வணக்கம் வாசகர்களே!
ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன். பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது. எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளைய சமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரெஞ் மொழிபயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்ப்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன். தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும், சிவபுராணமும் ஆகும். மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ழு தமிழில் இவை தொட்டு செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும். என்னைப் பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது, உங்களின் ஒத்துழைப்பாலும், இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்கு சொல்லும் பொழுதிலேயே அது பூரணப்படுத்தப்படும் .நன்றி வணக்கம் .
கோமகன்
Comments
Post a Comment