Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்- தீவினைஅச்சம் -Dread of Evil Deeds- Crainté du mal- 201 - 210


தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201

தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் . ஆகவே அவை தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அஞ்சப்பட வேண்டியவை .

எனது கருத்து :

கத்தியை எடுத்தவன் கத்தியாலதான் அழிவான் எண்டு ஐயன் இதிலை சொன்னாலும் , ஒருத்தனை சாக்காட்டிற நோக்கத்தில ஒருத்தன் வரேக்கை தேவாரம் படிக்கச் சொல்லுறது அவ்வளவு சரியா எனக்குப் படேலை .

With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.

Les pure se cœur redoutent le vertige du mal, il n’en va pas ainsi des pécheurs.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 202

தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீயசெயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும் .

எனது கருத்து :

ஒரு கெட்டவேலை செய்ய முதல் நாலு வளத்தாலையும் யோசிக்க வேணும். இந்தக் கெட்டவேலையள் நெருப்பிலும் பாக்க கெட்ட சாமான். 

Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe.

Les mauvaises actions engendrent la souffrance, elles sont à redouter plus que le feu.

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். 203

தமக்கு தீங்கு செய்யாதவருக்கும் தாம் பதிலுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலை அறிவினுள் எல்லாம் தலைசிறந்த அறிவு என்று கூறுவர்.

எனது கருத்து :

ஒருத்தன் எங்களுக்கு கெட்ட வேலையொண்டு செய்தால் நாங்களும் திருப்பி அதையே செய்தால் எங்களுக்கும் செய்தவனுக்கும் வித்தியாசம் தெரியாது .காலம் தான் சனத்துக்கு ரெண்டு பகுதியையும் அடையாளம் காட்டும் .

Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.

Ne pas rendre le mal pour le mal est, dit-on, la première des sagesses.

மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204

பிறனுக்கு தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது . நினைத்தால் அப்படி நினைத்தவனுக்கு கேடு செய்ய அறம் நினைக்கும் .

எனது கருத்து :

அரசன் அண்டறுப்பான் தெய்வம் நிண்டு கொல்லும் எண்டு சொல்லுவினம் இப்பவெல்லாம் ஆராவது எளியவேலையள் செய்தால் உடனை உடனை அதின்ரை றியாக்சன் தெரியும் அதால மறந்தும் ஆருக்கும் போய் கெட்ட வேலையள் செய்து போடாதையுங்கோ

Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.

Ne pense pas, au moins par oubli, à l’acte qui cause le malheur de ton prochain. Sinon, le dieu de la Justice pensera au moyen de causer ton malheur.

இலன்என்று தீயவை செய்யற்க ; செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 205

"யான் வறியவன் " என்று நினைத்து தீய செயல்களைச் செய்யக்கூடாது . செய்தால் பொருள் உடையவன் ஆகாது ,முன்னிலும் வறியவனாகித் துன்புறுவான் .

எனது கருத்து :

என்னதான் பசிச்சாலும் மற்றவன்ரை பொருளுகளிலை கைவைக்கக் கூடாது முதல் நல்ல இனிப்பாய் இருக்கும் .பேந்து அதுவே அவடை நடுறோட்டிலை நிக்கிறதுக்கும் அலுவல் பாக்கும் எண்டு ஐயன் சொன்னாலும் , பசிவந்தால் பத்தும் பறந்து போகும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கிறதையும் யோசிக்கத்தான் வேண்டிக்கிடக்கு .

Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still.

Ne fais pas le mal parce que tu es pauvre; si tu le fais; tu deviendras plus pauvre encore.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க ; நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். 206

துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருந்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்யக் கூடாது .

எனது கருத்து :

உப்பைத் திண்டால் தண்ணி குடிக்கவேணும் எண்டும் , வினை விதைச்சால் வினையைத்தான் அறுக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கனம் . தனக்கு கஸ்ரமே வரக்கூடாது எண்டு நினைக்கிறவன் , மற்றவனுக்கு ஒருக்காலும் எளியவேலையள் பாக்கமட்டான் .

What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done.

Ne fais pas à autrui, le mal dont tu ne désires pas souffrir toi-même.

எனைப்பகை உற்றாரும் உய்வர் ; வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207

எவ்வெளவு பெரிய பகையை அடைந்தவரும் ஒருவகையில் அதிலிருந்து தப்பிப் பிழைத்தல் கூடும் . ஆனால் ஒருவர் செய்த தீவினையாகிய பகை , செய்தவரை விட்டு நீங்காமல் பின் தொடர்ந்து அவரை அழிக்கும் .

எனது கருத்து :

ஆராவது காதலிச்சு கலியாணம் செய்தால் , முதல்லை தாய்தேப்பன் கேம் கேப்பினம் . பேந்து ஒரு பேரப்பிள்ளை பிறக்க சமாதானமாய் போவினம் . ஆனால் , இதையே சாட்டி ஆராவது தாய்தேப்பனுக்கு செய்வினைசூனியம் செய்தினமெண்டால் , அவையின்ர சந்ததியே உருப்படாது . இதைத் தான் ஐய்யனும் சொல்லிறார் .

From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay.

On échappe à toute haine (quelque féroce qu’elle soit) mais celle causée par le mal (qu’on a fait) poursuit le coupable et le tue.

தீயவை செய்தார் கெடுதல் , நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் துஅற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் துன்புறுவர் என்பது நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியில் தங்கியிருத்தலைப் போன்றது .

எனது கருத்து :

ஒருத்தர் மற்றவைக்குச் செய்யிற கெட்ட வேலையள் , அவையளின்ரை மனச்சாட்சி போலையும் , அவையின்ர சொந்த நிழல் போலையும் தொடர்ந்து வருமாம் .

Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends.

Le mal que l’on fait suit le coupable, ainsi que l’ombre suit l’homme, partout sans jamais le quitter.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால். 209

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ நினைத்தால் அவன் எந்தவிதமான எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது .

எனது கருத்து :

ஒருத்தர் தான் தான் நல்லாயிருக்க வேணும் , எல்லாம் தனக்குத்தான் கிடைக்கவேணும் எண்டு நினைக்கிறதிலை பிழையில்லை . ஆனால் மற்றவனை விழுத்தி கெட்டவேலையள் செய்து இப்பிடி வரக்கூடாது.

Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near!

Si l’on s’aime soi-même, il faut s’abstenir de ce qui peut participer du mal.

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின். 210

ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால் அவனுக்கு எந்தத் துன்பமும் வராது என்பதாகும் .

எனது கருத்து :

இதுக்கு விபீசணனும் கர்ணனும் நல்ல உதாரணம் .இந்த ரெண்டு பேருமே சேர்ந்த இடம் பிழையான இடம் எண்டாலும் , கெட்ட வேலையள் செய்யாமல் வட்டதால கடைசியில தப்பீச்சினம் .

The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide.

Si, au lieu de e’engager dans la bonne voie, quelqu’un ne fait que du mal, sache qu’il est un professionnel du mal.




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம