அறத்துப்பால்-இல்லறவியல் பிறன்இல் விழையாமை- Not coveting another's Wife- Ne pas convoiter la femme d’autrui-141 -150
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141
அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை , உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது.
எனது கருத்து :
எல்லா அறத்தையும் பொருளையும் கரைத்துக் குடிச்சாக்களிட்டை பிறன் மனைவியை விருப்பம் கொள்ளுற குணம் இல்லை எண்டு ஐயன் சொன்னாலும் ,இந்த இந்திரன் ஏனப்பா அகலிகையிட்டை அதுவும் மாறுவேசத்திலை போனவர்?
Who laws of virtue and possession's rights have known, Indulge no foolish love of her by right another's own.
L’homme qui a étudié les traités de la vertu et de la richesse ne commet pas la sottise de convoiter le femme, qui est le Bien du prochain.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142
அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும் , பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை .
எனது கருத்து:
மற்றவையின்ரை மனுசியை அடையவேணும் எண்டு நினைச்சுக் கொடுக்குக் கட்டிறவை கடைநிலை மனிசரை விடக் கேவலமானவையாம். ஆனால் இப்ப நாங்கள் பாக்கிற பிரபலங்கள் எல்லாம் தலைகீழாய் எல்லோ நிக்கீனம்.
No fools, of all that stand from virtue's pale shut out, Like those who longing lurk their neighbour's gate without.
Parmi tous les pécheurs, il n’y a pas de plus sot que celui qui poussé par l’amour, se tient près de la porte du voisin.
விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்துதுஒழுகு வார். 143
சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியை விரும்புதலாகிய தீமையைச் செய்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.
எனது கருத்து :
வீட்டிலை ஆக்களை அடுக்கிறதில வலுகவனமாய் இருக்கவேணும் . நம்பி விகற்பமில்லாமல் விட்டால் , முதலுக்கே நாசம் செய்வினம் சிலபேர் . அவை செத்த சவத்துக்குச் சமன் எண்டு ஐய்யன் இதில ஒரு பிடி பிடிக்கிறார்.
They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise.
Celui qui désire pécher avec la femme d’un homme qui est convaincu de son innocence, ne se distingue guère du cadavre.
எனைத்துணையர் ஆயினும் என்ஆம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல். 144
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறருடைய மனைவியிடம் செல்லுதல் எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் அவர்க்கு இழிவைத் தருவதின்றி வெறு என்னவாக முடியும் ?
எனது கருத்து :
தாங்கள் பிழை விடுறம் எண்டு தெரிஞ்சுகொண்டும் அதைபற்றிக் கொஞ்சங்கூட யோசிக்காமல் அடுத்தவன்ரை மனிசியை பெண்டாள நினைக்கிறவை எந்தப்பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் அவைன்ரை மரியாதை சொறிநாயை விடக்கேவலமானது .
How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wife.
Celui qui se rend, sans la moindre réflexion, chez la femme du prochain se perd, de quelque haute reputation, qu’il jouisse.
எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145
இச்செயல் எளிதெனக் கருதி பிறன் மனைவிபால் ஒழுக்கத்தை மீறிச் செல்கின்றவன் எப்போதும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான் .
எனது கருத்து :
இதைப் படிக்கேக்கை எனக்கு ராவணன்ரை ஞாபகம் தான் வருது. அந்தாள் தேவையில்லாமல் சீதையைத் தொடப்போய் ராமன் ஐயா படை எடுத்து வந்து கடைசீல ரவணனுக்கு அரச பதவியும் இல்லை. அந்தாள் செத்தும் இண்டைக்கும் சனம் அந்தாளின்ரை கதையத்தான் சிக்கெடுக்கிதுகள் .
'Mere triflel' saying thus, invades the home, so he ensures. A gain of guilt that deathless aye endures.
Celui qui fréquente le femme du prochain parce qu’il en trouve l’accès facile, se rend coupable d’une faute irrémissible.
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். 146
பகை, பாவம்,அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடம் இருந்து என்றும் நீங்காமல் இருக்கும் .
எனது கருத்து :
திரும்பவும் ராவணனுகுத் தான் வரவேண்டி இருக்கு. சீதையின்ரை பிரச்சனையால பகை, பாவம், அச்சம், பழி எல்லாம் சேந்து தானே கலைச்சு கலைச்சு அடிச்சிது.
Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four.
La haine, le péché, la peur et la honte, tous les quatre sont inséparables du violateur du (foyer) conjugal.
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன். 147
அறவழியில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் பிறன் மனைவியை விரும்பாதவன் ஆவான்
எனது கருத்து :
நல்ல விசையம் தான், நேராக சொல்லாவிட்டாலும் மனதால் மற்றவன் மனைவியை நினைப்பவர்கள் தான் கூடவாயிருக்கினம் .
Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously.
Celui qui ne convoite pas la femme d’autrui est le père de famille vertueux.
பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. 148
பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்குகு அறம் மட்டும் அன்று நிறைந்த ஒழுக்கமும் ஆகும்
எனது கருத்து :
அப்பிடி ஒரு ஆளை நான் பாக்கேலை .இந்திரன் தேவலோகத்தின் தலைவன் . அவரே தன்ரை இடத்தை விட்டுறங்கி அகலிகையிட்டை , அதுவும் மாறுவேசதத்தில போனால் , மற்றாக்கள் இந்த விசையத்தில ..........
Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life.
Avoir la virilité de ne jamais désirer la femme d’autrui c’est la vertu des Sages et leur parfaite moralité.
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார். 149
கடல் சூழ்ந்த இவ்வுலகில் நன்மைக்கு உரியவர் யார் ? பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்
எனது கருத்து :
மற்றவன்ரை மனிசியை மறந்தும் தொடாதவன் தான் இந்த உலகத்தில பேராய் புகழாய் இருக்கிறதுக்குத் தகுதியானவன் எண்டு ஐயன் சொன்னாலும், இராவணன்ர பேரும் புகழும் என்ன குறைஞ்சா போச்சுது ??
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride.
Qui mérite d’avoir tous les Biens de cette terre environnée de l’effroyable océan? C’est celui qui n’enlace pas les bras de la femme d’autrui.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 150
ஒருவன் அறநெறியில் நிற்காமல், அறமல்லாதவற்றையே செய்தாலும் செய்தாலும் பிறருக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
எனது கருத்து :
பாவம் செய்தாலும் ஒருத்தன்ரை மனிவியை விரும்பாமல் இருக்கிறது நல்லது எண்டு ஐயன் சொல்லுறார்
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not.
Qu’on commette même des péchés, au lieu de pratiquer la vertu ! Il est bon qu’on ne désire pas la femme d’autrui.
Comments
Post a Comment