Skip to main content

அறத்துப்பால்- துறவறவியல்- துறவு-Renunciation-Du renouncement-341-350


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ ,அந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை

எனது கருத்து :

ஒருத்தனுக்குப் பிடிச்ச சனியள் மூண்டு மண் , பொன் , பெண் . இந்த மூண்டு சனியும் ஒருத்தனை உண்டு இல்லை எண்டு ஆக்கிப்போடும். இதுகளிலை பற்றை வைக்காமல் விட்டால் அவனுக்கு துன்பம் வராது எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை முற்றுந்துறந்த துறவியளாலேயே இந்தப் பெண் எண்ட பற்றை விடேலாமல் கிடக்கு. நம்ம காஞ்சி பெரியவாளும் , பிரேம்ஸ்சும் , நித்தியும் படுகிற பாடுகளைப் பாக்கிறியள் தானே?

From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he!

Si l’on renonce à un objet quelconque, celui-ci ne cause aucune douleur au renonçant.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. 342

துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால் , ஆசைகளையெல்லாம் விட்டுவிடவேண்டும் . அப்படி விட்டுவிட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பங்கள் பலவாகும் .

எனது கருத்து :

சிவசத்தியமாய் எனக்கு இந்தக் குறளின்ரை லொஜிக் விளங்கேலை. ஒரு பொருளிலை பற்று ஆசை வைச்சால் தானே அதாலை இன்பம் கிடைக்கும். உதாரணத்துக்கு ஒருத்தன் ஒரு பெட்டையை அக்கறையா முழு மூச்சோடை சைற் அடிச்சால் தானே காதல் இனிய கலியாணம் எண்ட இன்பம் கிடைக்கும். ஏனோதானோ எண்டு சைற் அடிச்சால் எந்தப்பெட்டை அவனை திரும்பிப்பாக்கும் ??

'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire.

Nombreuses sont les délices qu’obtient naturellement dans cette existence, celui qui renonce à tout. Si on les désire, il faut renoncer au monde.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343

ஐவகைகப் புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருட்களை ஒரே சேர விட்டு விட வேண்டும்.

எனது கருத்து :

சரி ஐயா ஐஞ்சு புலனையும் அடக்கினால் தான் துறவு எண்டு சொல்லுறியள் . ஆனால் இது நடக்கிற காரியமோ? ஆனானப்பட்ட விசிவாமித்திரரே மேனகையிட்டை கவிண்டு கொட்டுண்டவர் எண்டதையும் ஞாபகப்படுத்திறன் .

'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire.

Il faut abolir les sensations que l’on perçoit par les cinq sens et abandonner radicalement; tous les objets que l’on a amassés, en vue de jouir des cinq sens.

இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை; உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. 344

தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும் . பற்று இருந்தால் மீண்டும் மயங்குவதற்கு வழி உண்டாகும்.

எனது கருத்து :

சாமியாப் போறது ஒண்டும் லேசுப்பட்ட வேலையில்லை . அதுக்கு முதல் வேலையே ஆசையளை விடிறதுதானாம். ஒருகாலத்திலை கடையில் சாமி , குடைச்சாமி , யோகர் சாமி எண்டு கண்டிருக்கிறன் . யோகர்சாமீட்டை போற சனத்துக்கு அந்தாள் சொல்லும் " சும்மா கிட எண்டு " . இவையள் இமையமலைக்குப் போய் விலாசம் காட்டின ஆக்கள் இல்லை. இவையிட்டை ஒரு சொத்துப்பத்தும் இருக்கேலை. ஆனால் இப்ப இருக்கிற சாமியளைப் பாத்தால் பேருக்குத்தான் காவி , ஆனால் நம்பர் வண் மில்லியனர் பாருங்கோ .

'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew.

Ne rien posséder est la loi de la pénitence. Posséder un seul objet détruit la pénitence et ramène le vertige. 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையானதாகும் . ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

எனது கருத்து :

இந்த சாமியளையும் அவையின்ரை சொத்துப்பத்துகளையும் பாத்தால் , அவை அரசாங்கத்துக்கு வரி கட்டினமோ இல்லையோ திரும்பி பிறக்கிறதுக்கு தங்கடை சுமையளை கூட்டிக்கொண்டுதான் இருக்கினம் எண்டிறது கிளியறாய்த் தெரியுது .

To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?

A celui qui s’efforce d’éviter la renaissance, le corps est de trop.
Qu’adviendra-t-il, s’il désire encore d’autres biens.

யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் 346

உடலை " யான் "எனவும் , பொருட்களை "எனது" எனவும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்கின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் போவான் .

எனது கருத்து :

இங்கைதானே பிரச்சனையே . நான் என்ரை எண்டு சொல்லாமல் " நாம் " " எமது " எண்டு சொல்லுங்கோ . உங்கடை சொண்டு மற்றச் சொண்டோடை முட்டும் . பக்கத்தில இருக்கிற சனமும் உங்களோடை ஒட்டும் . இதுகளை பழக்கத்திலை கொண்டுவாங்கோ பேந்து உங்களைப் பிடிக்கேலாது .

Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine.

Celui qui déracine l’orgueil de dire: ‘‘ Moi, le mien’’ entre dans la région céleste, supérieure au séjour des dieux.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு 347

"யான் " "எனது "இருவகைப் பற்றுக்களையும் விடாதவரை துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன .

எனது கருத்து :

" நான் " எண்டிறது அட்டமத்து சனியெண்டால் " என்ரை " எண்டிறது பத்திலை வியாழன். ரெண்டும் ஒருத்தனை சிப்பிலி ஆட்டிபோடும். நான் முழுக்க இதுகளை உங்களை விடச்சொல்லி கேக்கேலை. நீங்கள் முடிஞ்சவரை ஊக்கம் எடுத்தியள் எண்டால் சந்தோசமாய் இருப்பியள் பாருங்கோ .

Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp.

Les douleurs s’attachent à celui qui est rivé à ses attachements et ne le quittent pas.

தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 348

முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர் ; அவ்வாறு துறக்காத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர் ஆவர் .

எனது கருத்து :

இதைப் படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் தான் திரும்பத் திரும்ப மண்டையுக்கை அடிக்குது....... அப்பத்தையான் முனிவர்மாரிலை இருந்து இப்பத்தையான் சாமியள் வரை பெட்டயள் விசையத்தைலையும் , அதாலை வந்த காமத்தையும் ஏன் கட்டுப்படுத்தேலாமல் போனது பாருங்கோ?

Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net.

Ceux qui renoncent définitivement à tout obtiennent leur salut. Les autres sont gagnés par le vertige et sont pris dans le filet (de la renaissance). 

பற்றுஅற்ற கண்ணே பிறப்பறுக்கும் ;மற்று
நிலையாமை காணப் படும். 349

இருவகைப் பற்றும் அற்றபொழுதே , அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும் . இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வரும் .

எனது கருத்து :

ஒருகுளத்திலை தாமரை இலைக்கும் தண்ணிக்கும் உள்ள தொடர்புதான் , மனுசனுக்கும் ஆசையளுக்கும் இருக்கவேணும். இல்லையெண்டால் அந்த ஆசையளாலையே அவன் திருப்பித் திருப்பிப் பிறப்பனாம் எண்டு ஐயன் சொல்லுறார்.

When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability.

Le renoncement détruit instantanément la renaissance;
tout autre moyen se heurte à l’instabilité.

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை ;அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

பற்று இல்லாதவனாகிய இறைவனது பற்றை மட்டுமே பற்றுக . உலகப் பற்றுகளை விடுவதற்கு அப்பற்றை பற்ற வேண்டும் .

எனது கருத்து :

சரி ஐயா நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள் கஸ்ரப்படுற நேரத்திலை  எந்த இறைவனும் வந்து காப்பாத்தி விடேலையே ஐயா ? வர வர எனக்கு இந்த இறைவனிலேயே நம்பிக்கை போட்டுது ஐயா .

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.

Pour renoncer à tout attachement, il faut suivre la voie du salut,
tracée par Celui qui a vaincu l’attachement et s’y tenir fermement.

 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...