Skip to main content

பொருட்பால் - அரசியல் - அறிவுடைமை-The Possession of Knowledge -De l'entendement- 421 -430


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா அரண். 421

அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும் , மற்றும் பகைவரால் அழிக்கமுடியாத உள் அரணும் ( கோட்டை ) ஆகும்.

எனது கருத்து :

இதிலை வாழ்க்கைப் படிப்பும் ஏட்டுப்படிப்பும் ஒருத்தனுக்கு சேந்து இருந்தால் தான் , தன்னை சுத்தி இருக்கிற நல்லது கெட்டதுகளை அறியேலும் . தனிய ஏட்டுப் படிப்பு இருந்தால் அவன் படிச்ச கோமாளி. அவனுக்கு வலு சிம்பிளாய் ஆப்பு அடிக்கலாம்.

True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy. 

L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422 

மனத்தை அதுபோன போக்கில் போகவிடாமல் தடுத்து , தீமைகளிலிருந்து விலக்கி , நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும் . 

எனது கருத்து : 

இதை எங்கடை பெரிசுகள் "மதி இழந்தாலும் மந்தி கொப்பிழக்காது" எண்டு சொல்லுவினம். ஆனால் பெரிய ஹைரெக் குற்றவாளியளை பாத்தமெண்டால் நல்லாய் படிச்சிருப்பங்கள் . நல்ல அந்தஸ்த்திலை இருப்பங்கள்? ஏன் அவங்கள் கிறிமினல் வேலை செய்யிறாங்கள்? இந்து அறிவு எண்டிற சாமான் ஏன் அவங்களை திருத்தேலை ?? எண்ட கேள்வியள் எனக்கு வந்து துலைக்குது . 

Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good. 

Freiner l'esprit en l'empêchant de vagabonder, le préserver du mal et le diriger dans la voie du Bien, c'est l'entendement. 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423

எந்தச்செய்தியை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் . 

எனது கருத்து :

கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்காமல் ஒருத்தன் சொல்லுறதை நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒரு முடிவுக்கு நீங்கள் வரச்சொன்னாலும் , ஒருத்தர் சொல்லுறதை ஆள்ஆளுக்கு இப்பிடி நாலுவளத்தாலையும் யோசிக்க வெளிக்கிட்டால் அந்தக்காரியம் ஒழுங்குமுறையா நடக்குமோ? 

Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern. 

De quelque bouche qu'on entende quoi que ce soit, 
en saisir le véritable sens est l'entendement. 

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் 
நுண்பொருள் காண்ப தறிவு. 424 

உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும் , பிறர் கூறும் தெளிவற்ற சொற்களில் நுட்பமான பொருளைக் காண்பதும் அறிவாகும் . 

எனது கருத்து :

நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் என்ன கதைக்கினம் எண்டே விளங்காது. ஆனால் கதைப்பினம் . இவையாலை ஆருக்கு என்ன பிரையோசனம்? அப்பிடி இல்லாமல் ஒருத்தருக்கு சிம்பிளாய் விளங்கிறமாதிரி சொல்லி , மற்றவை வித்துவங்களை காட்டினாலும் அதிலை இருந்து எடுக்கவேண்டியதை எடுக்கிறதுதான் உண்மையான அறிவு பாருங்கோ.

Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in. 

Faire comprendre par un exposé clair et intelligible ce que l'on a à dire, 
saisir le sens subtil des réponses d'autrui. c'est l'entendement. 

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்ல தறிவு. 425 

உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு .அத் தொடர்பில் முதலில் மகிழ்ந்து விரிதலும் வருந்திக் குவிதலும் இல்லாததே அறிவாகும். 

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் அடுகிடைபடுகிடையாப் பழகுவினம். பேந்து சின்ன பிரச்சனையளை பெரிசாக்கி மூஞ்சையைத் தூக்கிவைச்சுக் கொண்டிருப்பினம். இவையள் தரவளியாலைதான் பிரச்சனையளே. உண்மையிலை படிச்சவன் எண்டால் இப்பிடிச் செய்யாமல் எல்லாரையும் விரும்பிறவனாய் இருப்பான்.

Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed. 

Acquérir l'amitié du monde est le fait de l'intelligence. La garder intacte, en ne l'exagérant pas d'abord pour la diminuer ensuite, est le fait de l'entendement. 

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வ துறைவ தறிவு. 426

உலகில் உள்ள சான்றோர்கள் எவ்வழியில் ஒழுகுகின்றார்களோ , அவ்வழியில் தானும் ஒத்து நடப்பதே அறிவுடமையாகும் . 

எனது கருத்து :

ஊரோடு ஒத்தோடு எண்ட ஒரு பழமொழி இருக்கு . இதைத்தான் ஐயனும் தன்ரை றூட்டிலை சொல்லிறார். ஆனால் இந்த வரலாறுகளை புரட்டிப்போட்டவையை கொஞ்சம் வடிவாய் பாத்தியள் எண்டால் இந்தக்குறளின்ரை லொஜிக் டோட்டலாய் உடைஞ்சுபோகுது. வாரலாற்ரைத் திருப்பினவன் எல்லாம் " ஏன் ? எதற்கு ? எப்படி ? " எண்டு ஓடிற உலகத்தைப் பாத்து கேள்வியளைக் கேட்டதாலைதான் வரலாறு முன்னேறிச்சுது . அப்ப எது உண்மையான அறிவு? ஓரோடை ஒத்தோடுறதா?அல்லது திக்குதெரியாமல் ஓடுற ஊரை சரியான றூட்டிலை கொண்டுபோறதா?

As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well. 

Connaître le sens dans le quel marche le monde, conformer sa conduite à son inclination, c'est l'entendement.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் 
அஃதறி கல்லா தவர். 427 

பின்னால் வருவதனை முன்னால் அறியும் ஆற்றல் உடையவரே அறிவுடையவராவர் . அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர் அறிவில்லாதவரேயாவர் . 

எனது கருத்து :

அறிவு எண்டிறது தனிய புத்தகப் படிப்புகளாலையும் , அவை படிக்கிற யூனியளாலையும் கிடைக்கிது எண்டு கனபேர் இருக்கினம். உண்மையிலை வாழ்க்கை அனுபவத்தை கரைச்சுக் குடிச்சவன்தான் நாளைக்கு என்ன நடக்கப்போகிது எண்டு இண்டைக்கே சொல்லி றானே ஒழிய , இந்த படிச்ச கோமாளியள் இல்லை.

The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be. 

Les hommes intelligents prévoient l'avenir; les inintelligents sont ceux qui n'ont pas ce don. 

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில். 428 

அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத செயலாகும் . அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையோர் செயலாகும் . 

எனது கருத்து :

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டு சொல்லுவினம் . ஐயன் சொல்லிற குறளின் படி பாத்தால் அறவாளியள் எல்லாம் கோழையள் மாதிரி எல்லோ சொல்லிறார் .

Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part. 

Ne pas craindre ce qui doit être craint, c'est la sottise. Craindre ce qui doit être craint est au contraire, le propre des hommes intelligents. 

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை 
அதிர வருவதோர் நோய். 429 

வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து அதனின்றும் காத்துக் கொள்ளக்கூடிய அறிவை உடையவர்க்கு , அவர் நடுங்கக் கூடிய வகையில் வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. 

எனது கருத்து :

இதை எப்பிடி நம்பிறது? நாளைக்கு என்ன நடக்கும் எண்டு ஒருத்தனுக்கு தெரிஞ்சால் , இண்டைக்கு அவன் எப்பிடி நிம்மதியா இருக்கேலும் ?? ஒருகதைக்கு ஒருத்தன் பிறக்கேக்கை அவன் இன்னவயசிலை , இன்ன நேரத்திலை தான் சாவன் எண்டு அவனுக்கு தெரிஞ்சால் அவனாலை சந்தோசமாய் தன்ரை வாழ்கையை நடத்த முடியுமா? 

The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free. 

Il n'y a pas de malheur qui fasse trembler les hommes intelligents, 
les quels ont la capacité de prévoir l'avenir et de se garer. 

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர். 430 

அறிவுடையவர் எல்லாம் உடையவராவர் .அறிவில்லாதவர்கள் மற்ற எல்லாப் பொருள்களும் உடையவராயினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர் . 

எனது கருத்து :

என்னதான் பெரிய காசுக்காறனாயோ இல்லை சமூகத்திலை செல்வாக்கு உள்ளவனாய் இருந்தாலும் , மண்டையுக்கை ஒண்டும் இல்லாட்டில் அவன் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான் எண்டு சொன்னாலும் , இண்டையான் நிலமையிலை இப்பிடிப்பட்ட மொள்ளைமாரியளின்ரை கையிலைதான் அதிகாரம் கிடக்கு.

The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed. 

Les hommes qui ont l’entendement ont tout, bien qu’ils ne possèdent rien; ceux qui sont privés de l’entendement n’ont rien, bien qu’ils possèdent tout. 





Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...