கன் பட் ஐ ஆம் ப்ரொம் அவுஸ்த்திரெலியா " எண்டு .அப்ப பாருங்கோ பிள்ளையள்............ சுறுக்கர் கேட்ட கேள்விக்கு அந்த மிஸ்ட்டர் டமில் குடுத்து மறுமொழியை. உங்களாணை கேக்கிறன் எனக்கு உதெல்லாம் தேவையோ?அவை வந்தால் வந்த அலுவலை பாத்து கொண்டு போகவேண்டியது தானே? என்னை கண்ட உடனை விடுப்பு வித்தாரங்கள் பிறகு வந்து சுறுக்கற்றை வாயை கிண்டிப்போட்டு பேந்து எறிசொறி கதையள் கதைக்கிறது . பிளடி பக்கேர்ஸ் .................

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000000000000

ஒரு பெண்போராளி தமிழினி செத்தது சுறுக்கருக்கு கவலையாய் தான் கிடக்கு .என்னெண்டாலும் ஒரு உயிர். அவாவின்ரை ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யிறன். ஆனால் ஒரு டவுட்டு ,சும்மா செத்த ஆக்களுக்கெல்லாம் கண்டமாதிரியெல்லாம் பட்டங்கள் குடுத்தவை இதிலை மட்டும் சைலண்டாய் இருக்கினம் ?? அட்லீஸ்ற் "தேசத்தின் அக்கா" அல்லாட்டில் "தேசத்தின் மூத்த மகள்" எண்டாலும் போட்டிருக்கலாம். எனகெண்டால் ஒண்டுமாய் விளங்கேலை ...............

சுருக்கு சுறுக்கர் 

November 04, 2015

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...