Skip to main content

சமகாலத்தில் திருநங்கைகளின் இருப்பு





அண்மையில் ஊடறு அமைப்பினர் கிழக்கிலங்கையில் ஏற்பாடு செய்திருக்கும் பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் பார்க்க கிடைத்தது. அதுதொடர்பான வாதப்பிரதி வாதங்களும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இதைப்பார்த்த பொழுது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றின. அவை சில வேளைகளில் பெண்ணியவாதிகளின் பார்வையிலோ அல்லது நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரது பார்வையிலோ தவறாகத் தெரியலாம். இல்லாது போனால் சரியாகவும் படலாம். ஆனால் இந்தப்பகிர்வின் மூலம் ஒரு புதிய பார்வைகள் கிடைக்குமானால் சந்தோசமே! இல்லாதுவிடின் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதேவேளையில் இந்தப்பதிவை "ஆண்மையவாதச் சிந்தனைச்சிதறல்களின் தொடர்ச்சி" என்ற குடுவையினுள் பூட்டி வைக்காது பொதுவாக உரையாடுவது சிறந்தது என எண்ணுகின்றேன்.

எமது முன்னைய அரசர்கள் மற்றும் சக்கரவர்த்திகள் தங்கள் அந்தப்புரத்துக் காவலுக்கு ஆண் காவலாளிகளை நம்பாது அவர்கள்மீது சந்தேகக்கண் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் திருநங்கையரை காவலாளிகளாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அன்றைய கால கட்டத்தில் திருநங்கையரின் சமூக இருப்பு எத்தகைய இழிநிலையில் இருந்தது என்பது தெளிவாகின்றது. சமகாலத்து மேற்குறிப்பிட்ட நிகழ்விலும் நிகழ்வின் முதல்நாள் "திருநங்கைகள் மட்டும்தான் வரலாம்" என்று பகிரங்கமாக அழைப்பிதழில் அழைப்பு விடுவது திருநங்கையரின் இருப்பைக் கேவலப்படுத்தவில்லையா? அன்றும் நிலக்கிழார்களான அரசர்கள் தங்கள் அந்தப்புரத்துக்கு ஆண்களில் நம்பிக்கை கொள்ளாது திருநங்கையரை காவலாளிகளாக வைத்து அவர்களை கேவலப்படுத்தினார்கள். ஆனால் இன்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புதுமை செய்கின்றோம் என்ற பெயரில் திருநங்கையரது இருப்பைக் கேவலப்படுத்துவதாகவே உணர்கின்றேன். சுருங்கச் சொல்லின் அன்றய அரசர்களுக்கும் இன்றய நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிந்தனை வளர்ச்சியில் எந்த முன்னேற்றத்தையும் என்னால் உணர முடியவில்லை. என்னைப்பொறுத்தவரையில் இப்படியான தனி அடையாளப்படுத்தல்களை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தவிர்த்திருக்கலாம் என்பதே!

கோமகன்

10/09/2018

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...