படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381
படையும், செல்வமும், கூழும்,( குடிமக்கள் )அமைச்சும் , நட்பும் , அரணும் ,(கோட்டை) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண்சிங்கம் போன்றவன்.
என்கருத்து:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் இந்த ஆறு விசையதிலையும் ஒரு அரசு முழுமையாய் இருந்தால் தான் அது ஒழுங்கான அரசு எண்டு ஐயன் சொன்னாலும் , இந்த அரசுகளுக்கு கோமாளியள் அல்லோ ஐயா அரசர்மாராய் வாறாங்கள் . அரசரும் மண்டையுக்கை சரக்கு இருக்கிற அரசர் வந்தால்தானே அரசும் ஒழுங்காய் இருக்கும் .
An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.
C’est un lion parmi les Rois, que celui qui est doté des six choses suivantes : armée, territoire peuplé, richesse, ministre, alliance et fortresse.
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்குஇயல்பு. 382
மனவுறுதி , கொடை , அறிவு , ஊக்கம் எனப்படும் நான்கு சிறிதும் குறையாதிருத்தாலே அரசர்க்கு இயல்பாகும் .
என்கருத்து:
ஐயன் நீங்கள் சொல்லுறியள் நெஞ்சிலை துணிவும் , சனத்துக்கு தேவையான உதவியளை செய்யிறது , வாற பிரச்சனையளை முதலே அறியிற புத்தி , ஆபத்து வந்தாலும் அதைக்கண்டு பயப்பிடாமல் முன்னுக்கு வைச்ச காலை பின்னுக்கு வைக்காமல் முன்னேறிற குணமெல்லாம் இப்ப எங்கை ஐயா இருக்கு? தனக்கு சகுனம் பிழைச்சாலும் எதிரிக்கு மூக்கு உடையவேணும் எண்டு நினைக்கிற அரசர் மாரத்தான் இப்ப கூட.
Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore.
Voici les quatre qualités naturelles du Roi : vaillance, libéralité, sagesse et énergie.
தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. 383
நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை. கல்வி , துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும் .
என்கருத்து:
இப்பிடியான அரசர்களை நானுந்தான் தேடிறன், கிடைச்சால்தானே ? இப்பத்தையான் அரசர்மார் லெக்சன் நேரத்தில மட்டும்தான் சனத்திட்டை வருவினம் . தாங்கள் போட்ட காசுகளை எடுக்கிற அலுவலுகளை தங்கடை ஆட்சிக்காலத்திலை பாத்துக்கொள்ளுவினம் ஐயன் .
A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.
Trois vertus sont inhérentes à ceux qui gouvernent terre : l’activité, l’instruction et la décision.
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையதுஅரசு. 384
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி ,வீரத்தில் குறைவுபடாது மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான் .
என்கருத்து:
இண்டையான் திகதியிலை இந்த மூண்டுக்கும் எதிராய் நடக்கிற அரசர்மார்தான் ஐயன் சீவிக்கினம் . அவைக்குத் தான் சனமும் சப்போர்ட் பண்ணுது. லெக்சன் நேரத்திலை இப்பிடியான அரசர்மார் இல்லாதபொல்லாத பொய்யளைச் சொல்லி சனங்களை செம்மறிக்கூட்டங்களாய்தான் நடத்துவினம் .
Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains.
Ne pas faillir à la vertu, abolir ce qui n’est pas vertueux, garder l’honneur en ne manquant jamais aux lois de la bravoure : voilà le propre du Roi.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லதுஅரசு. 385
பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் , வரும் பொருளைச் சேமித்தலும் , பாதுகாத்தலிலும் தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசே .
என்கருத்து:
இதிலை இப்பத்தையான் அரசர்மார் முதல் ரெண்டையும் வலுகிளீனாய் செய்யினம். ஆனால் மூண்டாவதை மட்டும் தங்களுக்குத்தான் செய்யினம். குடிமக்கள் எப்பிடிபோனாலும் இவைக்கு கவலை இல்லை பாருங்கோ .
A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends.
Celui qui a le pouvoir de développer les moyens des revenues, de les thésauriser, de les préserver et des les dépenser dignement est le Roi.
காட்சிக்குஎளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386
அரசன் தன்னைக் காண வருபவர்க்கு எளியனாகவும் , கடுஞ்சொல் பேசாதவனாகவும் இருப்பானாயின் அவன் நாட்டை உலகத்தார் உயர்த்திப் புகழ்வர் .
என்கருத்து:
இதுக்கு எதிர்மாறாய் இருக்கிற அரசைத்தான் ஐயன் இண்டைக்கு உலகம் புகழுது, தலைக்கு மேலை வைச்சு கொண்டாடுது. மெலியாருக்கு எங்கை ஐயா நீதி கிடைக்குது? உலகமோ அல்லது இந்த அரசர்மாரோ நீங்கள் சொன்னபடியோ நடக்கீனம்?
Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.
Si le roi est d’un abord facile et s’il n’use pas de paroles dures,
son royaume sera considéré parmi tous les autres.
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டு அனைத்துஇவ் உலகு. 387
இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் தன் மனதில் கருதியவாறே உலகமும் அமையும் .
என்கருத்து:
மொள்ளை மாரியளும் முடிச்சவிக்கியளும் தான் இண்டைக்கு பேராய புகழாய் அரசர் எண்டு இருக்கிறாங்கள்.
With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.
Si le Roi a le pouvoir de donner avec des paroles gracieuses et de protéger (ses sujets), ce monde est rempli de sa gloire et il obtient tous les Biens qu’il souhaite.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும். 388
நீதி செலுத்தி பகைவர் வருந்தாமல் பாதுகாத்து வரும் மன்னன் மக்களால் கடவுள் என்று சிறப்பித்து மதிக்கப்படுவான் .
என்கருத்து:
இந்த நீதி வழங்கிறதுக்கும் ,அரசுக்கும் எட்டில வியாழன் கண்டியளோ. றோட்டிலை பஸ்சில பெண்பிரசுகள் போகேலாது. கொலையை செய்யிறவன் , சனங்களிட்டை காசுகளை ஆட்டையை போடிறவன் ராசாவாய் திரியிறான். அப்பாவியள் பேருக்கு சிறையிலை இருக்கிதுகள்.
Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns.
Le Roi qui’ en leur rendant la justice, protège (ses sujets) est considéré comme Dieu par les hommes.
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389
அமைச்சர் முதலியோர் கூறும் உறுதிப் பொருள்கள் வெறுப்பாயிருந்தாலும் அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நற்பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகமே தங்கும் .
என்கருத்து:
இப்பிடியான அரசுகளையும் அரசர்களையும் மியூசியத்திலை தேடினாலும் கிடைக்காது கண்டியளோ . ஈராக்குக்கு மேலை படையெடுக்காதையெண்டு எல்லாரும் தலைகீழாய் நிண்டாங்கள். கேட்டாரோ அமெரிக்க அரசர் . இவரோடை லண்டன் சிங்சாக் வேறை. ரெண்டு கள்ளரும் ஈராக்கை ஆட்டையைப் போட்டதுதான் மிச்சம் .
The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.
Le monde restera (d’une façon permanente) sous l’ombrelle du Roi,
qui a la force de supporter les paroles (de son ministre) qui blessent les oreilles.
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. 390
கொடையும் , இரக்க குணமும் , நீதி தவறாமையும் , ஏழ்மையான மக்களைக் காத்தலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான்.
என்கருத்து:
இப்பிடியான வேந்தருகளுக்கு இந்தக்காலத்திலை மதிப்பு இல்லை ஐயன். மொள்ளைமாரியளுக்கும் முடிச்சவிக்கியளுக்கும் தான் ஐயன் காலம்.
Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal.
Le Roi qui a ces quatre qualités: faire des libéralités, accueillir avec grâce, appliquer équitablement les lois et recouvrer l’impôt suivant la capacité contributive du contribuable, est une lumière parmi les Rois.
Comments
Post a Comment