Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்-அழுக்காறாமை-Not Envying-Ne pas envier -161-170


ஒழுக்காறாக் கொள்க ; ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 161

ஒருவன் தனது நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாதிருத்தலைத் தனக்குச் சொல்லப்பட்ட ஒழுக்க நெறியாகக் கொள்ளக் கடவன்.

எனது கருத்து :

எனக்கு உது சரிப்பட்டுவரும்போலை தெரியேலை ஏனென்றால் இப்பிடி எரிச்சல் பொறாமை இல்லாத இனமாய் எங்டை சனம் இருந்திதுஎண்டால் நாங்கள் எப்பவோ எங்கேயோ போயிருப்பம்

As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind.
Que l’on considère l’absence de l’envie eomme le chemin de la moralité. 

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். 162

ஒருவன் எவருடத்திலும் பொறாமை கொள்ளாத பெருந்தன்மை பெறுவானாயின் , அவனுக்கு அதைவிடச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.
எனது கருத்து :

உங்களிட்டை எரிச்சல் பொறாமை மட்டும் இல்லையெண்டு வையுங்கோ அதுதான் உலகத்தில பெரிய சிறப்பு அப்பிடியும் ஆக்கள் இருக்கத்தான் செய்யினம்

If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth.
L’absence de l’envie envers qui que ce soit est de tous les Biens supérieurs, celui qui n’a pas d’égal. 

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான். 163

பிறரது செல்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடையாமல் அதற்காகப் பொறாமைப்படுவன் அறத்தையும் செல்வத்தையும் இழந்தவனாவான் .

எனது கருத்து :

மற்றவையின்ரை உயர்வக்கண்டு எரிச்சல் பொறாமையால மனசார மகிழாதவன் தான் செய்யிற அறங்களால வாற புண்ணியத்தையே வேண்டாம் எண்டு சொல்லிற நிலையில இருப்பான் எண்டு ஐயன் சொல்லுறார்

Nor wealth nor virtue does that man desire 'tis plain, Whom others' wealth delights not, feeling envious pain.
Celui qui envie le bonheur d’autrui sans s’en réjouir, ne désire pas, dit-on, la vertu (pour le ciel) et la richesse (pour ici-bas). 

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 164

அறிவுடையார் பொறாமை காரணமாகத் தமக்குத் துன்பம் உண்டாதலை அறிந்து அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார் .

எனது கருத்து :

ஒருத்தரில எரிச்சல் பொறாமை கொண்டால் துன்பம் தான் முடிவு . இதை படிச்ச சனம் ஒருக்காலும் செய்யாது

The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the cause.
Sachant la douleur causée par l’envie (au ciel comme sur la terre) que l’on s’abstienne de faire, par envie, les actes contraires à la vertu.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ; ஒன்னார்
வழுக்காயும் கேடுஈன் பது. 165

பொறாமையானது பகைவர் இல்லாமல் இருந்தும் கேட்டை விளைவிப்பதாகும் . ஆதலால் அப்பொறாமை உடையவர்க்கு அப்பொறாமையே துன்பத்தையே தரும் .

எனது கருத்து :

உங்களிலிலை ஒரத்தர் எரிச்சல் பொறாமையில இருக்கிறார் எண்டு வையுங்கோ . அவருக்கு நீங்கள் ஒரு செய்வினைசூனியமும் செய்யத்தேவையில்லை அந்தப் பொறாமையே அவரை முடிச்சுப்போடும் .

Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate.
La nature de l’envie est de causer le mal sans la participation des ennemis; l’envie à elle seule suffit donc pour (consommer la ruine de) l’envieux.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். 166

ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதைக் குறித்துப் பொறாமைப்படுபவரது உறவினர்கூட உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாமல் அழிவர் .

எனது கருத்து :

நீங்கள் ஒருத்தருக்கு குடுக்கறதைப் பாத்து உங்களில எரிச்சல் பொறாமைப்படுகிறவையும் , அவையின்ரை குடும்பம் சுத்துப்பட்டியுமே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சொறிநாயைவிடக் கேவலமாய் தெருவில திரிவினம் எண்டு ஐயன் சொல்லுறார் .

Who scans good gifts to others given with envious eye, His kin, with none to clothe or feed them, surely die.
La parenté de celui qui envie ce qui est donné à autrui, périra, faute de nourriture et de vêtement.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 167

பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமை கொள்பவரைத் திருமகள் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காண்பித்து அவரை விட்டு நீங்கி விடுவாள்

எனது கருத்து :

மற்றவையின்ரை உயர்வையும் புகழையும் கண்டு எரிச்சல் பொறாமைப்படுகிறவையைப் பாத்து சீதேவி அக்கா ரென்சனாகி தன்ரை தமக்கை மூதேவியிட்டை அவையைப் பொறுப்புக் குடுத்துப் போட்டத் தன்ரை பாட்டில போய்க்கொண்டிருப்பாவாம் .

From envious man good fortune's goddess turns away, Grudging him good, and points him out misfortune's prey.
La déesse (de la Fortune) envie les envieux, les indique à sa sœur aînée (déesse de la Misère) et se sépare d’eux. 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். 168

பொறாமை என்னும் பாவ குணம் தன்னைக் கொண்டுள்ளவரை இம்மையில் செல்வத்தை அழித்து மறுமையில் அவரைத் தீய வழியில் சேர்த்துவிடும்

எனது கருத்து :

ஆரிட்டை இந்தப் பொறாமை எண்ட கெட்ட கிரிமி இருக்கோ அவையின்ரை செலவங்களையெல்லாம் அழிச்சு கடைசியில நரகத்தில கொண்டுபோய் தள்ளிப்போடுமாம்

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain.
Le vice sans égal appelé envie ruine la fortune de celui qui l’a et le précipite dans l’enfer. 

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169

பொறாமையுடையவனிடத்துப் பொருந்தியுள்ள செல்வமும் , பொறாமையற்று செம்மையாக இருப்பவனிடத்துள்ள வறுமையும் ஆராய்ந்து அறியப்படும் .

எனது கருத்து :

உண்மையான மனிசரெண்டால் பொறாமைக் குணம் கொண்டவனின்ரை உயர்வையுமும் அது இல்லாதவையின்ரை தாழ்வையும் பற்றி ஆராஞ்சு ஒரு முடிவுக்கு வரவேணும்

To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
La prospérité de l’envieux et la misère du généreux sont matière à étonnement. 

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170

பொறாமைப்பட்டுப் புகழோடு புவியில் வாழ்ந்தவரும் இல்லை பொறாமை இல்லாமையால் புகழும் பெருமையும் இன்றி வறுமையுற்றவரும் இல்லை

எனது கருத்து :

கடைசில இப்பிடி ஒரு வரைவிலக்கணத்தை ஐயன் தாறார் எப்பிடியெண்டால் இந்தப் பொறாமைக் குணத்தாலை வாழ்க்கையில உயர்ந்தவையும் இல்லையாம் இந்தக் குணம் இல்லாதவை வாழ்க்கையில தாழ்ந்து போனதாய் சரித்திரம் இல்லையாம்

No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain.
Il n’y pas d’envieux qui aient prospéré, il n’y a pas non plus de généreux qui se soient ruinés.




Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...