Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் விருந்தோம்பல்- Cherishing Guests-L’hospitalité-81-90



இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. 81

மனைவியோடு வீட்டில் இருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கையெல்லாம் வந்த விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் .

எனது கருத்து :

வீட்டில புருசனாய் இருக்கிறவன் நாலு பொருள் பண்டம் சேர்க்கவேணும் . அது கட்டாயம் செய்யவேணும் . அது ஏன் எண்டால் வாற விருந்தாளியளை வரவேற்று உபசரிக்கத் தான் .

All household cares and course of daily life have this in view.Guests to receive with courtesy, and kindly acts to do.

C’est pour bien accueillir les hôtes et leur être utiles, que l’on vit avec son épouse dans la maison familiale et que l’on converse les Biens.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82

ஒருவன் தான் உண்பது சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்தினர் புறத்தே இருக்கத், தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது .

எனது கருத்து :

நீங்கள் வீட்டில நஞ்சைத் தான் தின்னுங்கோ . ஆனால் விருந்தளியள் இருக்கேக்கை , கூடவே கூடாது . அது நொட் நைஸ் .

Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Goûter même le breuvage qui donne l’immortalité, en laissant les hôtes hors la maison est un acte indésirable.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 83

தன்பால் வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றி வருபவனது இல்வாழ்க்கை வறுமைத் துன்பதால் வருந்திக் கெடுவதே இல்லை.

எனது கருத்து :

இந்தக் குறள் எனக்கு கொஞ்சம் இடிக்குது விருந்தாளியளை கவனிக்கிறது சொந்த பந்தம் கூடும் எண்டு நல்ல விசையம் தான் . ஆனா , இது வள்ளுவற்றை காலத்திலை ஓக்கேயாய் இருக்கலாம் . இண்டையான் நிலமைல டெயிலி விருந்தாளிகளை கூப்பிடிறது எண்டால் எங்கை போக?

Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share.

Le chef de famille qui, honore tous les jours, les hôtes qui viennent à lui, ne souffre pas de la misère et ne se ruine pas.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். 84

நல்ல விருந்தினரை முகமலர்சியோடு போற்றுபவனது இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்

எனது கருத்து :

நாங்கள் சிலபேற்ரை வீட்டை போனால் அவைன்ரை வாய்தான் சொல்லும் வாங்கோ எண்டு . ஆனா செய்கையள் , எப்பிடிக் காய்வெட்டாலாம் எண்டு தான் யோசிப்பினம் . நாங்கள் திரும்பிற நேரம் பாத்து முழைங்கையிலை பிடிப்பினம் நிண்டு சாப்பிட்டிட்டுப் போங்கோ எண்டு . ஆனால் அப்பிடி இல்லாமை உண்மையில வாற விருந்தாளையள நல்லா குளிரப் பண்ணி அனுப்பினால் , உங்கடை வீட்டில செல்வ லெட்சுமியக்கா சந்தோசமாய் குடியிருப்பாவாம் .

With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

La déesse (Latchoumi) habite avec plaisir la maison de celui qui accueille et honore avec la mine rejouie, les hôtes dignes.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். 85

விருந்தினரை முன்னர் உண்பித்து எஞ்சியதைப் பின்பு தான் உண்டு வாழ்பவனுடைய விளைநிலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமா ? வேண்டா தானே விளையும்

எனது கருத்து :

கிணத்தை இறைக்க இறைக்கத் தான் ஊறும் எண்டு சொல்லுவினம் எங்கடை பெரிசுகள் . அதைமாதிரித்தான் வாற விருந்தாளியளை உபசரிச்சு அவையை வயிறு குளிரப்பண்ணறதை தொடந்து செய்து கொண்டு வாங்கோ, உங்கடை வயல்லை விதைக்கத் தேள்வையில்லை, பயிர்பச்சை ஏதோ ஒரு வழியிலை தொடந்து வரும் எண்டு ஐயன் சொல்லுறார் .

Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise.

Les champs de celui qui satisfait d’abord les hôtes et ne prend que la nourriture qui reste, ont-ils besoin d’être ensemencés.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. 86

இப்பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பாரத்திருப்பவன் மறுமையில் தேவனாய் வானுலகில் வாழும் தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான் .

எனது கருத்து :

நீங்கள் இப்பிடியெல்லாம் ஒழுங்காய் நடந்து கொண்டு வந்தால் , உங்கடை மரணத்துக்குப் பின்னால தேவலோகத்தில நீங்கள் தான் வி ஐ பி எண்டு சொன்னாலும் , ஒருத்தன் உயிரோடை இருக்கேக்கை கிடக்காத அங்கீகாரமும் புகழும் அவன் செத்தாப் பிறகு தேவலோகத்தில கிடைச்சு என்ன பயன்?

The guest arrived he tends, the coming guest expects to see;To those in heavenly homes that dwell a welcome guest is he.

Celui qui, après avoir servi les hôtes qui sont arrivés, en attend d’autres pour manager avec eux, devient un hôte honorable pour les habitants du Ciel.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். 87

விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும் .

எனது கருத்து :

வீட்டுக்கு வாறவை ஏழையோ பணக்காறனோ விருந்தாளி எண்டு வந்தால் , ஒரே அளவான விருந்தோம்பலைத் மனிசனாய் பிறந்தவன் செய்யவேணும் . ஆனால் ஐயன் தகுதிதராதரம் பாத்துசெய்தால் விருந்தோம்பலின்ரை பலன்களும் வேறுபடும் எண்டிறார் . சம்திங் றோங்........

To reckon up the fruit of kindly deeds were all in vain;Their worth is as the worth of guests you entertain.

Il n’y a pas de mesure pour évaluer le mérite de l’acte hospitalier. Seul l’honorabilité de l’hôte est la mesure du sacrifice.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். 88

விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர், பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்ரவரானோம் என்று பின்னர் வருந்துவர் .

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் பெரிய காசுக்காறராய் இருப்பினம். வைச்சிருந்தும் என்ன பிரையோசனம் ??? சாப்பிட்ட கையாலை காகம் கலைக்க மாட்டினம், அவ்வளவு ஈச்சாப்பியள் . இவையளை அறிவிலியள் எண்டும் பேந்து பின்னாலை கவலைப்படுவினம் எண்டு இவைக்கு ஒரு குட்டும் வைக்கிறார் .

With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,Who cherish not their guests, nor kindly help supply.

Ceux qui ne pratiquent pas l’hospitalité et ne savent pas gagner le mérite de ce sacrifice, se plaindront un jour d’avoir perdu la richesse qu’ils ont acquise et jalousement conservée.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 89

செல்வ நிலையிலும் வறுமை என்பது , விருந்தோம்பாத அறியாமையாகும் . அது அறிவுடையாரிடம் உண்டாகாது. அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.

எனது கருத்து :

நாங்கள் எங்கடை வாழ்க்கையில சிலபேரைப் பாத்திருப்பம் . நல்ல வசதியாய் இருப்பினம் . ஆனால் , நெடுக பஞ்சப்பாட்டுப் பாடிக்கொண்டிருப்பினம். எங்கை தங்களிட்டை ஐஞ்சைப் பத்தைக் கேட்டுப் போடுவினம் எண்டு .இவையள் மறந்தும் எங்களை தங்கடை வீட்டை கூப்பிட மாட்டினம். இப்பிடியான குணங்கள் மூடரிட்டை மட்டும் தான் இருக்குமாம்.

To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless found.

Le malheur de ceux qui possèdent, c’est le sot dédain du devoir de l’hospitalité: et ce malheur est le lot des ignorants.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. 90

அனிச்சமலர் நுகர்ந்தபொழுதே வாடிவிடும் . ஆனால் , விருந்தினர் முகம் மாறுபட்டுப் பார்க்கின்ற அளவிலேயே வாடி விடுவர்.

எனது கருத்து :

வீட்டுக்கு வாற விருந்தாளியளை நீங்கள் முழங்கையில பிடிச்சுக் கொண்டு அவையளை விருந்தோம்பல் செய்தியள் எண்டால் , அனிச்சம் பூ போல அவைன்ர முகம் வாடிப் போயிடும் எண்டு ஐயன் சொல்லுறார் .

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail. 

La fleur ‘‘Anitsa’’ se flétrit lorsqu’on la sent. Ainsi le visage des hôtes pâlit, lorsqu’on les regarde d’un regard farouche.
















Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம