Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்-வெஃகாமை-The Not Speaking Profitless Words - Ne pas convoiter-171-180


நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும். 171

நடுவு நிலமை இல்லாமல் பிறர் பொருளை அபகரிக்க விரும்பினால் , அவ்விருப்பம் , அவனது குடியைக் கெடுத்து , பல தீமைகளையும் அப்போதே கொடுக்கும் .

எனது கருத்து:

இதுக்கு நல்ல உதாரணம் எங்கடை அரசியல்லையே இருக்குது. பண்டாரநாயக்கா குடும்பம் , நாங்கள் இண்டைக்கு நடுறோட்டிலை நிக்கிறதுக்கே அவையின்ர குடும்பம்தான் முழுக்காரணம் . ஆனால் இண்டைக்கு அந்தக் குடும்பத்தின்ரை நிலமை சொல்லி வேலையில்லை . இதைத்தான் ஐயனும் தன்ரை மொழியிலை சொல்லுறார்.

With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door.
convoiter le bien d’autrui, sans penser que l’on abandonne la voie de la vertu, ruine la famille et fait commettre bien des péchés. 

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவுஅண்மை நாணு பவர். 172

நடவு நிலமை தவறினால் வரும் இழிவுக்கு அஞ்சுபவர் , பிறர் பொருளை அபகரித்துக் கொள்வதாகிய இழிசெயலச் செய்யமாட்டார்.

எனது கருத்து:

இப்பிடிப்பட்ட ஆக்களை இந்தக் காலத்தில பாக்கிறது முயல்க்கொம்பு. நீதி நியாயம் இல்லாமல் நடக்கிறதுதான் கௌரவம் எண்டு சனங்கள் நினைக்கிற கேடுகெட்ட காலம்தான் இப்ப நடக்கிது .

Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing.
Celui qui craint le péché ne se livre pas à des actes méprisables, par la seule considération du profit. 

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். 173

நீதிவழி நிலையான இன்பத்தை விரும்பவோர் , நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யார் .

எனது கருத்து:

எப்பவும் நேர்மையான தேட்டங்கள்தான் சுவறும். கள்ளமாய் வாற எந்தப் பொருளும் சுவறாது. மனச்சாட்சிக்குப் பயந்த சனங்கள் இப்பிடி மொள்ளமாரி வேலையள் செய்யமாட்டினம் .

No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire.
Qui aspire au bonheur céleste ne commet pas des actes non vertueux, dans le désir de la faible satisfaction procurée par le vol. 

இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர். 174

ஐம்புலன்களையும் வென்ற நல்லறிவினுடைய சான்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகப் பிறர் பொருளை விரும்பமாட்டார்.

எனது கருத்து:

"ஐஞ்சு புலன்களை வெண்டவன் எந்தக் கஸ்ரத்திலயும் மற்றவையின்ரை சாமானுகளை விரும்பமாட்டான் " எண்டு ஐயன் சொன்னாலும் , பணம் எண்டால் பிணமும் வய் திறக்குமாம் எண்ட சொலவடையும் மண்டையுக்கை ஒருபக்கத்தாலை அடிச்சுக்கொண்டுதான் இருக்கு .

Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need.
Les innocents qui sont assez intelligents pour vaincre les sens, ne convoitant pas le bien d’autrui, parce qu’ils sont pauvres.

அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 175

பிறர் பொருளைக் கவர எண்ணி அறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்பவர் , எவ்வளவு நுட்பமான அறிவு இருந்தாலும் அவ்வறிவால் ஒரு பயனும் இல்லை .

எனது கருத்து:

எவ்வளவுதான் படிச்சு பட்டம் பெற்று பெரிய அறிவாளியளாய் இருந்தாலும் , இன்னுமொருத்தற்ரை பொருளுகளுக்கு ஆசைப்பட்டு கேடுகெட்ட வேலையள் செய்யவெளிக்கிட்டால் , அவையைச் சனங்கள் சொறிநாயை விடக்கேவலமாத் தான் மதிப்பினம் .

What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn?
Aquoi sert la vaste connaissance acquise, grâce à une fine intelligence dans les savants ouvrages, si par esprit de cupidité, on se livre envers tout le monde, à des actes condamnés par cette connaissance.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக்கெடும். 176

அருளாகிய அறத்தை விரும்பி அவ்வறத்தின் வழியாகிய இல்லறத்தில் நின்றவன் பிறர் பொருளை விரும்பிக் குற்றமான வழிகளை எண்ணினால் அழிந்து போவான்.

எனது கருத்து:

இந்தக் குறளுக்கு கன உதாரணங்களைச் சொல்லலாம் . முக்கியமாய் எங்கடை சர்வவல்லமை பொருந்திய ராவணன் ஒரு நல்ல உதாரணம்.

Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong.
Qui aspire à la Grâce et vit dans la famille sera ruiné, si convoitant le bien d’autrui, il cède à de mauvaises pensées. 

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன். 177

பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து அனுபவிக்கும் போது அப்பொருளினால் வரும் பயன் மேன்மையைத் தராது அதனால் பிறர் பொருளை விரும்பலாகாது .

எனது கருத்து:

இராவணன் எப்பிடிப்பட்ட சுத்தவீரன் எண்டு உங்களுக்கே தெரிஞ்சவிசையம். கடைசீல ஒரு பொம்பிளைப் பிரைச்சனையாலை ( சீதையைக் கைவைச்சதாலை ) இந்தியா படையெடுத்து வந்து இராவணனை அட்ரஸ் இல்லாமல் பண்ணிப்போட்டாங்கள். லங்காபுரியும் அவனிட்டை இருந்து போய் பெரிய துன்பப்பட்டுப்போனான். இதிலை இருந்து உங்களுக்கு என்ன விளங்குது 

Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.
Ne désire pas la richesse amassée avec cupidité, ses fruits ne sont pas bons, quand on en jouit.

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 178

உன்னுடைய செல்வம் குறையாதிருக்க நீ விரும்பினால் பிறர் பொருளைக் கவர விரும்பாதே

எனது கருத்து:

மற்றவையின்ரை பொருளுகள் சொத்துப்பத்துக்களை ஆட்டையைப்போட்டால் , உங்களிட்டை இருக்கிற செல்வமும் இல்லாமல் போய்விடுமாம் .

What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine!
La cause qui empêche la richesse de s’amoindrir c’est, quand ou l’examine, ne pas convoiter l’objet désire par le prochain. 

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு. 179

பிறர் பொருளை விரும்பாதிருத்தலே அறம் என்று கருதி ஒழுகும் அறிவுடையாரைச் சேர்தற்குரிய உபாயத்தை அறிந்து திருமகள் தானே சென்றவாள்.

எனது கருத்து:

நீங்கள் மற்றவையின்ரை சாமானுகளை விரும்பாமல் இருந்தாலே உங்களிட்டை இருக்கிற செல்வம் கூடுமாம் .

Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.
La déesse (de la Fortune) juge digne de ses dons, celui qui a assez d’intelligence pour ne pas convoiter, et habitat sa maison. 

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அக்கருத்து அவனுக்கு அழிவைத் தரும் . விரும்பாமை என்னும் எண்ணம் அவனுக்கு வெறியைத்தரும் .

எனது கருத்து:

தேவையில்லாமல் இராவணன் சீதையில கைவைக்கப் போய் கடைசீல நாட்டையே இழக்கவேண்டி வந்தது. ஆனால் சுக்கிரீவன் ராமனிட்டை நட்பை நாடினவன் கடசீல அவனுக்கு நாடே கிடைச்சிது.

From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.
La convoitise (dont on ne pèse pas conséquences) cause la ruine; l’absence de convoitise qui est une richesse, donne le succès.










Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...