கோமகன் எழுதியிருக்கிறார். புறா தன் பார்வையில் கதையை சொல்கிறது.
சிபிச் சக்கரவர்த்தி காலத்திருந்து புறா மனிதர்களுடன் வாழ்ந்திருந்தாலும் யாரவது புறாவின் பார்வையில் கதையை எழுதி இருக்கிறார்களா ? (நான் வாசிக்கவில்லை ) இந்த ஒன்றே இந்தக் கதையை கொண்டாடப் போதுமானது. ஏற்கனவே ஏறுதழுவுதல் என்றொரு கதை எழுதியதாகவும் கிழக்கிலங்கை மூத்த எழுத்தாளர் அதனை "விலங்குப் பண்ணை" க்கு பிறகு வந்த மனிதரல்லாதவர்களின் மிக சிறந்த கதை என்று பாராட்டியிருந்தார்.
ஒரு புறநகரில் எல்லா இனத்தவர்களும் வசிக்கும் இடத்தில் நிகழும் கதை. அந்த அக்கிராமத்தின் அழகியலை எடுத்து சொல்வதின் ஊடாக ஒவ்வொரு நிகழ்வினையும் துல்லியமாக வரைகிறார். அந்த வரைவுகள் அந்த இடத்தில் வசிக்கும் மக்களை மற்றும் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஒரு ஓவியரிடம் கொடுத்தால் அப்படியே அந்த நகரை ஓவியமாக வரைந்துவிடுவார். கட்டிடங்களை பனை மரங்களுடன் ஒப்பீடு செய்வது, தமிழர்களின் பொருட்கள் குவிக்கும் பழக்கங்களை, சடங்குகளை, நம்பிக்கைகளை கிண்டலும் கேலியுமாக புறாவின் பார்வையிலேயே முன் வைக்கிறார். இடையிடையே வரலாற்று தகவல்கள் வேறு. கதையின் இறுதியில் "அங்கே வீட்டு கேற்ரடியில் மரகதப்பச்சை நிறத்தில் இருந்த நான், எனது தலையை ஒருபக்கத்தில் சாய்த்தவாறே குறுகுறுத்துக்கொண்டேயிருந்தேன்". என்ற அந்த இடம் அப்படியே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஒருகணம் இது கதையா என்று சிந்திக்கச் செய்துவிடும். பரிஸில் இருக்கும் நண்பர்கள் குறும்படமாக எடுக்க சிறந்த கதை. இதே தொடர்ச்சியில் கதை எழுதிக்கொண்டிருப்பாரானால் விரைவில் மிக உச்சமடைவார்.
Comments
Post a Comment