Skip to main content

பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும்



என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட .. இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  நேரடியான வருகையுமே .

இந்த நிகழ்வை புறக்கணித்த அந்த சில நண்பர்கள், நிகழ்வுக்கு நேரடியாக வந்து என்னென்ன காரணங்களுக்காக இதை புறக்கணிக்கின்றோம் என்று ஓர் துண்டுப் பிரசுர வாயிலாக சொல்லியிருந்தால் அந்தப் புறக்கணிப்பு உண்மையில் அர்த்தமுடையதாக இருந்திருக்கும். இதுவே இலக்கியப்பரப்பில் உள்ள அறமுமாகும். இறுதியில் அவர்களது புறக்கணிப்பானது ஐந்து பேர் கூடியிருந்து ஈர் பேன் பார்த்து பரஸ்பரம் முதுகு சொறிதலிலேயே முடிந்துவிட்டது. தங்களது கருத்துக்களை பொதுவெளியில் சொல்வதற்கு தில்லும், தினாவெட்டும் இல்லாத இவர்கள் இனி வருங்காலங்களில் பாரிஸ் இலக்கியப்பரப்பில் இலக்கியம் பற்றி பேசுவதற்கு எதுவித அருகதையும் யோக்கியத்தையும் அற்றவர்களாகின்றர். அத்துடன் ஆயுத எழுத்துக்கு அருகிலே ஆக்காட்டி எட்டாவது இதழும் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் ஆக்காட்டி தலைமை ஆசிரியர் மற்றயவர்களுடன் சேர்ந்து ஈர் பேன் பார்த்துகொண்டு பரஸ்பரம் முதுகு சொறிந்தது ஆக்காடியின் பறப்பின் மீதான சந்தேகங்களை ( ஓர்  குறிப்பிட்ட தளத்தின் கைப்பொம்மையாக மாறுதல் ) வலுப்படுத்துகின்றது . மேலும், ஆயுத எழுத்து நாவலானது யாழ்ப்பாணத்தில் மட்டுமே பலத்த ஆதரவுடன் பல்வேறு தளங்களில் இருந்து வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பில் வெற்றிகரமாக நடந்தது . அங்கு இருக்கின்ற நாகரீகத்தை கடக்க புலம்( ன் ) பெயர்ந்தவர்களுக்கு நீண்டகாலம் .எடுக்கும் போல் தெரிகின்றது. இந்த ஐந்தாறுபேர் இல்லாவிடிலும் நிகழ்வு உண்மையான இலக்கிய ஆர்வலர்களுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. நன்றி

பிற்குறிப்பு :

எனது நிகழ்வுக்காக இவர்கள் வரவில்லையே என்ற காழ்புணர்வில் எழுதப்பட்ட ஓர் நிலைத்தகவல் இல்லை. இலக்கியப்பரப்பில் உள்ள வறுமை நிலையில் உள்ள இவர்களது பார்வையை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

கோமகன்

25 ஐப்பசி 2015

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...