Skip to main content

அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்-Assertion of the Strength of Virtue-Encouragement à la vertu 31-40





சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

அறம், வீடுபேற்றையும் சுவர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும்; ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தைவிட நன்மை உடையது வேறு ஒன்றும் இல்லை.

எனது பார்வை:

மனுசனாய் பிறந்தவை தங்களிட்டாய் இருக்கிறதை மற்றவைக்கும் குடுத்து சிவிச்சால் அவை திரும்பியும் ஒரு பிறப்பெடுக்க மாட்டினம். ஆனால் அவை சொர்க்கத்துக்கு போவினம் எண்டு பீலா விடுறது எனக்கு கடுப்படிக்குது. 

It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

Quel plus grand bien à la vie humaine que la vertu? Elle donne la grandeur, elle donne la richesse.

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. 32

ஒருவனுக்கு, அறத்தை செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை; அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும் மேம்பட்ட கேடும் இல்லை.

எனது பார்வை:

கலி முத்தினால் கள்ளருக்கும் காடையருக்கும் பொய் பித்தலாட்டக் காரருக்கும் தான் வாழ்மானம் எண்டு சும்மாவே சொன்னாங்கள்

No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.

Rien qui donne la grandeur comme la vertu. Quel plus grand mal que l’oublier !

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். 33

ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவுக்கு அறச்செயல்களை இடைவிடாமல் செய்யவேண்டும் .

எனது பார்வை:

நாங்கள் உழைக்கிற காசில ஒரு நாளைக்கு ஒரு யூறோ சேத்தால் மாசத்தில முப்பது யூறோ வரும். அதை இந்த யுத்தத்திலை எல்லாத்தையும் குடுத்துப்போட்டு நடுறோட்டிலை நிக்கிற ஆக்களுக்குக் குடுத்தால் அதுகள் உங்களை வாழ்க்கையிலை மறக்காதுகள். ஒருக்கால் கியாதிக்கு செய்யிறதெண்டில்லாமல் மனுசனாய் பிறந்தவன் தொடந்து செய்யவேணுமெண்டு வள்ளு ஐயா சொல்லிறார்.

To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Que l’on pratique donc la vertu sans cesse, partout et par tous les moyens possibles.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 34

ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும்.மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும்.

எனது பார்வை:

உண்மையில இந்த இடம் முக்கியாமன இடம் அறம் எண்டால் ஒருத்தன் மனத்தூய்மையாய் குற்றமில்லாதவனாக இருக்க வேணுமாம். மனத்தூய்மை இல்லாத எந்தவிசயமும் சும்மா பப்படாவாய் இருக்கும் எண்டு ஒரு குட்டும் தாறார்.

Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim.

Qu’il (celui qui pratique la vertu) devienne sans tâche selon sa conscience! c’est là tout l’effet de la vertu. Le reste n’est que vanité.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 35

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்த நான்ங்கு குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும்.

எனது பார்வை:

ஒருவர் எப்படியிருதால் நல்லது என்று சொல்லுறாரோ தெரியாது. இவையள் எல்லாத்தையும் கடந்த மனுசரை நானும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன்.

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Reprimander sans répit, les quatre maux: l’envie la convoitise, la colère et les paroles dures, c’est pratiquer la vertu.

அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தை நாள்தோறும் செய்யவேண்டும் . அதுவே உடம்பில் இருந்து உயிர் நீங்கும் காலத்து அழியாத துணையாக இருக்கும்.

எனது பார்வை:

கர்ணமகாராசா ஒவ்வுருநாளும் செய்த அறம் தான் அவர் சாகேக்கை கூட சீவன் போகாமல் தர்மதேவதை காத்தவா எண்டு சொல்லுகினம்.

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Pratiquer la vertu, sans penser qu’il sera temps de la pratiquer au moment de la mort. Lorsque l’âme se détache du corps, son compagnon indestructible est la vertu ainsi pratiquée.

அறத்துஆறு இதுவென வேண்டா ; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

பல்லக்கை சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையானது என்று சொல்ல வேண்டியதில்லை அது நேரில் அறியப்படும்

எனது பார்வை:

தங்கடை வாழ்க்கையை நேர்மையாய் கோண்டுபோறவை , வாழ்கையில வாற சந்தோசம் சரி கவலை சரி இரண்டையும் ஒரேமாதிரி பாத்து சந்தோசமாய் பல்லக்கில போறவை மாதிரி போவினம். இதுக்கு எதிர்மாறாய் நேர்மை இல்லாமல் இருக்கிறாக்கள் இந்தப் பல்லக்கு தூக்கிறவை மாதிரி சந்தோசத்திலையும் அமைதியாய் இல்லாமல் கவலை எண்டாலும் அதை தாங்கிற சக்தி இல்லாமல் வாழ்கையை சுமையாக்கி போடுவினம் எண்டு சொன்னாலும், இந்த இடத்திலை சாதீயத்தை தொட்டுப் போட்டாரோ எண்டு சுறுக்கரின்ரை மண்டையிலை எதிர்மறையான கேள்விம் ஒண்டும் எழும்புது.

Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear!

Point n’est besoin de faire connaitre le profit de la vertu; on le constate chez celui qui porte le palanquin (chaise à porteur) et chez celui qui y est assis.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 38

ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலாது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்

எனது பார்வை:

நல்ல விசையங்களையும் அறத்தையும் ஒவ்வரு நாழும் செய்து கொண்டு வர உங்கடை வாழ்க்கை போற பாதையை சீராக்கித் தாற கல்லு ( இப்ப றோட்டு போடேக்கை கல்லுகள் எல்லாம் போட்டு படிமானங்கள் போட்டுத்தானே தார் ஊத்திறம் ) மாதிரி இருக்கும்

If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.

La vertu pratiquée tous jours, sans qu’il y en ait un de perdu, est la pierre qui ferme le chemin des naissances futures.

அறத்தான் வருவதே இன்பம் , மற்றுஎல்லாம்
புறத்த புகழும் இல. 39

அறத்தோடு பொருந்தி வரும் இன்பமே இன்பமாகும் அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவனவாகும் ; அவை புகழும் இல்லாதவை ஆகும்

எனது பார்வை:

ஒருத்தர் தன்ரை சீவியத்திலை புகழ் அடையவேணும் எண்ட ஆசை இருந்தால் அதுக்கு முதல் தூய்மையான மனசோட நேர்மையான வழில போகவேணும் அது தான் சந்தோசம். நேர்மை இல்லாமல் நடந்து வாறது புகழ் இல்லை. அதிலை சந்தோசமும் இருக்காது.

What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light.

Le vrai bonheur vient de la vertu; tout le reste est douleur et indigne d’éloge.

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி. 40

ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே ; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே . 'ஓரும் ' என்பன இரண்டும் அசை நிலை .

எனது பார்வை:

இந்த இடமும் ஒரு முக்கியமான இடம் கண்டியளோ. ஒருத்தர் பிழை சொல்லுற மாதிரி நடந்து கொள்ளாமல் பாராட்டுற மாதிரி , நேர்மையான அறங்களை செய்யிறதால வாறது தான் புகழ் எண்டு அதுக்கும் ஒரு வரைவிலக்கணத்தை வள்ளு தாறார்.

Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.

Ce qui peut être fait à autrui est le bien. Ce qui ne peut lui être fait est le mal.





Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...