Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 09


தவறணையில் தத்துவ விசாரணை -தேர்தல்



லொக்கேசன் : பருத்தித்துறை (கூவில்)

முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர் ஆகின்றார்.

ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன? 

சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு .

ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் நீ கிறுங்க மாட்டாய் . உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது?

சுறுக்கர் : இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு .

ஐயம்பிள்ளை: அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ?

சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்சான், ஒருத்தனை சனம் எல்லாம் ஒண்டு கூடி ரகசியமாய் வாக்கு போட்டு எங்கடை அடுத்த நாட்டாம்மை நீதான் எண்டு முடிக்கிறது தான் லெக்சன். ஆனால் இப்ப என்னடாவெண்டால் சனங்களை வெறும் மடயராக்கி சனங்களுக்கே தெரியாத முதலாளியளும், பெரிய பெரிய வங்கியளும், வேறை நாடுகளும் தான் எங்கடை நாட்டிரை நாட்டாமையை டிசைட் பண்ணுகினம். இதுகள் விளங்காமல் இங்கத்தையான் சனங்கள் எதோ தங்கடை கோயில் திருவிழா மாதிரி கூடி கும்மியடிக்கிறதும், ஒருத்தனை ஒருத்தன் டக்கால்ட்டி பண்ணுறதும் தாங்கேலாமல் கிடக்கடா ஐயம்பிள்ளை. இல்லாட்டில் எப்பிடி சுமந்திரன் வரேலும் ? சொல்லு பாப்பம்? அதோடை பார் அடுத்த கூத்தை, சிவாஜி லிங்கம் மகிந்தரோடை கேம் கேட்டு கவிண்டு கொட்டிண்டிருக்கிறார். அதோடை கண்டியோ பிள்ளைப் பெறப்போறவள் சும்மா கிடக்க பக்கத்திலை கெல்ப்புக்கு நின்டவள் வயித்து வலியிலை ஊரைக் கூட்டின மாதிரி உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் பட்ட பாட்டை பாத்தியே ? விட்டால் இவையே எங்களுக்கு தமிழ் ஈழம் எடுத்து தந்து போடுவினம் எண்ட மாதிரி பேஸ் புக்கிலை அவையின்ரை டான்சுகள். இங்கை சனம் படுற பாடுகளை பத்தி அவைக்கு அக்கறை இல்லை. தங்கடை குடும்பத்திலை இங்கை இருக்கிறவையை வைச்சு கொண்டு வடக்கு கிழக்கு சனம் எல்லாம் சோக்காய் இருக்கினம் எண்ட நினைப்பு அவைக்கு . இதெல்லாம் எனக்கு பண்டி விசர் கண்டியோ. உதுகள் எல்லாம் சந்தனம் மெத்தின கேசுகள். இல்லாட்டில் சும்மா கிடந்த சைக்கிளுக்கு காத்து அடிச்சு விட்டிருப்பினமே?

அதோடைமச்சான் ஐயம்பிள்ளை, சனம் எல்லாம் இப்ப எல்லாம் வலு முன்னேத்தம் கண்டியோ. அவைக்கு முந்தின மாதிரி அமுதர் மங்கையர்கரசி மாமி, இங்காலை சிவசிதம்பரம் மாதிரி டக்கால்ட்டி பேச்சுகள் எல்லாம் எடுபடாது. என்னத்துக்கு கூட்டத்துக்கு போய் மினைக்கெடுவான் எண்ட நினைப்பு சனத்துக்கு. சனம் எல்லாம் வெள்ளனவே டிசைட் பண்ணிப் போட்டு எல்லாற்றையும் உரு ஆட்டத்தைப் பாத்து சிரிச்சு கொண்டு நிண்டுதுகள். ஆனாலும் மச்சான், மைத்திரி சும்மா இருக்காமல் பொலிஸ் காணி அதிகாரத்தோடையாவது பிரச்சனயை சோட் அவுட் பண்ண வேணும். அதோடை வீட்டுக்காறர் உள்ளுக்கை போய் கடிபடாமல் வெளியாலை நிண்டு மைத்திரிக்கு சப்போர்ட் பண்ணவேணும் கண்டியோ. இதுதான் இண்டையான் சுறுக்கன்ரை தவறணை பேச்சு மச்சான் ஐயம்பிள்ளை .

சுருக்கு சுறுக்கர்

18/08/2015 

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...