Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் -பாகம் 10


சுறுக்கரும் சம்பந்தனும் 



விடியக்காலமை குளிச்சு முழுகி நெத்தியிலை பெரிய சைசிலை திருநூறும் பூசி வீட்டு முன்விறாந்தையிலை இருந்த ஈசி செயரிலை ரெண்டு காலையும் கிழிச்சு போட்டுக்கொண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை உதயன் பேப்பர் பாத்துக் கொண்டு இருக்கிறார் .பனைக்கருக்காலை செய்த படலை திறந்து கேட்டது ஐயம்பிள்ளை அரைக்கண்ணாலை படலையை பாக்கிறார் சுறுக்கர் லைட்டான தள்ளாட்டத்தோடை என்றியாகிறார் . இனி .....

00000000000000000000000

சுறுக்கர்: மச்சான் ஐமிச்சம் என்னடாப்பா.......... எல்லா மாடும் ஒடீச்சுதெண்டு பாத்தால் சுப்பற்றை கொல்லைக்குள்ளை நிண்ட பேத்தை மாடும் ஒடீச்சுதாம் எண்ட கணக்காய் பேப்பர் படிச்சு கொண்டிருக்கிறாய் .

ஐயம்பிள்ளை: உங்களுக்கு என்னோடை தனகாட்டில் பத்தியப்படாதே சுறுக்கர் .

சுறுக்கர்: சரி....... சரி ......... உன்னோடைதானே தனகலாம் எல்லாரோடையும் செய்யேலுமே . என்ன பேப்பரிலை அவதியாய் படிக்கிறாய் ?

ஐயம்பிள்ளை: உங்களுக்கு விசயம் தெரியாதே? சம்பந்தர் எல்லோ எதிர்கட்சி தலைவராய் போட்டார் . உங்களுக்கு ஏதாவது எத்துப்படுதே ?

சுறுககர்: எனக்கு எத்துப்படுகிறது இருக்கட்டும் உனக்கு என்ன விளங்கினது அதை சொல்லு ?

ஐயம்பிள்ளை: என்ன அண்ணை விளையாடுறியள்? நான் ஐமிச்சத்துக்கெண்டே பிறந்தனான். எனக்கு உதெல்லாம் விளங்காது. நான் சும்மா பொழுதுபோக எழுத்து கூட்டி படிச்சு கொண்டிருக்கிறன். 

சுறுக்கர்: சரி அடம் பிடிக்கிறாய். எனக்கு உன்னாலைதான் இண்டைக்கு சனியோ தெரியாது. காலமை தவறணையிலை உதைப்பத்தி புசத்தினவங்கள்தான். உதைப்பத்தி எடுத்து விடு மச்சான் எண்டு கூட்டாளியளும் கேட்டவங்கள் தான். 

இப்ப............... 77 க்கு பிறகு ஒரு தமிழ் ஆள் எதிர்கட்சி தலைவராய் வந்திருக்கிறார் எண்டால் இலங்கையின்ரை பரிசுகேட்டை பாரன் . முதலாவது ஆள் அமுதர். அதுக்கு பிறகு சம்பந்தர். இதுக்கு கிட்டமுட்ட 38 வரியம் செண்டிருக்கு .அமுதர் அவற்றை பெஞ்சாதி சனத்துக்கு முன்னாலை தங்கடை நெத்தியிலை ரத்தப் பொட்டு வைச்சு பெடியளை ஜூவால் ஏத்தி நோகாமல் நொங்கு எடுத்தீச்சினம். இப்ப சம்பந்தர் வந்திருக்கிறார். அவற்றை அசுமாத்தத்தை பாத்தால் பழையபடிக்கு கோட்டு சூட்டு போட்ட ஜென்டில்மன் அரசியல் தான் செய்யப்போறார் போலை கிடக்கு. தன்ரை கூட்டிலை இருந்த இயக்கத்திலை இருந்து வந்து சவுண்ட் விட்ட பார்ட்டியள் எல்லாரையும் காய் வெட்டி போட்டார். மிச்சம் இருக்கிறது நம்ம சித்தார்த்தன் தான். ஆனால் ஒண்டு மச்சான்............ தமிழன்ரை பிரச்சனை முதல் அகண்ட தேசமாய் இருந்து, பேந்து வடக்கு வேறை கிழக்கு வேறையா போய் , பேந்து மாகாண சபையாய் போய் , இடையிலை ஒரு நாடு  ரெண்டு தேசம் எண்டு வந்து ,  இப்ப பார்லிமன்றிலை எதிர்கட்சி தலைவராய் கட்டெறும்பாய் போய் நிக்குது.

இருந்து பார் இன்னம் கொஞ்ச காலத்திலை "யாப்ப கடுவா" இல்லையெண்டால் "யாப்பா பட்டுணா" எண்டு பேர் மாத்துவாங்கள். பேந்தென்ன அகண்ட தமிழீழம் "யாப்ப பட்டுணா" வாய் போடும். கேட்டால் சமஸ்ட்டி எண்டுவாங்கள் எங்கடை ஜென்டிமன் பொலிற்றிசியன்ஸ். சரி மச்சான் ஐயம்பிள்ளை நான் வரப்போறன். 

சுருக்கு சுறுக்கர் 

September 03, 2015

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...