Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்-அவா அறுத்தல் -The Extirpation of Desire-L'extirpation du désir- 361 - 370


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து. 361

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து அவா என்று கூறுவர் .

என்கருத்து :

வயசானவை உயிர் போறநேரத்திலை சேடம் இழுத்துக் கொண்டு இருப்பினம் . ஏதாவது முடியாத ஆசையள் இருக்கும் பாலை ஊத்திவிடுங்கோ எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். மனிசனிலை இருக்குற ஆசையள் எண்ட விதை தானாம் திரும்பவும் ஒருத்தரை பிறக்கப்பண்ணும் எண்டு படிச்ச பெரியாக்கள் சொல்லுவினம்.

The wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring.

La cause génératrice de la naissance, pour tous les êtres,
en tous les temps, est le désir.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362

ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்பவேண்டும் . அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை) விரும்பினால்த்தான் உண்டாகும் .

என்கருத்து :

ஒருத்தர் திரும்பி பிறக்க வேண்டாம் எண்ட நிலமைக்கு வாறதெண்டால் ஆசையை இல்லாமல் பண்ணவேணும். ஆனானப்பட்ட முனிவர்மாரே பெண்ஆசையிலை கவிண்டு கொட்டிண்டு போயிருக்கினம். எனக்கெண்டால் ஆசையை நிப்பாட்டிறது நடக்குமெண்டு நினைக்கேலை .

If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desire.

S’il faut faire un souhait, souhaitons la non renaissance.
Celle-ci est assurée par l’évulsion du désir.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல். 363

ஆசையின்மைக்குச் சமனான சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை மறு உலகிலும் அதற்குச் சமமானதொரு பொருளைக் காண்பதரிது.

என்கருத்து :

தண்ணி அடிக்கிறதாலை வாற வில்லங்கங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச விசையம் தான் . அந்த தண்ணியடி ஆசையை நிப்பாட்டுறதாலை வாற சந்தோசமும் ( பணம் , உடல்நலம் , குடும்ப உறவு , சமூக அந்தஸ்த்து ) சொல்லிவேலையில்லை . இந்த சந்தோசத்தை நீங்கள் எங்கைபோனாலும் எடுக்கேலாது .

No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire.

Il n’y a pas, de richesse, supérieure en ce monde à l’absence du désir, ni égale en l’autre monde.

தூஉய்மை என்பது அவாஇன்மை ; மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 364

தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும் அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

என்கருத்து :

எவன் ஒருத்தன் ஆசை இல்லாமல் இருக்கிறானோ அவன்ரை மனசு வெள்ளையாய் இருக்கும் . அதுவும் உண்மையா நடந்தால் தான் இதெல்லாம் ஒருத்தனுக்கு கைவரும் . ஆனால் , இவையள்தரவளியை இப்ப வலைபோட்டு தேட வேண்டிக்கிடக்கு .

Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow.

La pureté est l’absence du désir: celle-ci s’obtient par le culte du Vrai.

அற்றவர் என்பார் அவாஅற்றார் ; மற்றையார்
அற்றாக அற்றது இலர். 365

எதிலும் பற்றில்லாதவர்கள் பிறவியற்றவர்களாவர் . ஆசைக்கு அடிமையானவர்களுக்குப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை.

என்கருத்து :

எவன் ஒருத்தன் மண் ஆசை , பெண் ஆசை ,பொருள் ஆசை இல்லாமல் இருக்கிறானோ ,அவனை முற்றிலும் துறந்த துறவி எண்டும் , அவனுக்கு திரும்பவும் பிறப்பு இல்லை எண்டு ஐயன் சொலிறார். இப்பிடியான ஆக்களை நான் யாழ்பாணத்திலை பாத்திருக்கிறன். ஒரு யோகர் சாமியும் , கடையில் சாமியுமே காணும். ஆனால் ஒருகாலத்திலை நாங்கள் உயர்வாய் மதிச்ச காஞ்சி மடமும் , மதுரை ஆதீனமும் ஐயன் சொன்னதுக்கு தலைகீழாய் நிண்டு நாறுது. இவையளை எப்பிடி நாங்கள் துறவி எண்டிறது ??  ஏன்ரா இந்த பூமியிலை இவ்வளவு சனத்தொகையெண்டு இன்னும் ஒரு விசையமும் எனக்கு விளங்கிது.

Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty.

Ceux que l’on appelle libérés de la renaissance sont ceux qui sont libérés du désir; les autres renaîtront.

அஞ்சுவதோ ரும் அறனே ; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. 366

ஒருவன் அவாவிற்கு (ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம் . ஏனெனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.

என்கருத்து :

ஒருத்தன் கட்டுசெட்டாய் இருக்கவேணுமெண்டால் விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். ஆனால் உங்கை கவிண்டு கொட்டுண்டவையின்ரை ஹிஸ்ரறியளை எடுத்து பாத்தியள் எண்டால் அவையள் ஏதோவளியிலை ஒண்டிலை அளவுக்கு அதிகமாய் ஆசை வைச்சிருப்பினம். அதாலை ஆசையள் இல்லாமல் சீவிக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது

Desire each soul beguiles; True virtue dreads its wiles.

C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். 367

ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால் , அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.

என்கருத்து :

ஒருத்தன் என்னத்தை விதைக்கிறானோ அதைத்தான் அறுப்பான். எவன் கண்டதுக்கெல்லாம் ஆசைப்படாமல் தன்ரை சீவியத்தை கொண்டுபோறானோ , அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். ஆசையை அடக்காதவன் கடைசியிலை அந்த ஆசையாலையே அடிப்பத்திப் போவான் பாருங்கோ .

Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.

A celui qui extirpe ses désirs, le salut vient par la voie qu’il désire.

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் ;அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368

அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை . அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்து கொண்டே இருக்கும் .

என்கருத்து :

சும்மா கிடந்த ராவணன் தேவையில்லாமல் சீதைக்கு மேலை கைவைக்கப்போய் கடைசியில சொந்த நாடும் அவனுக்கு இல்லை. அவனுக்கு பெண் ஆசை இல்லாட்டில் ஒழுங்காய்த்தானே இருந்திருப்பான். ஆசையை அடக்கினவனுக்கு வாழ்க்கையிலை அரையண்டம் இல்லை . அடக்காதவனுக்கு பொங்கு சனிதான். ஆளையே முடிச்சு போடும்.

Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide.

Nulle douleur pour celui qui n’a pas de désir; au contraire, les souffrances s’accmulent sans fin, sur la tête de celui qui a le désir. 

இன்பம் இடையறா து ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். 369

துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால் , நிலையான இன்பத்தைப் பெறலாம் .

என்கருத்து :

சரி ஆசையை விட்டால் இன்பம் கிடைக்கும் எண்டு வைச்சாலும் , ஆசை அல்லது தேடல் தானே மனுசனை அவன்ரை இடத்திலை இருந்து உயத்திக் கொண்டு போகிது?? ஆசை இல்லாட்டில் அவன் சோம்பேறியா அல்லோ போடுவான் ஐயன்? 

When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knows.

Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs, jouit du bonheur perpétuel, même ici-bas.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370

ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால் , அப்போதே அழிவில்லாத இன்பவாழ்க்கையைப் பெறலாம் .

என்கருத்து :

ஆசை எண்டிறது ஓட்டைச் சிரட்டையிலை தண்ணி விடுறமாதிரி. அதுக்கு முடிவே இல்லை . இதாலை ஒருத்தன்ரை வாழ்க்கை எப்பவுமே அரையண்டமாய்தான் இருக்கும். ஆதாலை ஆசையை விட்டால் நல்ல நிம்மதியான சீவியம் கிடைக்கும் எண்டு ஐயன் சொல்லிறார்.

Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state.

Abandonner le désir qui, de sa nature, est insatiable,
confère sur le champ, l’état inchangeable (la perfection).


Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...