அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு . 01
எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது அ , அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள் .
A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.
Toutes les lettres ont pour principe ‘A’ ; l’univers a pour principe l’Etre Primitif.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின். 02
நற்றான் தொழாஅர் எனின். 02
கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை .
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.
A quoi sert le savoir, si l’on n’adore pas les pieds
de Celui qui a la vraie Connaissance parfaite.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 03
நிலமிசை நீடுவாழ் வார். 03
அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருஅடிகளைத் , தம் மனதால் துதிக்கின்றவர் எந்தக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர் .
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Ceux qui se réfugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 04
யாண்டும் இடும்பை இல. 04
விருப்பும் வெறுப்பும் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளைத் , தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது .
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complain.
Ceux qui se sont unis aux pieds de Celui qui n’a ni désir, ni aversion, ne souffriront jamais des douleurs inhérentes à la naissance.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு . 05
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு . 05
இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துபவரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை , தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை.
The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well.
Les deux fruits de l’illusion (le bien et le mal) n’approchent pas ceux qui célèbrent la vraie gloire du Seigneur.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் . 06
நெறிநின்றார் நீடுவாழ் வார் . 06
ஐம்புலன் ஆசைகளையும் ஒழித்த , இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நிலைத்து வாழ்வர் .
Long live they blest, who 've stood in path from falsehood freed;His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Vivront éternellement ceux qui se tiennent dans la vraie ligne de conduite de Celui qui a consumé les cinq passions, procurées par les sens.
தனக்குஉவமை இல்லாதான்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ". 07
மனக்கவலை மாற்றல் அரிது ". 07
தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனதில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது.
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Autres que ceux qui se sont réfugiés aux pieds de Celui qui n’a pas d’égal, ne peuvent éviter les inquiétudes de l’esprit.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது ".08
பிறவாழி நீந்தல் அரிது ".08
அறக்கடலாக விளங்கும் ஆண்டவனின் திருவடிகளை எண்ணாதவர், அறத்திற் எதிரான வேறு எந்தக் கடலையும் நீந்திக் கரை சேர முடியாது .
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain.
Autres que ceux qui se sont attachés aux pieds du Sage qui est l’océan de la vertu ne peuvent traverser les mers orageuses distinctes de ce dernier (richesses et plaisirs des sens).
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 09
தாளை வணங்காத் தலை. 09
பார்க்க முடியாத கண் ,கேடக்கமுடியாத காதுபோல எட்டுக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலை இருந்தும் பயனில்லாததே .
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead.
Tout comme les organes des sens sans virtualité, la tête qui ne s’est pas inclinée aux pieds de Celui qui est doué des huit attributs’ est sans valeur.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்". 10
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main.
Ceux qui se sont réfugié aux pieds du Seigneur franchissent le grand océan des naissances; les autres ne peuvent le franchir.
Comments
Post a Comment