Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்- இன்னா செய்யாமை- Not doing Evil-Ne pas faire de mal-311-320


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 311

சிறப்பத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் இப்ப உள்ள நிலமையில இப்பிடிபட்ட ஆக்களை தேடிப் பிடிக்கிறது கஸ்ரம் . செல்வந்தனாய் வருகினமோ இல்லையோ தனக்கு சகுனப்பிழையெண்டாலும் பறவாயில்லை மற்றவனுக்கு மூக்கு உடைஞ்சால் சரி எண்ட நிமையள்தான் இப்ப இருக்கிற சனத்திட்டை .

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.

Certes, on peut acquérir la richesse qui procure les honneurs en faisant du mal au prochain. Ne jamais faire de mal au prochain est la qualité des hommes sans tâche.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 312

பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல் , நல்லோர்களின் பண்பாகும் .

எனது கருத்து :

இதைத்தானே நாங்களும் சிங்களத்துக்கு செய்தம் ஆனால் உலகம் எங்களுக்கு என்ன அலாத்தியே எடுத்தது??

Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure.

Ne pas faire de mal en retour, à ceux qui en ont fait par haine,
est la qualité des hommes sans péché.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். 313

காரணம் இல்லாமல் தீங்கு இழைப்பவர்களுக்கும் பதிலுக்கு தீங்கு செய்யாதிருத்தல் நலம் இல்லையேல் என்றுமே துயரம் தான் கிட்டும்

எனது கருத்து :

நாங்கள் ஒரு பிழையும் விடாமல் ஆரும் எங்களுக்கு பிழை விட்டால் நாங்களும் ஏட்டிக்கு போட்டியா கேம் கேக்ககூடாது. அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும். எண்டாலும்,  அப்பிடி இருக்கிறவைக்கு இந்த சனங்கள் லூசுப் பயல் எண்டு தானே சொல்லுது ?

Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring.

Répondre par le mal aux ennemis qui vous ont voué la haine bien que vous ne leur ayez fait aucun mal, amène inévitablement la douleur. 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். 314

தமக்கு தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலேயாகும்.

எனது கருத்து :

ஒருத்தன் எங்களுக்கு ஆப்படிச்சுப் போட்டான் எண்டால்  நாங்களும் யாரிக்கு யாரியா நிக்காமல் அவனுக்கு கேந்தி வாறமாதிரி ஒரு நல்ல விசையத்தை செய்துபோட்டு அதையும் மறந்து போடவேணும் எண்டு சொன்னாலும் ; இந்தக்காலத்தில இப்பிடி நடந்தால் கேணைப்பயல் எண்டு சொல்லுறாங்கள் ஐயா .

To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.

Confondre ceux qui vous ont fait du mal, en leur faisant du bien, c’est les punir.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. 315

மற்றோர் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தை தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ

எனது கருத்து :

சிலபேரைப்பாத்தியள் எண்டால் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு அலப்பரை பண்ணுவினம் . மற்றவனுக்கு உயிர் போற பிரச்சனையள் வரேக்கை முதல் காய்வெட்டிறாக்கள் இவையளாய்த்தான் இருப்பினம். இவையள் தரவளி இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான். 

From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain?

Quelle est l’utilité de l’intelligence, si on ne considère pas le malheur d’autrui comme le sien et si on le répare pas?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். 316

துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்

எனது கருத்து :

இந்த குறளில சொன்ன விசயத்தை ஐயன் அந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி சொல்லியிருக்கிறார் எண்டு நினைக்கிறன். இப்ப சனம் இப்பிடியில்லை . சகுனப்பிழையெண்டாலும் மற்றவன்ரை மூக்கு உடைஞ்சால் சரி எண்டு நினைக்கிற கோஸ்ரியள்தான் கூட இருக்கினம் .

What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain.

Ne pas faire à autrui ce que l’on sait être le mal est digne des accètes.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 317

எங்கும் எப்பொழுதும் , துயரத்தை தரும் காரியத்தை சிறிதளவும் மனம் அறிந்தும் செய்தலாகாது அதுவே சிறந்த அறமாகும் .

எனது கருத்து :

ஒரு மனுசன் எண்டால் மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேணும் . ஆனால் இண்டையான் நிலமையிலை மற்றவனுக்கு இடைஞ்சல் குடுக்கறவனைத்தானே சனம் பெரிய ஆக்களாய் பாக்கினம் .

To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.

Ne faire en aucun temps, à qui que ce soit et si peu que ce spit,
volontairement le mal est une vertu capitale.

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்உயிர்க்கு இன்னா செயல். 318

பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிருக்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன் , பிற உயிர்களுக்குத் தான் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ ?

எனது கருத்து :

நல்ல கேள்வி கேட்டிருக்கிறியள் ஐயா. இப்ப சனம் என்னவெண்டால் " யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமே " எண்ட பொலிசி தான். இல்லாட்டில் அமெரிக்கன் உழுது தள்ளின யப்பான் காறன் எங்கடை சனத்தை இன அழிப்புச் செய்யிறதுக்கு கொடுக்கு கட்டுவனோ?

Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?

Pourquoi donc faire aux autres ce que, par expérience,
l’on sait susceptible de faire du mal à sa propre vie?

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

ஒருநாளின் முற்பகலில் ஒருவருக்கு தீங்கு செய்தால் , செய்தவருக்குத் தீங்குகள் அன்று பிற்பகலுக்குள் தாமாகவே வந்து சேரும்.

எனது கருத்து :

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்டு பெரிசுகள் சொன்னதுதான் .... ஆனால் , தமிழனுக்கு தொடர்ந்து தீமையே செய்த சிங்களமும் அதின்ரை கூட்டாளியளுக்கும் பிற்பகல் போனாலும் எப்பிடி ஐயா பேராய்புகழாய் இருக்கினம்?

If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you.

Si vous faites du mal aux autres le matin, le malheur vous atteindra de lui-même le soir.

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோய்இன்மை வேண்டு பவர். 320

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவரயே துன்பம் வந்தடையும், ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர் , எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது .

எனது கருத்து :

அடாது செய்வான் படாது படுவான் எண்டு பெரிசுகள் சொல்லுவினம். ஒருத்தன்ரை சீவியம் கிளீனாய் பிரைச்சனையள் இல்லாமல் இருக்கவேணும் எண்டால் மற்றவனை நோண்டிக் கொண்டிருக்கக் கூடாது . ஆனால் இப்ப தனக்கு பிரச்னையள் வந்தாலும்  மற்றவனை எப்பிடிக் கவுக்கலாம் எண்டு தான் சனங்கள் நடக்கிதுகள் .

O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.

Le mal retombe sur celui qui le fait. Si vous désires vous garder du mal, ne le faites pas vous-même. 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...