கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391
ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்கவேண்டும் அங்கனம் கற்றபிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும்
எனது கருத்து :
ஐயா ஒருத்தன் எல்லா காலத்திலையும் படிக்கிறான். ஒரு காலத்திலை பூமி தட்டை எண்டு அவன் படிச்ச கல்வி சொல்லீச்சுது. கொஞ்சக்காலம் போக இல்லை பூமி உறுண்டை எண்டு அதே கல்வி சொல்லீச்சுது. அப்பிடி பாத்தால் கல்வி கற்றல் எண்டதே மாறுகின்ற விசையம்தானே? இந்த கல்வியில் " ஏன் " " எப்பிடி" எண்ட கேள்வியள் வந்ததாலைதானே இண்டைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறினம்.
So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.
Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
எண் என்று சொல்லப்படுவனவும் , எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள் .
எனது கருத்து :
ஐயா நீங்கள் சொல்லுஇறது சரிதான். ஆனால் ஒருத்தன் எண்ணையும் எழுத்தையும் படிச்சால மட்டும் காணாது, வாழ்கையிலை அனுபவம் எண்டதையும் படிக்கவேணும். இல்லாட்டில் அவனினரை எண்ணும் எழுத்தும் ஏட்டு சுரக்காயா போடும்.
The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.
Ce qu’on appelle nombre et lettre: tous les deux sont les yeux du genre humain.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393
கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர் . கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படவர் .
எனது கருத்து :
இதிலை கற்றவர் எண்டால் ஆர்? படிச்சு பட்டம் எடுதவன் கற்றவனா? அப்பிடி பாத்தால் இந்தக்குறள் சொல்லிற கருத்து பக்கசார்பாய் இருக்கு. இண்டைக்கு படிச்சு பட்டம் பெற்றவை எல்லாம் " அனுபவம் " எண்ட கல்வி இல்லாமல் படிச்ச கோமாளியளாய் இருக்கினம். வாழக்கை அனுபவத்தாலை படிச்ச கல்விமான்கள் எவ்வளவோ பேரை சரித்திரம் கண்டிருக்கு. அப்ப அவையும் இந்த குறளின்படி இரண்டு புண்களை கொண்டவையோ ??
Men who learning gain have eyes, men say ;Blockheads' faces pairs of sores display.
Ceux qui l’on dit avoir des yeux, sont les hommes instruits; ceux qui ne sont pas instruits ont deux plaies au visage.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394
பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப்பழகி , பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்.
எனது கருத்து :
இண்டைக்கு படிச்சவை சந்திச்சால் " போத்தில் " அதிலை கட்டாயம் இருக்கும் . இல்லாட்டில் அது அவைக்கு மரியாதைக் குறைச்சல் . முதலிலை பம்பலாத்தான் போகும் பேந்து போகப் போக சுதி ஏற படிச்சவை தலைகீழாய் நிண்டு ஏன்ரா சந்திச்சம் எண்ட அளவுக்கு போகும். என்னை பொறுத்தவரையிலை மற்றவனை சந்தோசப்படுத்த படிப்பு தேள்வையில்லை. மனுசனை மனுசன் மதிக்கிற குணம் இருந்தாலே காணும் .
You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art!
La conduite des hommes instruits a le don de rejouir tous ceux qui les approchant et d’attrister tous ceux qui prennent congé d’eux.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395
செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே உயர்ந்தவராவர் . அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.
எனது கருத்து :
ஒரு பணக்காறனுக்கு முன்னாலை ஒரு கஸ்ரப்ட்டவன் எப்பிடி கூனிக்குறுகி நிக்கிறானோ , அதுமாதிரி தன்ரை ஆசிரியரிட்டை பணிவோடை கற்றவைதானாம் உயர்ந்தவை . அப்பிடி படிக்காதவை கல்லாதவை எண்டு நீங்கள் சொன்னாலும், இண்டைக்கு ஆர் வாத்திமாரை மதிக்கினம் ?? வாத்திமாரை இண்டைக்கு கொமடி பீசாக்கி போட்டாங்கள் பிள்ளையள் .
With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place.
Les hommes instruits se tiennent devant les possédants comme des pauvres, dans la même attitude humble (qu’ils ont eue devant leur Maître) tandis que ceux qui ne sont pas instruits (parce qu’ils ont eu honte d’observer une telle attitude) sont les derniers des hommes.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்துஊறும் அறிவு. 396
மணற்பங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் , தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும் . அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும் .
எனது கருத்து :
சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலை வருமெண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். இதைமாதிரித்தான் ஒருத்தன் எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறானோ அவ்வளவுக்கு அறிவிலை உயருவான் .
In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow.
La source jaillit dans le sable dans la mesure, où celui-ci est creusé; la connaissance jaillit chez les hommes, dans la mesure où ils ont étudié.
யாதானும் நாடாமால், ஊர்ஆமால் ,என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397
கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும் ; எந்த ஊரும் சொந்த ஊராகும் . அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால் ?
எனது கருத்து :
நல்ல கேள்வி ஐயன். ஒருத்தன் படிக்காமல் விடுகிறதுக்கு எக்கச்சக்கம் காரணங்கள் இருக்கு. சில இடங்களில சாதி. கன இடங்களில படிக்க காசு இல்லை. அதுகளையும் தாண்டி இந்தக்காலத்திலை படிச்சால் நிறபேதம் எண்ட விசையத்தாலை ஒருத்தனை தரம் பிரிக்கிற அலுவலும் நடக்கிது. என்னைக்கேட்டால் வாழ்க்கையைப் படிச்சவன் உலகத்திலை எந்த மூலையிலையும் வெட்டி ஆடுவான்.
The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam!
Pour l’hommes instruit, un pays quelconque est le sien; une ville quelconque est la sienne. Pourquoi donc ne pas s’instruire jusqu’à la mort.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. 398
ஒருத்தனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது . ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும் .
எனது கருத்து :
உங்கடை கதைப்படிபாத்தால் ஒருத்தன் படிச்சால் அவன்ரை சந்ததியளும் படிச்சு அறிவாளியாகும் எண்டு எத்தினை சதவீதம் உறுதியாய் சொல்லலாம் ஐயன் ? பாட்டன் அப்பன் பெரிய படிச்சவங்களாய் இருப்பாங்கள், பேரப்பெடி தலைகீழாய் நிக்கும். அதின்ரை பெடி வேறை வழியாலை நிக்கும். இதை ஏன் சொல்லிறன் எண்டால் ஒருத்தன்ரை கல்வி அறிவை அவனின்றை சுற்றம் சூழல்தான் முடிவு செய்யும் .
The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains.
L’instruction reçue dans une existence a l’avantage de servir à l’homme pendant ses sept naissances.
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றறிந் தார். 399
கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால் , உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக் கல்வியை மேலும் விரும்பிக் கற்பர் .
எனது கருத்து :
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எண்டு பெரிசுகள் தெரிஞ்சுதான் சொல்லியிருக்கினம் . படிக்கிறது நல்ல விசையம்தான். ஆனால் வாழ்க்கை முழுக்க படிச்சுக் கொண்டிருந்தால் எப்ப வேலை செய்யிறது ?தொடர்ந்து படிச்சு கொண்டிருந்தா வேலையில்லாத பிரச்சனையள் வராதோ ஐயன் ?
Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore.
Le hommes instruits se délectant à l’étude et constatent que le monde s’y délecte également: aussi désirent-ils s’instruire davantage.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. 400
ஒருத்தனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி , பொன் முதலிய செல்வங்கள் அழியக்கூடியன ஆதலால் அவை செல்வங்கள் ஆகா
எனது கருத்து :
நீங்கள் சொல்லிறது நூறுவீதம் ஞாயம் எண்டாலும் , இண்டைக்கு காசு எண்டிற அழியிற செல்வம்தான் , அழியாத கல்வியை கட்டி அவுக்கிது . எல்லாரும் காசு உழைக்கவேணும் எண்டிறதுக்காக கல்வி எண்ட சாமானை புறோக்கறாய் வைச்சிருக்கிறாங்கள் ஐயன் . இது கொஞ்சம் குழப்பமாய் இருந்தாலும் இண்டைக்கு அதுதான் உண்மை .
Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy.
La richesse glorieuse et impérissable d’un homme est l’instruction;
tous les autres Biens ne sont pas biens.
Comments
Post a Comment