Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் - ஒப்புரவு அறிதல்-The knowledge of what is Befitting a Man's Position-Savoir pratiquer la bienfaisance- 211 - 220


 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. 211

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும் ?மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை .

எனது கருத்து :

ஒருத்தர் ஒராக்களுக்கு செய்யிற உதவியள் வந்து ஒண்டும் எதிர்பாத்து செய்யிறலை . அது தானாய் ரத்தத்தில ஊறி வாற விசையம் . இந்த மழையெல்லாம் எனக்கு ஏதாவது செய் எண்டு சனங்களிட்டை கேட்டுக்கொண்டே பெய்யுது ?

Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given?

De même qu’aux nuages qui versent la pluie, le monde ne fait rien en retour, de même les bienfaits n’exigent pas réciprocité.

தாள்ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212

ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருள் அனைத்தும் தகுதியுடைய சான்றோர்க்கு உபகாரம் செய்வதற்கேயாம் .

எனது கருத்து :

நாங்கள் கஸ்ரப்பட்டு வேலை செய்யிறம். ஒரளவுக்கு வசதியா இருக்கிறம். ஆனால் ஊரிலை எவ்வளவோ சின்னப்பிள்ளையள படிக்க வசதியில்லாமல் , பள்ளிக்கூடம் போகேலாமல் இருக்கினம் . நாங்கள் பெரிய எடுப்பாய் ஒண்டும் செயவேண்டாம். இந்தப் பிள்ளையள்ளை ஒராளை படிக்கவைச்சாலே அது ஒரு புண்ணியமன விசையம். இதுக்கு மில்லியன்கணக்கில தேவையில்லை . ஒரு நாளைக்கு கபே குடிக்கிற 1 யூறோவே காணும் .

The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours.

Créée par le travail, la richesse de celui qui en est digne, lui est dounée pour faire la charité. 

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213

விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும் , பிறர்க்கு உபகாரம் செய்வதைப் போல நல்லவனவாகிய வேறு செயல்களைப் பெறுதல் அரிதாம்.

எனது கருத்து :

இப்ப உதவி செய்யிற ஆக்கள் கொஞ்சம் குறைஞ்சு கொண்டுதான் போகினம் . இதுக்கு காரணமும் இல்லாமல் இல்லை . இப்ப , வந்தவரைக்கும் லாபம்தான் எண்டு ஆட்டையை போடிற சனங்கள்தான் கூட . ஆனால் இதுகளைப் பாக்காமல் உதவி ஒத்தாசையாய் இருக்கிறவன் தான் மனிசன்.

To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below.

Au Ciel comme sur la terre, il est difficle de faire une meilleur couvre que d’obliger (son prochain).

ஒத்தது அறிவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214

உலகிற்கு உதவும் நற்பண்புகள் உள்ளனவே உயிர் வாழ்பவன்; மற்றவன் இறந்தவனுக்கு ஒப்பானவன் .

எனது கருத்து :

இதைத்தான் நான் முதலும் சாடையாச் சொன்னனான். மற்றவனுக்கு உதவி ஒத்தாசையா இல்லாமல் , தான் தன்ரை குடும்பம் எண்டு இருக்கிற கூட்டங்கள், அதுகள் சீவிச்சாலும் செத்த சவங்கள் எண்டு ஐயன் ரென்சனாகி சொல்லியிருக்கிறார் .

Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place.

Celui qui sait ce qu’il faut faire de convenable est un homme vivant, tout autre est rangé parmi les morts. 

ஊருணி நீர்நிறைந்து அதற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு. 215

உலக நன்மையை விரும்பிச் செய்கின்ற பேரறிவாளன் பெற்ற செல்வம் ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிறைந்தாற்ப் போன்று பலருக்கும் பயன்படும்.

எனது கருத்து :

இறைக்க இறைக்கிற கிணறுதான் ஊறும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம் . நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குடுக்கிறியளோ அவ்வளவுக்கு உங்கடை செல்வமும் , நீங்கள் செய்ததாலை வாற பயனும் கூடும் . அள்ள அள்ள குறையாத குளத்து தண்ணி மாதிரி நீங்கள் செய்யிற உதவியள் எல்லாரையும் தூக்கிவிடும்

The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies.

La richesse du grand Sage qui désire se conformer et se conforme aux us et coutumes du monde, ressemble à la pièce d’eau du village qui est rempli jusqu’aux bords.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். 216

உபகாரம் செய்பவனிடத்தில் செல்வம் சேருமானால் அது ஊரின் நடுவில் எல்லார்க்கும் பயன் தரக்கூடிய மரம், பழம் பழுத்தாற்போல யாவர்க்கும் பயன்படும் .

எனது கருத்து :

ஐயன் சொன்னது சரிதான் . ஆனால் , கல்லைக் கண்டால் நாயைக்காணேலை , நாயைக் கண்டால் கல்லைக் காணேலை எண்ட கதையாய் நிலைமை இப்ப பிழையாய் கிடக்கு . உதவி செய்யிற மனம் உள்ளவனிட்டை காசுகள் இல்லை . எல்லாம் மொள்ளமாரியள் , முடிச்சவிக்கியளிட்டைத் தான் பாருங்கோ காசு பணங்கள் கிடக்கு . இதாலை ஆருக்கு என்ன லாபம் ?

A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart.

Si l’opulence échoit à un homme charitable elle ressemble à l’arbre utile situé au milieu du village et chargé de fruits mûrs. 

மருந்துஆகித் தப்பா மரத்துஆற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 217

பெருந்தன்மை உடையவனிடம் செல்வம் உண்டாகுமானால் அது தன் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் மரத்தைப் போன்றது .

எனது கருத்து :

வேப்பம் மரம் அதின்ரை தலையிலை இருந்து கடைசி வேர் வரை பிரையயோசனமாய் மற்றவைக்கு இருக்கிது .அதைமாதிரித்தான் உதவிசெய்யிறவனிட்டை வசதியள் இருந்தால் , மற்றவைக்கு பிரையோசனமாய் இருப்பான்.

Unfailing tree that healing balm distils from every part,Is ample wealth that falls to him of large and noble heart.

Se trouve-t-elle entre les mains d’un homme de grande générosité, la richesse est pareille à l’arbre, dont toutes les parties servent de médicaments.

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். 218

தாம் செய்யத் தக்கவற்றை நன்கு அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் இல்லாத காலத்தும் பிறர்க்கு உதவி செய்வதற்கு மனம் தளரமாட்டார்.

எனது கருத்து :

கர்ணமகாராசா அர்சுனன் போட்ட போடில கீழைவிழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் . அப்பகூட இந்தக் கண்ணன் சும்மாயிருக்கேலை. மாறுவேசம் போட்டு அவற்ரை கொடை எல்லாத்தையுமே தானமாய் வாங்கிப்போட்டான். என்ன கஸ்ரம் வந்தாலும் உதவிசெய்யிறவன் எந்த நேரத்திலையும் உதவி செய்வான் எண்டதைச் சொல்லுறன் .

E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true.

Celui-là a le sentiment éclairé du devoir qui ne se lasse pas de faire la charité, même quand ses ressources ont diminué. 

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. 219

பிறர்க்கு உதவி செய்து ஒழுகும் கடமையை இயலபாக உடையவருக்கு , பிறர்க்கு உதவி செய்ய முடியாமல் வருந்துவதே அவருக்கு வறுமையாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் ஏழையாய் போய்விட்டான் எண்டு சொல்லுறதுக்கு வரைவிலக்கணமே , அவனால மற்றவனுக்கு உதவி செய்யேலாமால் போவதை வைச்சுதான் எண்டு ஐயன் சொல்லுறார் .

The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none.

Devenir pauvre pour l’homme généreux c’est regretter l’impossibilité où il est de ne pouvoir faire des libéralités. 

ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து 220

பிறர்க்கு உபகாரம் செய்வதானால் தனக்குப் பொருட்கேடு உண்டாகும் என்றால் , அப்பொருட்கேடு தன்னை விற்றாவது கொள்ளத் தக்க தகுதியை உடையதாகும்.

எனது கருத்து :

ஒருத்தர் உதவி செயிறதாலை நாளைக்கு தனக்கு கெட்ட பேர் வருமெண்டு சொன்னால் அவரை வித்துத்தான் அந்தக் கெட்டபேர் வருமெண்டு ஐயன் ரென்சனாகிப் போய் இதிலை சொல்லுறார் .

Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum.

Si la charité peut antraîner la perte de la richesse, elle vaut qu’on l’achète, en se vendant soi-même.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...