அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.241
அருளால் வரும் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வமாகும் , அதைத் தவிர்த்து மற்றைய பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தோரிடமும் உள்ளன .
எனது கருத்து:
இந்தக்குறள் சொல்லுற விசயம் இந்தக்காலத்தில சரிவருகுதில்லை. என்னதான்படிச்சு நல்ல அறிவாளியாய் இருந்தாலும் அவினிட்டை கையில நாலு காசில்லையெண்டால் ஒரு குருவியும் எட்டிப்பாக்காதுகள் .
Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possess.
Richesse de miséricorde est richesse d’entre les richesses. Richesse de biens se trouve même chez les hommes vils.
நல்ஆற்றின் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்
தேரினும் அஃதே துணை. 242
பலவழிகளிலும் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே உயிருக்கு உற்ற துணையாக இருக்கின்றது . ஆதலால் நல்லமுறையில் ஆராய்ந்து தெளிந்து ஒவ்வொருவரும் அருள் உடையவராகுக !
எனது கருத்து:
எப்பிடித்தான் தலைகீழாய் யோசிச்சுப் பாத்தாலும் ஒரே ஒரு வழிதான் திறமானது . மனச்சாட்சிப்படி நேர்மையா நடக்கிறதுதான் நல்லவிசயம் .
The law of 'grace' fulfil, by methods good due trial made,Though many systems you explore, this is your only aid.
Suivez la bonne méthode pour examiner, considérez toutes choses et devenez miséricordieux. L’investigation des divers systèmes religieux indique la miséricorde comme le seul compagnon (de cette vie).
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். 243
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுகிற அருள் நிரம்பியவர்கள் இருள் சூழ்ந்த கொடிய நரகத்தை அடையமாட்டார்கள் .
எனது கருத்து:
ஆராவது எல்லா உயிரிலையும் பட்சமாய் இருப்பினமெண்டால் அவை நரகச் சீவியம் இல்லை எண்டு சொன்னாலும் , நடமுறையில அப்பிடியே நடக்கிது ?
They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides.
Ceux qui ont le cœur miséricordieux n’entrent pas dans le monde des souffrances et des ténèbres.
மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை. 244
உயிரினங்களைக் காத்து அவற்றிடம் இரக்கம் காட்டி வாழ்பவனுக்குத் தன் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.
எனது கருத்து:
எல்லா உயிரிலையும் அன்பு வைச்சு அதுகளை ஆதரிக்கிற ஒருத்தர் தன்ரை உயிரைப்பற்றி கவலைப்படமாட்டார். எப்பிடியெண்டால் அன்பு காட்டிற உயிர்களே அவரைச்சுத்தி ஒரு வேலிமாதிரி இருக்கும்.
Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel.
Ceux qui compatissent aux êtres animés et les protègent ne courent pas de danger qui les fassent craindre pour leur vie
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலம் கரி.245
அருள் உடையவராக வாழ்பவர்க்குத் துன்பம் இல்லை காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகமே இதற்குச் சான்றாகும்.
எனது கருத்து:
எப்பிடி இந்தக் காத்து உலகத்தைச்சுத்தி நிறைஞ்சு அதில இருக்கிற சனங்களை காக்குதோ , அதைமாதிரி மற்றவையின்ரை பிரச்சனைய தன்ரை பிரச்சனைபோல பாத்து அன்பு இரக்கத்தோட வாழுறவைக்கு உலகத்தில துன்பமே இருக்காது .
The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know.
Pour ceux qui sont miséricordieux, aucune douleur n’existe: témoins ceux qui vivent sur cette grande étendue de terre fertile, entourée d’air.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார். 246
அருளின்றி தீவற்றைச் செய்து வாழ்கின்றவர் உறுதிப் பொருளாகிய அறத்தை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவர் ஆவர் .
எனது கருத்து:
ஊருலகத்தில ஒருத்தன் செய்யாத எளியவேலையளை செய்து கொண்டு சீவிக்கிறவை ,தாங்கள் ஏன் பிறந்தம் எண்ட நோக்கத்தையும் மறந்து சொறிநாயளைப்போல ஒண்டுக்கும் வக்கில்லாமல் இருப்பினம் .
Gain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do.
Ceux qui dénués de miséricorde commettent des actes non miséricordieux, sont disent les gens de Bien, ceux qui n’ont pas recherché la vertu (dans les vies précedentes) et ont oublié leurs souffrances.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247
பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகில் இன்பமான வாழ்க்கை இல்லாதது போல ,அருள் இல்லாதவர்க்கு மேல் உலகத்து வாழ்வு இல்லையாம் .
எனது கருத்து:
கையில காசுபணம் இல்லாதவனுக்கு எப்பிடி ஒரு சந்தோசமான சீவியம் இல்லையோ அதேமாதிரித்தான் ஈனிரக்கம் இல்லாதவைக்கும் ஒழுங்கானசீவியம் இல்லை. எனக்கு மேல் உலகத்திலை எல்லாம் நம்பிக்கை இல்லை.
As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot.
Pour qui n’a pas de Biens, le plaisir de ce monde n’existe pas; de même pour qui n’a pas de miséricorde, le bonheur de l’autre monde n’existe pas.
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. 248
பொருளை இழந்தவர் பின்பு ஒரு சமயத்தில் அப்பொருளைப் பெற்று சிறப்படைதல் கூடும். அருளை இழந்தவர் அழிந்தவரேயாவர். அவர்கள் எக்காலத்தும் அந்நிலை விட்டு நீங்கி உயர்வடைதல் இயலாது.
எனது கருத்து:
கையில பொருள் பண்டம் இல்லாட்டில் எந்தவயசிலையும் எப்பவும் ஒருத்தன் அதை எடுக்கலாம் . ஆனால் ஈன இரக்கம் எண்ட குணம் இல்லாட்டி அந்தக்குணத்தை எப்பவும் எடுக்கேலாது எண்டதையும் விளங்கிக் கொள்ளவேணும் .
Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
Qui est dépourvu de Biens, fleurira un jour. Qui est dépourvu de miséricorde est perdu pour toujours et sans rémission.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டுஆற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249
அருள் இல்லாதவன் மெய்நூல்களைப் பயின்றும் மெய்யுணர்வைப் பெறமாட்டான் .அவ்வாறே அருளற்றவன் நல்வினை செய்தாலும் நற்ப்பயனைப் பெறமாட்டான்.
எனது கருத்து:
ஒரு விளப்பம் இல்லாதவனால ஒரு புத்தகத்தின்ரை உள்விசையத்தை விளங்கிக்கொள்ளேலுமோ ? அதைமாதிரித் தான் ஈன இரக்கம் இல்லாதவன் செய்யிற அறமும் .
When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charity.
Examinez la vertu pratiquée par un homme sans miséricorde; elle est pareille, à la découverte que fait un homme sans intelligence, du Vrai Etre.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. 250
அருள் இல்லாத ஒருவன் தன்னைவிட வலிமையில் குறைந்தவர்களைத் துன்புறுதச் செல்லும் போது தன்னைக் காட்டிலும் வலியவர் முன்பு தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைத்துக் கொள்ள நேரிடும்
எனது கருத்து:
பக்கத்து வீட்டு சின்னப்புவோடை தனகலாம் ஏனெண்டால் அந்தாளுக்கு வயசு போட்டுது ஆனால் முன்வீட்டு சின்ராசாவோடை இதே சேட்டை விடேலாது, ஆள் இயக்கம் .
When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe.
Toi qui t’élances contre un plus faible, considère ta situation, lorsqu’un plus fort se jette sur toi.
Comments
Post a Comment