Skip to main content

அரசியலும் எழுத்தும்



எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது. அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது. எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை. ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, "எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை" என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது. கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, "நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்" என்று சொல்ல முடியுமா? சாத்திரியோ ,சயந்தனோ, குணா கவியழகனோ, ஷோபா சக்தியோ வேறானவர்கள். தனிப்பட்ட குணாம்சம் உள்ளவர்கள். அவர்களது படைப்புகள்தான் பேசப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் இல்லை.

நான் அண்மையில் புலோலியூரானை முகடு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் அரசியல் வெடிலை அள்ளி வீசியது. அதில் புலோலியூரான் தனது நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார். இது தேசிய கோப்பிசங்கள் ,சிலாகையள், தீராந்தியள், ஆணியள் போன்றோருக்கு இடியாக போய் விட்டது. உடனே சிவா ஏரம்பு என்ற தேசியம் என்னை ஈ பி டீ பி என்று சேறடிக்கின்றது.

ஒரு படைப்பை வாசிக்கின்ற வாசகன் அதில் முரண்கள் இருந்தால், அந்த படைப்புக்கு வாசகனானவன் பொது வெளியில் விமர்சனம் அல்லது எதிர்வினை வைக்க வேண்டும். அதுவே இலக்கிய மரபு. அதை விடுத்து எழுதியவரின் மீது வசைபாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனாலேயே நான் யாழ் இணையத்தை விட்டு விலக வேண்டி வந்தது. சிவா ஏரம்புவுக்கு கவிஞர் கருணாகரன் சொல்லியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் "பொதுவெளி என்பது துடக்குப் பார்க்கும் இடமல்ல ". உங்களுக்கு நேர்காணலில் முரண்கள் இருக்கா? நேரிடையாக முகடு சஞ்சிகைக்கு உங்கள் எதிர்வினையை வையுங்கள். அவர்கள் பிரசுரம் செய்வார்கள். அதுவே எழுத்து அறமாகும். அதை விடுத்து எனது நதிமூலம் ஆராய வேண்டாம்.

நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...