கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது .
நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
இந்த மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என்று அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டன .
இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.
நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.
புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.
இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்குப் பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.
வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.
நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.
கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.
உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.
http://en.wikipedia….nthus_distichus
00000000000000000000000
12 ஆமணக்கு – castor oil plant -Ricinus communis
ஆமணக்கு ,வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.
எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.
பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
சிற்றாமணக்கு
பேராமணக்கு
செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.
ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும். இதன் தண்டுப் பகுதியில் வெள்ளையான வண்ணத்தினைப் போன்ற மாவு படிந்து காணப்படுகின்றன.
இதன் இலைகள் நீண்ட காம்புகளையுடையதாக இருக்கின்றது. இந்தக் காம்பின் அடியில் சுரப்பியும், கை வடிவத்தில் பிளவுபட்ட மடலும், அதில் பல் விளிம்பு பற்களும் காணப்படுகின்றன. ஆண், பெண் வகைகளில் இரு விதமான மலர்கள் இதில் காணப்படுகின்றன. ஆண் மலரில் மகரந்தத்தூள்கள் பல கற்றைகளாகவும், பெண் மலரில் சூல்பை மூன்று அறைகளையும் கொண்டு இருக்கின்றது. இதன் கனிகள் கோள வடிவத்தில் வெடிகனியாகக் காணப்படும். முட்கள் நிறைந்து இருக்கும். இதன் விதைகள் முட்டை வடிவத்தில் அடர்ந்த சாம்பல் நிறக்கோடுகளையும், புள்ளிகளையும் கொண்டது. இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.
ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன. இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.
http://ta.wikipedia….rg/wiki/ஆமணக்கு
http://en.wikipedia….icinus_communis
0000000000000000000000000000000
13 சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி-Candle Bush-Senna alata
சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் தாவரம் ஆகும். இத்தாவரத்திற்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி போன்ற வேறுபெயர்களும் உண்டு . இத்தாவரம், தான் வாழும் இடத்தின் தாவரங்களை விட வேகமாக வளரும் இயல்பைப் பெற்றிருக்கிறது. எனவே, இவை நாட்டிற்க்கு நாடு உருவத்தால் வேறுபாட்டு, அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது. இது 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் 50முதல் 80செ.மீ நீளமுடையது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் குணமுடையது. இதன் ‘இருபுறவெடிக்கனி’ வகையினைச் சாரந்த விதைகள், நீர் அல்லது விலங்குகள் மூலம் பரவும் இயல்புடையதாகும்.
தென் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ள ஆற்றுப்படுகைகளில் மிக நன்றாக வளரும் இயல்புடையது. இதனை வெட்டவெட்ட, நன்குத் தழைத்து வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.
இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.
தோல் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் தீரப் பயன்படுகிறது.
இலைகளில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்சில் பயன்படுத்துகிறார்கள்.
இதனுடைய தண்டின் பட்டை, இருபாலரின் இனப்பெருக்க மண்டல நோய்களைத் தீர்க்கவும் பயனாகிறது.
மலக் கழிவைக் குணப்படுத்தும் மருந்திலும் பயனாகிறது.
இதன் பூக்களை நீரில் இட்டு, பின்னர் அதனைக் காய்ச்சி உண்டு வர சிறுநீரகத் தொந்தரவுகள் நீங்குமென சித்த மருத்துவம் கூறுகிறது.
http://en.wikipedia….iki/Senna_alata
http://ta.wikipedia….wiki/சீமையகத்தி
000000000000000000000000000000000000
14 பாலை ( Ceylon ironwood-Indian rose chestnut or Cobra’s saffron-Manilkara hexandra)
பாலை என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை Ceylon Iron Wood என்றும் அழைப்பர்.
தமிழர் நிலத்திணைகளில் ஐந்தில் ஒன்றான குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை பாலை என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர இந்தியா, வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.
இலங்கையில் தொடர்வண்டி சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளை பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை “இலங்கை இரும்பு” (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.
இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.
http://ta.wikipedia….iki/பாலை_(மரம்)
http://en.wikipedia….ki/Mesua_ferrea
0000000000000000000000000000000
15 ஆல மரம் அல்லது வீழ்மரம்-Indian Banyan-Ficus benghalensis
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே
வெற்றிவேற்கை
ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.
ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.
நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம். மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன. இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர். அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.
இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.
அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்
தேரையன் வெண்பா
பொருள் – நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.
சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்
அகத்தியர் குணபாடம்
உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும். அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும். ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.
வெள்ளை படுதல் குணமாக:
வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
எலும்பு முறிவுக்கு:
எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.
வாய்ப்புண் நீங்க:
ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.
பல் பாதுகாப்பு :
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி
என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.
http://en.wikipedia….us_benghalensis
00000000000000000000000000000000
16 இலுப்பை மரம் அல்லது இருப்பை அல்லது குலிகம் (Madhuca longfolia or Bassia longifolia)
இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.
இலுப்பை மரம் கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய வன்மையான மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. விதையிலிருந்து எடுக்கக் கூடிய திருவிளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய்க்காக திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது.
இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும் , பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும். கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அற்புதமான மரம் இது. பொதுவாக ஆல், அரசு… போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும். அதனால்தான் இத்தகைய மரங்களை நம் முன்னோர்கள் அதிகளவில் வளர்த்து வந்தார்கள். மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர். ஆனால், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்கள், தற்போது வழக்கொழிந்து கொண்டு வருவதுதான் வேதனை.
http://en.wikipedia….huca_longifolia
00000000000000000000000000000000
17 இஞ்சி – Ginger – Zingiber officinale
காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்.
உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும். கடுமையான கார ருசி உடையது. இது , தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் போன்ற வாதைகளைக் குணப்படுத்த வல்லது .
நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
http://ta.wikipedia…..org/wiki/இஞ்சி
http://en.wikipedia….iber_officinale
0000000000000000000000000000000
18 ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம் – breadfruit – Artocarpus incisa
ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம் (Artocarpus incisa), பலா இனத்தை சார்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.
http://ta.wikipedia….rg/wiki/ஈரப்பலா
http://en.wikipedia….tocarpus_incisa
00000000000000000000000000000
19 இரம்பை செடி -pandan leaves – Pandanus amaryllifolius
மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia…._amaryllifolius
000000000000000000000000000
20 கறுவா -இலவங்கப்பட்டை மரம்.-Cinnamon – Cinnamomum
இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது. இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது அடிக்கடி இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.
இலவங்கப்பட்டையானது மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளரவிட்டு அதன்பிறகு அதை கிளைநறுக்கி பட்டை செழிக்க செய்யப்படுகிறது. அடுத்த வருடம், சுமார் பன்னிரண்டு துளிர்கள் வேர்களிலிருந்து எழும்புகின்றன. இந்த துளிர்களிலிருந்து அவைகளின் பட்டைகள் நீக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. மெல்லிய (0.5 மிமீ) உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; வெளிப்புற மரப்பகுதி நீக்கப்பட்டு, ஒரு மீட்டர்-நீள இலவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்களாகின்றன (“குவில்கள்”); ஒவ்வொரு காய்ந்த குவிலும் எண்ணற்ற துளிர்களிலிருந்து உண்டான பல பட்டைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குவில்கள் விற்பனைக்காக 5-10 செமீ நீளமுள்ளவைகளாக வெட்டப்படுகின்றன.
இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து இலங்கையில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் வர்த்தகரீதியில் தென்னிந்தியாவின் கேரளா, வங்க தேசம் (பங்க்ளாதேஷ்), ஜாவா, சுமத்ரா, மேற்கிந்திய தீவுகள், பிரேஸில், வியட்னாம், மடகாஸ்கர், சான்ஸிபார் மற்றும் எகிப்திலும் வேளாண்மை செய்யப்படுகிறது. இலங்கையின் இலவங்கப்பட்டை மிகவும் மெல்லிய வழுவழுப்பான பட்டையைக் கொண்டுள்ளது. அதின் நிறம் இளஞ்சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்ததாகவும் மிகவும் வாசனையான நறுமணமுள்ளதாகவும் காணப்படுகிறது.
2006ன் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற இதழின்படி, இலங்கை உலகத்தின் இலவங்கப்பட்டையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும், இதை தொடர்ந்து சீனா, இந்தியா, வியட்னாம் ஆகியவை உற்பத்தி செய்வதாகவும் அறிவித்தது. இலவங்கப்பட்டையின் காசியா வகையின் உலக உற்பத்தியில் 40% இந்தொனேஷியாவில் உற்பத்தியாவதாக அறிவிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :
http://ta.wikipedia…..org/wiki/கறுவா
http://en.wikipedia.org/wiki/Cinnamon
Comments
Post a Comment