வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221
வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும் . பிறருக்குக் கொடுப்பதெல்லம் பயனை எதிர்பார்த்துத் தருவதாகும் .
எனது கருத்து:
சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை ஒண்டையுமே எதிர்பாக்காமல். வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை இதை சிலபேர் இந்த்க் காலத்தில செய்யினம் ஆனால் காணாது.
Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense.
Donner aux pauvres, c’est faire la charité; il est de a nature de tous les autres dons de n’être faits qu’en vue d’un profit, que l’on en attend dans la suite.
நல்லாறு எனினும் கொளல்தீது ; மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. 222
நல்ல அறச்செயலுக்காக என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.
எனது கருத்து:
ஏழை எழியவைக்கு குடுக்கிறதுக்கு மற்றவையிட்டை வாங்கி குடுக்கிறது அழுகல் பழக்கம் . தங்கடை சொந்தக்கையாலை குடுகிறதுக்குப்பேர்தான் உண்மையான கொடை. இந்தக் கொடையாலை சொர்க்கம் கிடைக்காட்டிலும் கஸ்ரப்பட்டவைக்கு உதவி ஒத்தாசையா இருக்கிறது தான் உண்மையான வாழ்க்கை .
Though men declare it heavenward path, yet to receive is ill;Though upper heaven were not, to give is virtue still.
Mendier est mauvais, bien qu’il y en ait qui prétendent qu’il conduit à la bonne voie dans ce monde. Donner est bien, bien qu’il y en ait qui prétendent qu’il ne fait pas obtenir le paradis.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள. 223
'யான் வறியவன் ' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் சொல்வதற்கு முன் அவனுக்கு உதவும் பண்பு நற்குடியிற் பிறந்தவர்க்கே உண்டு .
எனது கருத்து:
சிலபேரைப் பாத்தியள் எண்டல் எந்த நேரமும் தங்களைப்பற்றி புறட்டணியம் சொல்லிக் கொண்டிருப்பினம் . ஆரும் ஐஞ்சைப்பத்தை தங்களிட்டை கேட்டுப்போடுவங்கள் எண்டு. ஆனால் சிலதுகள் என்ன கஸ்ரம் எண்டாலும் அதை வெளீல காட்டாமல் கஸ்ரப்பட்துகளுக்கு உதவிசெய்வினம். உயர் குடிப்பிறப்பில பிறந்த ஆக்களை இப்பிடித் தான் ஒருத்தர் கணிக்கிறது .
'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cry.
Ne pas proférer les paroles déshonorantes. ‘‘Je n’ai rien’’ et donner à ceux qui les ont dites: tous les deux actes ne se rencontrent que chez l’homme de bonne famille.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. 224
உதவி பெற்ற பிறகு அதைப் பெறுபவனுடைய முகம் மலராவிடில் . ஒருவன் செய்யும் தானமும் யாசித்தலைப் போல் துயரத்தைத்தான் தரும் .
எனது கருத்து:
இதிலை நான் கொஞ்சம் ஐயனோடை பிழையா இருக்கிறன். ஒருத்தருக்கு குடுக்கக் குடுக்க திறுத்தி இல்லையெண்டால் குடுக்கிறவர் ஏன் கவலைப்படவேணும்? அவரும் தன்னால முடிஞ்ச உதவியளைத் தானே செய்யலாம் .
The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright.
Avoir pitié, ne cause pas la joie jusqu’au moment où l’on voit le visage épanoui du pauvre qui a obtenu (l’aumône).
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225
தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையடைவர் . அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடையை வலிமைக்குப் பிற்பட்டதேயாகும் .
எனது கருத்து:
வரியம் முன்னூத்து அறுபத்தைஞ்ஞு நாளும் விரதம் கிடக்கிறம் பேர்வழி எண்டு கடவுளை கும்பிடாமல் பசிக்கிது எண்டு வாறவனுக்கு வயிறு குளிரப்பண்ணி அனுப்பிறதுதான் உலகத்திலேயே பெரிய கொடை .
'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain.
Le mérite des hommes fermes á souffrir la faim, ne vient qu’après le mérite de celui qui apaise la faim d’autrui.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226
ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும் ; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.
எனது கருத்து:
பசிக்கிது எண்டு வாறவன்ரை வயிறைக் குளிரைப் பண்ணிறது தான் காசுபணம் உள்ளவையின்ரை உணமையான சேமிப்பு வங்கி . பேந்து உங்களுக்கொரு கஸ்ரம் எண்டு வந்தால் ஆரும் உதவி செய்வினமல்லோ.
Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure.
Apaiser la faim déchirante des pauvres, est le moyen de mettre sa propre richesse en sécurité.
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 227
பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை .
எனது கருத்து:
எல்லாருக்கும் குடுத்து சாப்பிட்டியள் எண்டால் உங்கள பஞ்சம் பட்டினி வாட்டாது .ஆரும் கைகுடுத்துக் கொண்டுதான் இருப்பினம்.
Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel.
La cruelle maladie appelée faim n’afflige pas celui qui est accoutumé à partager ses repas, avec les hôtes.
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழுக்கும் வண் கணவர். 228
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் இரக்கமில்லாதவர்கள் ,பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள் .
எனது கருத்து:
தான் குடுத்து ஏழையின்ரை முகத்திலை சிரிப்பை பாக்கிறவன்தான் உண்மையான மனிசன் .கஞ்சாப்பியள் தங்கடை சொத்துபத்துகளை பதக்கி பதுக்கி வைப்பினம் .ஆனால் அவையின்ரை முகத்தில சந்தோசம் இருக்காது.
Delight of glad'ning human hearts with gifts do they not know.Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
Ce sont ceux qui sont dépourvus de la grâce qui thésaurisent et perdent ensuite leur fortune. Ils ne connaissent donc pas le bonheur éprouvé par ceux qui donnent ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229
ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளிக்காமல் தான் மாத்திரம் உண்பவன் நிலை யாசிப்பதிலும் கீழாகும்.
எனது கருத்து:
மற்றவனுக்கு குடுக்கிறதாலை தங்கடை தேட்டம் எல்லாம் அழிஞ்சு போகும் எண்டு தாங்களே சாப்பிடறவையின்ரை நிலமை பிச்சை எடுத்து சீவிக்கிறவைய விட கேவலமானது ஐயன் ரென்சனாய் போய் சொல்லுறார்
They keep their garners full, for self alone the board they spread;'Tis greater pain, be sure, than begging daily bread!
Manger solitaire afin de remplir (son trésor) cause une douleur plus aigue que mendier.
சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. 230
யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும் .
எனது கருத்து:
வாழ்க்கையில ஒருத்தன் செத்துப்போறதுதான் பெரிய துன்பம் ஆனால் ஒருத்தனுக்கு ஒண்டையும் குடுக்கேலாத நிலமை வந்தால் இருக்கிறதிலை பிரையோசனமில்லை கண்டியளோ .
'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give!
Il n’y a rien de plus cruel que mourir. Il vaut mieux mourir qu’être impuissant à donner.
Comments
Post a Comment