Skip to main content

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் – அறிவியல் -இறுதிப்பாகம் 05-50- 60




51 எட்டி மரம் அல்லது காஞ்சிரை மரம் -The strychnine tree , nux vomica, poison nut, semen strychnos and quaker buttons – Strychnos nux-vomica

எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

எட்டி மரத்தின் பட்டை, காய், இலை முதலான அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. ‘எட்டிக் கசப்பு’ என்னும் வழக்கு இதன் சுவையை விளக்கப் போதுமானதாகும். எட்டிக்காயைக் ‘காஞ்சிரங்காய்’ என்று ஔவையார் குறிப்பிடுகிறார். வேண்டியனவற்றையெல்லாம் தரும் கற்பக மரம் உண்டாரைச் சாகச்செய்யும் காஞ்சிரங்காயை (எட்டுக்காயை)த் தந்தால் என்செய்வோம் எனக் குறிப்பிடுகிறார். வெள்ளாடு இந்தத் தழையை ஓரிரு வாய் கடிக்கும். அன்று அதன் பால் சற்றே கசக்கும். என்றாலும் அந்தப் பாலில் நச்சுத்தன்மை இல்லை. எட்டி மரத்தின் பாகங்களை நாட்டு மருந்துகளில் சேர்த்துகொள்வர்.

எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 – 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :

இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான விடம் தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இதன் பொடி இரு கிராம் அளவு உப்படனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காயச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காயச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்ததோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றில்ச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு விட மிறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லாவிடங்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’

எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:

ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உணைடாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

http://news.amanushy…-post_4502.html

http://en.wikipedia….hnos_nux-vomica

000000000000000000000000000000

52 ஒலிவ் மரம் – The olive tree – Olea europaea


ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்டக் கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இஃது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.

ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்குக் குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையலில் ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவக் குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனாப் பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்புப் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர்ப் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்பு தொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி ச்செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் மார்பகப் புற்று நோயைத் தடுக்கும்.

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுதுத் தங்கம் என்று கூற வாய்த் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்குத் திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய்க் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்குப் போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்தச் செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்றக் கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடாப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுத் தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்றச் சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர்ப் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாகப் புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலைப் புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய்ச்சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றிப் பார்சிலோனாவின் ஆடனோமாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய்ச் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவைச் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணுப் பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்றப் புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய்த் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ‘‘பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்’’ என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்தத் தமனிப் பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்றச் சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாகப் பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதிச் செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகத் தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்புப் படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றித் திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய்ப் பச்சை நிறத்திலும், கனிந்தப் பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிரத் தாது பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் ‘திரவத்தங்கம்’ என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய்க் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்புச் செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய்ச் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டுக் கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டப் பின்புச் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடுக் குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்துக் குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜி, போண்டா, வடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே. அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போலச் சிறிதளவுச் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

அதிக வெளிச்சமும் அதிகச் சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு:

10 ஆயிரம் டன்னாக உயரும். மருத்துவக் குணம் நிறைந்த, ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, இந்தியாவில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, நடப்பாண்டில், உள்நாட்டில் இதன் பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, 4,000 டன்னாக இருந்தது.

இது, சென்ற 2011ம் ஆண்டில், 6,000 டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய ஆலிவ் எண்ணெய்ச் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்பு, ஆலிவ் எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட வெளிப்புறப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்த எண்ணெய்ச் சமையலறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில்இருந்துதான், இறக்குமதிச் செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில், ஆலிவ் எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், மேற்கண்ட இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும், 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2003ம் ஆண்டில், இந்தியாவில், ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 30 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. சர்வதேச அளவில், மற்றச் சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது, இதன் பயன்பாடுக் குறைவாக உள்ளது. என்றாலும், தற்போது, மக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவதால், ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிகச் சத்துகள் இருப்பதாகவும் அவைகளை உங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதைக் கண்டு பிடித்து அறிவிக்கலாம்.

http://www.adirai.in…யன்பாடுகள்.html

http://en.wikipedia….wiki/Olive_tree

000000000000000000000000000000000000

53 கஞ்சா செடி-Cannabis


கஞ்சா செடி பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, கனாபிசு சற்றைவா (Cannabis sativa),[கனாபிசு இன்டிகா(Cannabis indica),மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.

இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும்.

http://ta.wikipedia…..org/wiki/கஞ்சா

http://en.wikipedia.org/wiki/Cannabis

00000000000000000000000000000

54 கம்பு – pearl millet – Pennisetum glaucum


கம்பு ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.

அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,
42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்: முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.

மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.

பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.

அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும். பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும். அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும். அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும். குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.

பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம். மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான். இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.

http://ta.wikipedia…..org/wiki/கம்பு

http://en.wikipedia….nisetum_glaucum

0000000000000000000000000

55 கமுகு , பாக்கு, கந்தி சுடைக்காய்- areca palm – areca nut palm betel palm – Areca catechu


பாக்கின்றி தாம்பூலமில்லை. காதல் உணர்வை தூண்டுவதாக கருதப்படும் கமுகு (பாக்கு), நீரிழிவு நோய்க்கும் மருந்தாகும் என்பது உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

கமுகு எனப்படும் பாக்கு மரம் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடுகளில் பயிராகும் மரம். இந்த மரத்தின் பழங்களில் உள்ள விதை பாக்கு எனப்படும். பாக்கு மரப்பழம் 3 செ.மீ. நீளமாக, உள்ளே ஒரே ஒரு விதையை கொண்டிருக்கும். பழங்கள் பழுக்கும் முன்பே மரத்திலிருந்து எடுத்து நார் பாகத்தை பிரித்தெடுத்து, கொட்டைகள் சுடுநீரில் வேக வைத்து, வெய்யிலில் உலர்த்தப்படும். இம்முறையில் எடுக்கப்பட்ட பாக்கு ‘டேனின்’ (annin) குறைவாக இருக்கும். தவிர அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். சுவையும் கூடியிருக்கும்.

பாக்கு மரத்தின் தாவர பெயர் – Areca Catechu ஆங்கிலத்தில் Betel Nut palm (Ü) Areca – nut palm சமஸ்கிருதம் – பூகா, ஹிந்தி – சுபாரி, தமிழில் – கமுகு, பாக்கு, கந்தி சுடைக்காய், பல பயன்களை தரும் பாக்கு, பொதுவாக தாம்பூலத்தில் வெற்றிலையுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. வெற்றிலை தின்பவர்களுக்கு இன்றியமையாதது.

பாக்கை முக்கிய உட்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட “பூங்காட்ரிம்” (பாக்கு தவிர வேறு சில பொருட்கள் சேர்ந்தது) மருந்து உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் – பூங்காட்ரிம் மிதமான மற்றும் நடுத்தர தீவிரமான நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும் (அதுவும் பக்க விளைவுகள் இல்லாமல்) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

http://www.xn--wkc4d…-post_8116.html

http://en.wikipedia….i/Areca_catechu

000000000000000000000000000000000

56 கத்தரிச் செடி அல்லது வழுதுணங்காய் செடி- brinjal Eggplant- aubergine -melongene garden egg – guinea squash


கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில் வழுதுணங்காய் என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்).

கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் எனப் பல வகைகள் உண்டு.

கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல். ஆஸ்துமா நோயை குறைக்கும்கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது. கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.கொழுப்புக்கு எதிரானது மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.

http://tamil.boldsky…al-aid0091.html

0000000000000000000000000000

57 கருங்காலி – Ebony – Diospyros ebenum


கருங்காலி (Diospyros ebenum – இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.

இந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே “உலக்கை” செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

http://ta.wikipedia…./wiki/கருங்காலி

https://en.wikipedia…iospyros_ebenum

00000000000000000000000000000

58 நாகலிங்க மரம் cannonball tree – Couroupita guianensis


படமெடுத்தாடும் நாகப் பாம்பின் தலை சிவலிங்கம் மேல் இருப்பது போன்ற பூக்களை உடைய மரமாகும். நாகலிங்கம் பெரிய வீடுகளின் முகப்பிலும், கட்டிட வளாகங்களிலும் வளர்ந்து நிழல் தருவதுடன், தூசியை வடிகட்டும், சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரமாகும். நாகலிங்கத்தின் தாயகமான கயனாவில் வழங்கப்படும் பெயரிலிருந்து கவுரவ்பீட்டா என்ற முதற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இணைப்புப் பெயரான கயானெசிஸ் இதன் தாயகத்தைக் குறிக்கும் பெயராகும்.

நாகலிங்கம் மரம் 11-12 மீட்டம் உயரம் வளரும். 6 மீட்டர் அளவிற்கு விரிந்த தழையமைப்பு, அடர்த்தியாகவும் இருக்கும். அடிமரத்திலேயே நீண்ட குச்சிகள், மரத்தை ஒட்டினாற்போல் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் காவிரி நதிக்கரையில் அதிகமாகக் காணப்பட்ட நாகலிங்க மரம், குடிபெயர்ந்து நகரங்களில் குடியேறிவிட்டது.

நடுமரம் மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூக்கள் உருவாகும். ஒரு மீட்டர் நீளப் பூக்களைகளில் சிமிழ் போன்ற வடிவில் பூ மொட்டுக்கள் உருவாகும். விரிந்த நிலையில் மகரந்த தண்டுகள் இணைந்த பகுதி, நாகப் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்றிருக்கும். விரிந்த பகுதியின் கீழ், பூவின் அண்டம், சிவலிங்கத்தைப் போன்று தோற்றமளிக்கும். இதன் காரணமாகவே இம்மரத்திற்கு நாகலிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூக்கள் உதிர்ந்து காய்கள் உருவாகும்.

துரிதமாகத் துளிர்க்கும் இலையைக் கொண்டிருப்பதால் தழையை அரக்கி, தழையெருவாகப் பயன்படுத்தலாம். வெட்ட வெட்ட தழைக்கக் கூடியது.

இனி தீவுகளில் கனியைக் கால்நடை தீவனமாக உபயோகிக்கின்றனர்.

நீக்ரோ இனத்தவர் கனியை உண்பதாகவும், மேலும் கனியிலிருந்து ஒருவகை பானம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மரத்தை வேளாண்மைக் கருவிகள் செய்திட உபயோகிக்கலாம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

http://ta.wikipedia….கலிங்கம்_(மரம்)

http://www.tamilvu.o…/nakalinkam.htm

https://en.wikipedia…pita_guianensis

0000000000000000000000000000000

59 கறிவேப்பிலை மரம் – curry tree – Murraya koenigii


உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண் ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.

இது புற்றுநோய். இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பர நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.

பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

http://en.wikipedia.org/wiki/Curry_leaves

0000000000000000000000000000

60 கொய்யா மரம் -guava – common guava -Psidium guajava


கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.

கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி சந்தையில் உலா வருகின்றன.

கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள். கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Psidium_guajava

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...