அறத்துப்பால்-துறவறவியல் கூடாவொழுக்கம்-Inconsistent Conduct-Bonne conduite-De la conduite qu’on de doit pas tenir-271- 280
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 271
வஞ்சகனுடைய தீயொழுகத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்சபூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும் .
எனது கருத்து :
ஊரை அடிச்சு உலையிலபோடுறவை அந்த நேரத்திலை நினைக்கலாம் தாங்கள் வெண்டிட்டினம் எண்டு ஆனால் எண்டைக்காவது ஒருநாள் அவையின்ர உடம்பு பஞ்சபூதங்கள் அவையைப் பாத்து சிரிக்கும் .
Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within.
Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite.
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றம் படின். 272
தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத் தோற்றம் என்ன செய்யும் ?
எனது கருத்து :
தனக்கு பிழை எண்டு தெரிஞ்சும் ஒருத்தர் பிழை விடுகிறார் எண்டால் அவர் எப்பிடியான தவக்கோலங்கள் போட்டும் வேலையள் இல்லை.
What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault?
De quelle utilité est l’apparence de pénitent sublime comme le ciel, à celui qui conscient de ses péchés, y persiste.
வலிஇல் நிலைமையான் வல் உருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.273
மனக்கட்டுப்பாடு என்னும் வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும் .
எனது கருத்து :
இதுக்கு எங்கடை இந்தியாவை சொல்லலாம். ஆன்மீகம் , இந்துமதக்கலாச்சாரத்தை கட்டயாழுகிறம் எண்டெல்லாம் சொல்லி ,ஒரு இனத்தையே வேரோடை அழிச்ச வேலை .அதாவது பசுத்தோல் போத்தின புலி .
As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within.
Sans avoir le pouvoir de maitriser sa volonté, celui qui adopte l’apparence des pénitences (qui ont ce pouvoir) ressemble à la vache qui broute les cultures, recouverte d’une peau de tigre (pour n’être pas chassée par les cultivateurs).
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் துஅற்று. 274
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாதவற்றை செய்ய விரும்புதல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பதற்குச் சமமாகும் .
எனது கருத்து :
ஆனானப்பட்ட இந்திரனே கள்ளப்பூனைபோலை கௌசிகமுனிவற்ற வேசம் போட்டுத்தான் அகலிகையை தன்ரைபக்கம் எடுத்தவன் எண்டால் பாருங்கோ. இது எப்பிடி எண்டால் இந்தியாவும் அவையின்ரை கூட்டாளியளும் புலி பிடிச்ச கதையைப்போலை கிடக்கு.
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.When, clad in stern ascetic garb, one secret evil works.
Commettre les actes non péniteuts, sous le masque de l’habit du pénitent est pareil à l’agissement de l’oiseleur qui prend les oiseaux, caché dans les brouissailles.
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும். 275
'பற்றுக்களைத் துறந்தோம் ' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பத்தையே உண்டாக்கும் .
எனது கருத்து :
இதுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதியை உதாரணமாய் எடுக்கலாம். ஒருகாலத்தில காஞ்சி சங்கர மடம் ஒரு புண்ணியமான , ஒழுக்கசீலர்களாக இந்துக்களின்ரை மனசில இருந்திது. சிறீ ஜெயேந்திர் எண்ட மடபீடாதிபதி செய்த வேலையளாலை ,அவர் எப்பிடி நொந்தார்? அந்த மதபீடம் என்ன பாடு பட்டிது ? எண்டு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
Our souls are free,' who say, yet practise evil secretly,'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.
La conduite cachée de ceux qui crient: ‘‘Nous sommes détachés de ce monde’’ leur cause maintes douleurs, de nature à leur faire crier: ‘‘Qu’avons-nous fait? Qu’avons nous fait?’’
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். 276
மனதில் பற்றுக்களைத் துறக்காமல் , துறந்தவர் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போலக் கொடியவர் எவரும் இலர் .
எனது கருத்து :
மனசிலை எதையமே வைக்காமல் முகத்துக்கு நேராய் சண்டைபிடிக்கிறாக்கள் எவ்வளவோ திறம் . ஆனால் நெஞ்சுமுட்ட விசத்தைக்கொண்டு பல்லுக்காட்டிற ஆக்கள் இருக்கினமல்லோ ? கெட்ட கிருமியள் இவையள் தரவளியைத்தான் மறந்தும் கிட்டவும் அடுக்கக்கூடாது எண்டு ஐயன் சொல்லுறார் .
In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'.
Il n’y a pas de plus durs de coeur que ceux qui n’ont pas renoncé dans leur for intérieur et qui vivent, à l’instar des pénitents, en trompant les hommes charitables.
புறங்குன்றி கண்டுஅனைய ரேனும் அகம்குன்றி
முக்கில் கரியார் உடைத்து. 277
புறத்தோற்றத்தில் குன்றிமணியின் செம்மையான நிறம்போல் தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றி மணியின் மூக்குப் போலச் கருத்திருப்பவர் உலகில் பலர் .
எனது கருத்து :
நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் இந்தப்பூனையும் பால்குடிக்குமோ எண்ட கணக்காய் பக்கா ஜென்ரில்மன் ரைப்பில இருப்பினம். ஆனால் ,பழகிப் பாத்தியள் எண்டால் நாக்கிலையும் நெஞ்சிலையும் விசத்தை வைச்சிருப்பினம். இப்பிடிப்பட்ட குண்டுமணி ஆக்களின்ரை தொகை இப்ப கூடிக்கொண்டே போகுது .
Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night.
Le monde a des hommes qui, ont un brillant dehors, comme la graine à reglisse, mais dont le cœur est noir comme le bec de la graine à reglisse.
மனத்தது மாசாக மாண்டார் நீ ர்ஆடி
மறைந்துஒழுகும் மாந்தர் பலர். 278
மனதில் மாசு இருக்கத் , தவத்தால் மாண்பு பெற்றவரப் போல் நீராடி மறைவாக வாழ்கை நடத்தும் வஞ்சனையாளர் பலர் உள்ளனர் .
எனது கருத்து :
இந்தக்காலத்தில ஆக்களை மட்டுக்கட்டுறதே பெரிய கஸ்ரம் .ஆரைப்பாத்தாலும் வெளியால நடைஉடைபாவனையில வெள்ளையாத் தான் இருப்பினம். ஆனால் மனம் முட்ட நஞ்சு. இவையள் கூட இருந்தால் கலி முத்தீட்டுது எண்டு அர்த்தம் .
Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame.
Nombreux sont ceux qui ont le coeur impur mais qui lavent seulement leur corps; comme ceux qui ont acquis les réputations de pénitents et qui vivent sous un faux dehors.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன
வினைபடு பாலால் கொளல். 279
நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது ; ஆகவே , மக்களின் பண்புகளை செயல்வகையில் அறியவேண்டும் .
எனது கருத்து :
ஒருத்தரையும் வெளித்தோற்றத்தை வைச்சு மட்டுக்கட்டக்கூடாது . சிலபேரைப் பாத்தியள் எண்டால் எதையும் நேரை கதைக்கிறம் எண்டபேர்வழியிலை , மற்றவனை சொல்லாலை கொல்லுறதுதான் வேலை. இன்னும் சிலபேரைப் பாத்தியள் எண்டால் அவையோட எந்தநேரமும் கதைச்சுக் கொண்டிருக்கவேணும் போலை கிடக்கும். அவையின்ரை கதை தேனிலை குழைச்ச பிலாப்பழம் மாதிரி இருக்கும். அவை வழைஞ்ச யாழ் மாதிரி இருந்தாலும் இனிமையாய் இருந்து மற்றவனை கொல்லாமல் இருப்பினம். இந்த ரெண்டு வகையான பார்ட்டியளை அம்புக்கும் யாழுக்கும் ஐயன் உதாரணம் காட்டி அவயளின்ரை செயலைப் பாத்து பழகுங்கோ எண்டு சொல்லுறார் .
Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet.
La flèche est cruelle (bien que droite), le luth est doux bien que courbe. Il faut donne juger les pénitents d’après leurs œuvres.
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின். 280
உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டுவிட்டால் , மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் .
எனது கருத்து :
இந்தக்குறளைப் பாத்த உடனை எனக்கு பிறேமானந்தா , ஜெயேந்திரர் ஆக்கள்தான் ஞாபகத்தில் வருகினம். இவையளைப்பாத்தால் முற்றும் துறந்த துறவியிளைப்போலை இருப்பினம். ஆனால் செய்தது முழுக்கசுத்துமாத்தும் ,மொள்ளமாரிவேலையளும் . மனசிலை ஊத்தையளை வைச்சுக்கொண்டு வெளியில வேசம்போடுறது , உலகத்தை ஏமாத்திற வேலை கண்டியளோ .
What's the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrong?
Il n’est pas nécessaire d’avoir la tête rasée ou de laisser croitre les cheveux, si l’on s’abstient de ce que le monde condamne.
Comments
Post a Comment