வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11
மழை இடையறாது பெய்வதனால்தான் உலகத்து உயிர்கள் வாழ்கின்றன . அதனால் அம்மழையே அமிழ்தம் என்று போற்றத் தகுந்ததாகும்.
எனது பார்வையில்:
அதது அந்தந்த இடத்தில அந்தந்த நேரத்தில நடந்தால் தான் அதுக்குப் பெருமை கண்டியளோ. இந்த மழையும் அதுமாரித்தான் இருக்கவேணும். அதை விட்டிட்டு வரியம் முன்னூற்றி அறுபத்தி ஐஞ்சு சொச்சம் நாளும் ஊத்தூத்தெண்டு ஊத்திக்கொண்டிருந்தால், இந்த மழை அமிர்தமாய் இருக்குமோ? இல்லை தெரியாமத் தான்கேக்கிறன். நஞ்சாத் தான் இருக்கும். உலகம் ஓரே தண்ணிக் காடாய்த்தான் கிடக்கும். பேந்து ஒரு சின்னத் துண்டு நிலங் கிடந்தால் காணும், அதுக்கு எங்கடையள் ஆளாழுக்கு ஏ கே ஐத் தூக்குங்கள்.
The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives.
Parce que la terre se soutient, grâce â la pluie qui tombe continuellement, la pluie mérite le no, d’ambroisie.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12
துப்பாய தூஉம் மழை. 12
உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உண்பவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும்.
எனது பார்வையில்:
நான் ஒரு தோட்டஞ் செய்யிறன். அதில ஒரு நூறு கண்டு கத்தரி நடுறன். இது விளையிறதுக்குத் தண்ணி வேணும். பேந்து என்ன செய்வன், விளைஞ்சதில ஒரு ஐஞ்சாறை எடுத்துச் பொரிச்ச குழம்பு வைப்பன். இங்கையும் தண்ணி தேள்வைப்படுது. பேந்து சமைச்சதை ரசிச்சு ருசிக்கேக்கை, பிரக்கடிச்சால் குடிக்க அங்கையும் தண்ணி வேணும். சரி ஒருமாதிரி சாப்பிட்டுப்போட்டு வெத்திலை கித்திலையைப் போட்டால், திண்ட சாப்பாடு செமிச்சு ஒண்டுக்கு, ரெண்டுக்கு எண்டு போகும். அங்கையும் தண்ணி வேணும். இப்பிடி எல்லாத்துக்குமே உதவிறது மழைதான் எண்டால் பாருங்கோவன்.
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.
Non seulement la pluie procure la meilleure nourriture à tous les êtres, mais aussi elle se constitue leur meilleur aliment.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13
உள்நின்று உடற்றும் பசி. 13
பருவகாலத்தில் மழை பெய்யாது தவறுமானால் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும்.
எனது பார்வையில்:
இப்ப கலி முத்தினால் மழை பெய்யாது எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். அதுக்கென்ன முட்டியைத் தூக்கிக்கொண்டு கடக்கரைக்கு ஓடுறதே தவிச்ச வாய்க்கு தண்ணி எடுப்பம் எண்டு. அங்கை உப்புத் தண்ணி தான் கிடக்கும் அதைக் குடிக்கலாமோ? சில நேரம் நீங்கள் நினைக்கலாம் கொக்கோகோலா, பன்ரா , லெமனைட் எல்லாங் கிடக்க, கோமகன் என்ன மரைகழண்ட கதை கதைக்கிறார் எண்டு. அதெல்லாம் செயற்கைத் தண்ணி. நல்ல தண்ணியே மழைல இருந்து தான் வருது. இப்ப நிலத்துக்குக் கீழை இருக்கிற நல்ல தண்ணியும் மழை பெய்யாட்டி கொஞ்சக்காலத்துக்குப் பிறகு அதுவும் கோயிந்தோ தான்.
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
Si la pluie vient à manquer, la faim demeurera constante sur cette vaste étendue de terre même entourée du vaste océan et tourmentera les êtres vivants.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14
வாரி வளங்குன்றிக் கால். 14
மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால் உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழ முடியாமல் துன்புறுவர்.
எனது பார்வையில்:
இப்ப நான் செய்த ஆயிரங்கண்டு பொயிலைத் தோட்டத்திலை தண்ணி இல்லாட்டி எப்பிடி பொயிலை வழருங்கிறேன்? அப்ப காஞ்சு போன ஆயிரங்கண்டு பொயிலைத் தோட்டத்திலை, திருப்பியும் காயப்போற பொயிலையளுக்காக, மினைக்கெட்டு ரெண்டு சோடி மாடுகளை ஏரிலை பூட்டித் தோட்டத்தை உழ கோமகனுக்கு என்ன மண்டைப்பிழையே? இதுக்கு ஒரு திறம் வசனம் தாறன்,
"விழலுக்கு இறைக்கிற நீரும் வீண்தான். நீரில்லாத நிலத்தில விதைக்கிறதும் வீண்தான்".
If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more.
Les laboureurs ne labourent pas à l’époque où la source de la pluie trait.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15
பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் , அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.
எனது பார்வையில்:
ஐயா வள்ளுவர், இந்த இடத்தில மழையைப்ற்றி ஒரு நல்ல வியாக்கியானம் தாறார். எப்பிடியெண்டால், செய்யவேண்டிய ஒரு காரியத்தை அந்த நேரத்தில செய்யாமல் விட்டாலும், அதுக்கு ஒரு பரிகாரம் தேடிறமாரி திரும்பவும் பொழிஞ்சு நல்லது செய்யிறதானாம் மழைன்ர பரவணிக்குணம். அப்பிடியெண்டால் நல்லா மழை பெய் பெய்யெண்டு பெஞ்சு வெள்ளம் வந்து அழிஞ்சு போனவங்களை திரும்பியும் பெய்யாமல் விட்டு பரிகாரம் தேடிறதும் இந்த மழைதானோ? எண்டு என்ர மண்டையுக்கை ஒரு எதிர்மறையான கேள்வி எண்டு எழும்பிக் கேக்குது. என்னதான் செய்யிறது? இந்த மழை வந்தாலும் பிரச்சனை. வராட்டிக்கும் பிரச்சனை. நினைச்ச நேரம் மழையே வா எண்டு சொல்லிறதுக்கும் வராதை எண்டு சொல்லிறதுக்கும் ஒரு றிமோட் கொன்றோல் இருந்தால் எப்பிடி இருக்கும்?
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
C’est donc la pluie ruine (par sa rareté) c’est encore elle qui ranime ce qui est ruiné, par son bienfait.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16
பசும்புல் தலைகாண்பு அரிது. 16
மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் , அல்லாது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது .
எனது பார்வையில்:
இந்த மழைமட்டும் பெய்யேலை எண்டு வைய்யுங்கோ நிமர்ந்து மேலை அண்ணாந்து குடிக்க ஒரு உறுக்குணியும் தன்னும் தண்ணி கூடக் கிடைக்காதப்பா. அதோடைமட்டும் விட்டுதே நிலத்திலை பச்சைப் புல்லென்ன ஆடு, மாடு , கோழி, கனக்க ஏன், நான் இதை வாசிக்கிற நீங்கள் எண்டு ஒரு குருவியையும் பாக்கேலாது. பேந்து பாக்கிறதெண்டா யமலோகத்திலதான் பாக்கவேணும்.
If from the clouds no drops of rain are shed.
'Tis rare to see green herb lift up its head.
Là où l’on ne voit pas tomber des nues les gouttelettes d’eau, il est rare de voir pousser l’herbe tendre.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17
தான்நல்கா தாகி விடின். 17
மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.
எனது பார்வையில்:
உங்கழுக்குத் தெரிஞ்சவிசையம் தான். நாங்கள் எல்லாம் வங்கியோடை காயிற கோஸ்ரியள். நாங்கள் அங்கை வெள்ளையாய் கறுப்பாய் போடுற கசுகள் நாலுவளத்தாலையுஞ் சுத்திச்சுழண்டு திரும்பவும் வங்கிக்குக் காசுகள் வரேலை எண்டு வையுங்கோவன் கதைகந்தல் தான். வங்கியை இழுத்து மூடிப்போட்டு வங்கீன்ர மனேச்சர், நடத்துறவர் எண்டு எல்லாரும் சோசல் காசை எடுத்துக் கொண்டு வீட்டை குந்திக்கொண்டு இருக்க வேண்டியதாப் போடும். அதைப்போல தான் கடலிலையும் இருக்கிற தண்ணி ஆவியாகி ( பே இல்லை ) திரும்பியும் மழையா பெய்யாட்டி அந்தக்கடலே வறண்டு போடுமாம். ஒருக்கா தண்ணி இல்லாத கடலை கற்பனை பண்ணிப் பாருங்கோவன்.
If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean's wide domain.
Même l’eau de l’immense océan perdait son volume si le nuage perdant sa densité ne se resolvait pas en pluie qui y tombât.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு 18
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு 18
மழை பெய்யாது போனால் , தேவர்களுக்காக இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் நடைபெறாது .
எனது பார்வையில்:
மழை மட்டும் இல்லை எண்டு வைய்யுங்கோவன். சும்மாவே கடவுளைத் தேடிப் போகாத எங்கடை சனம் துண்டாய்ப் போகாது. ஏன் கனக்க ஐயரே போகமாட்டார். எனக்கு விளங்குது உங்கடை நக்கல் பார்வையள். அட சனமே உயிரோடை இருந்தால் தானே? அதால பிள்ளையள் மழை இருந்தால்தான் உயிர்கள் வாழும். உயிர்கள் நல்லபடி வாழ்ந்தால்தான் கடவுள்களும் வாழ்வார்கள். அதாலை மழை இல்லாட்டி கடவுளுக்கும் சங்குதான்.
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore.
Si la pluie ne tombe pas, les hommes ne célèbreront pas de fêtes en ce monde en l’honneur des habitants du ciel et ne leur offriront pas de sacrifices.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின். 19
வானம் வழங்காது எனின். 19
அகன்ற இப்பெரிய உலகில் மழை பெய்யாவிட்டால் பிறருக்காகச் செய்யும் தானமும் தனக்காகச் செய்யும் தவமும் இல்லை என்றாகி விடும்
எனது பார்வையில்:
இதுக்கு எங்கடை உள்வீட்டுக்கதை ஒண்டு சொல்லிறன். எனரை அம்மாச்சீன்ர அண்ணை ஊரில ஒரு பெரிய விதானையாராய் இருந்தவர். அப்ப ஊரில கொர்ணமேந்தில வேலையெண்டால் பெரிய கியாதி கண்டியளோ. இவரும் ஊரில நடக்கிற நல்ல காரியங்களுக்குப் பாத்துப் பாரமல் உதவியள் செய்யிறவர். எனக்கு இப்பவும் கண்ணுக்கை நிக்குது. இவரிட்டை ஏதாவது உதவியள் வாங்க வாறவை இவருக்குச் சொல்லுவனம் , உங்களைப்போல ஆக்களாலைதான் விதானையார் ஊரிலை மழை பெய்யுதெண்டு ஒரு பிட்டைத் தூக்கிப் போடுவினம். எங்கடை ஆளும் ஒரு சின்னச் சிரிப்போட கேட்டதை விட ஐஞ்சைப் பத்தைக் கூடக் குடுப்பர். இதை ஏன் சொல்லுறன் எண்டால், மழை பெய்யேலை எண்டு வைய்யுங்கோ இவையளைப் போல ஆக்களால தானமும் செய்யேலாது தறுமம் செய்யேலாது. தங்களைக் தாங்கள் கொண்டு இழுக்கிறதக்கே நாக்குத் தள்ளிப்போடும். அவ்வளவுக்கு அவையின்ரை தலையில பஞ்சம் நிண்டு டிஸ்கோ ஆடும்.
If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
La charité et l’austérité disparaitront de cette vaste terre, si le ciel n’y envoie pas de pluie.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20
நீர் இல்லையென்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்று ஆகிவிடும்.
எனது பார்வையில்:
அரண்மனையிலை இருக்கிற மகாராசா எண்டாலும், கொட்டிலிலை இருக்கிற சுப்பையா எண்டாலும், தண்ணி விடாய் எண்டு வந்தால் தண்ணி குடிக்கத்தானே வேணும்? இப்ப மகாராசான்ரை அரண்மனைக்கு கவுன்சில்காறன் தண்ணியை வெட்டிப்போட்டான் எண்டால், மகாராசா அரண்மனையை வைச்சு என்ன நாக்கு வழிக்கிறதே? அதாலை பிள்ளையள் மழை பெய்யாட்டி தண்ணி இல்லை. தண்ணி இல்லை எண்டால் நாட்டில அவனவன் கொடுக்குக் கட்டுவன். இந்த சட்டம் ஒழுங்கில சனி பாக்கும்.
When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
Rien en ce monde n’est possible à qui que ce soit, sans l’eau. Tout dépend donc du ciel qui fait pleuvoir continuellement.
Comments
Post a Comment