அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். 441
அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த ( சிறந்த ) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் .
எனது கருத்து : அப்பிடி போடுங்கோ ஐயன் .
As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care.
Que (le Roi) recherche l'amitié des hommes intelligents plus âgés que lui et qui connaissent le prix de la vertu, en connaissance de la valeur de cette amitié et des moyens de l'obtennir.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442
வந்த துன்பத்தை நீக்கி , இனித் தன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் .
எனது கருத்து : ஓ..... அப்ப இதைத்தான் டிப்பளொமெசி எண்டு சொல்லுறதோ ஐயன்?
Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends.
Qu'il accorde toute satisfaction, à ceux qui sont capables de guérir les maux présents et de prendre des mesures pour en prévenir le retour et qu'il se les attache avec soin.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443
பெரியாரை அவர்கட்கு உவப்பானதைச் செய்து தம்மவராக ஆக்கிக்கொள்ளுதல் ஒருவர் பெறக்கூடிய சிறந்த பேறுகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்ததாகும் .
எனது கருத்து :
பெரியாக்கள் எண்டால் ஆர் பெரியாக்கள்? தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காறன் எண்டமாதிரி பெரியாக்கள் இருக்கினம். இதுக்குள்ளை இவையளை குசிப்படுத்தி எங்களோடை வேறை சேர்க்க சொல்லிறியள். வளைஞ்சு நெளிஞ்சு காரியம் செய்யிறவனுக்கு மொள்ளமாரி எண்டு என்னமொரு பேரும் கிடக்கு.
To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known.
C'est une rare des rares fortunes des Rois, que celle d'honorer les hommes de telles qualités, en leur donnant ce dont ils ont besoin et de les rendre ainsi les leurs.
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை. 444
தம்மிலும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர்வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றிலும் சிறந்த வலிமையாகும் .
எனது கருத்து : அறிவெண்டால் எந்த அறிவு பட்டறிவா இல்லாட்டில் ஏட்டறிவா எண்டதிலை கிளியர் இல்லை ஐயா
To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells.
C'est une force capitale (du Roi) que celle de gagner l'intimité de ceux qui lui sont supérieurs en sagesse et de suivre leurs conseils.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.445
தக்க வழிவகைகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால் , மன்னன் அத்தகையவரைத் தன் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும் .
எனது கருத்து :
இதைத்தான் இந்தக் கொள்கைவகுப்பாளர் எண்டு சொல்லுறவை தங்கடை விருப்பு வெறுப்புகளுக்கு ஏத்தமாதிரி தங்கடை அரசுகளை நடத்திக்கொண்டிருக்கினம் . அதிலையும் எங்கடை பக்கத்து நாட்டுக் கொள்கை வகுப்பாளர் சொல்லிவேலையில்லை .
The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise.
Puis qu'il faut gouverner, en considérant ceux qui l'entourent comme ses yeux, que le Roi les choisisse et s'assure de leur concours.
எனது கருத்து :
முதல்லை தலமைப்பதவியிலை இருக்கிறவன் குற்றம் குறையளை ஏத்துக்கொள்ளுறவனாய் இருந்தால்தான் ஐயன் நீங்கள் சொன்னது நடக்கும். சும்மா தனக்கு சிங்சக் போடுறவையை பெரியாக்கள் எண்டு சொல்லி வைச்சிருந்தால் எப்பிடி அந்த அரசு உருப்படும்?
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது தில். 446
தகுந்த பெரியோரின் குழுவில் உள்ளவனாக தகுதி பெற்ற ஒருவனுக்கு , பகைவர்களால் ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
எனது கருத்து :
படியாதவையை சவர் நிலத்துக்கு ஒப்பிடிறதும் , அவையை செத்த சவத்துக்கு ஒப்பிடிறதும் சரிதான். ஆனால் எவ்வளவோ படிக்காத மேதையள் எக்கச்சக்கம் சாதனையளை செய்திருக்கிறாங்கள் ஐயன் .
The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride.
II n'y a pas de mal. que les ennemis puissent faire à un Roi, qui a le concours des grands hommes et qui a le pouvoir de se conduire avec sagesse.
இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். 447
கடிந்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கக் கூடிய எவருளர் ?
எனது கருத்து :
நீங்கள் சொல்லிறது " நான்" இல்லாதவனிட்டை எடுபடும் ஐயன். "நான் " இருக்கிறவனிட்டை எடுபடாது. கெடுகுடி சொல்கேளாது எண்டுசும்மாவே சொல்லீச்சினம்.
What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs.
Quels sont les ennemis, qui peuvent se flatter de nuire au Roi, qui sait apprécier le mérite des ministres qui lui reprochent ses fautes et gouverne suivent leurs bons conseils ?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். 448
குற்றங் கண்டபோது வற்புறுத்தி அறிவுரை கூறித் திருத்தவல்ல பெரியோர்களைத் துணையாகப் பெற்றிராத அரசன் , கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான் .
எனது கருத்து :
ஒரு தலமைப் பொறுப்பிலை இருக்கிறவன் தன்னைச் சுத்தி ஜால்றா போடுற ஆக்களை வைச்சிருந்தால் , எதிரி அவனைப்பற்றி கனக்க யோசிக்கத் தேவையில்லை. அவனே கெட்டளிஞ்சு போவான் .
The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall.
Se perd lui-même, sans avoir d'ennemis, le Prince qui n'est pas protégé, parce qu'il n'a pas de Ministres qui le réprimandent.
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்
சார்புஇலார்க் இல்லை நிலை. 449
முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை , அது போலத் தம்மைத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் வரும் நிலைபேறு இல்லை .
எனது கருத்து :
ஒரு தலமைத்துவத்திலை இருக்கிறவனுக்கு , அவன் பிழையள் விடுகிற நேரத்திலை அவனைச் சுத்திவர நல்ல புத்திமதி சொல்லிற ஆக்கள் வேணும். இல்லாட்டில் கடலிலை போட்ட உப்பு மாதிரி போடும் அவனின்ரை பிழைப்பு.
Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.
Point de bénéfice pour celui qui n'a pas de capital; de même point de stabilité, pour le Roi qui n'a pas de défenseurs qui le soutiennent.
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450
பலரோடு பகைத்துக் கொள்வதைவிட , நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல் பத்துமடங்கு தீமை உடையதாகும் .
எனது கருத்து :
இந்தக்காலத்திலை நல்லவனைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய காரியமாய் கிடக்கு. அப்பிடி ஐஞ்சாறு பேர் கிடைச்சாலும் , அவையை மொக்குத்தனமாய் கைவிட்டால் ,கன சனங்களோடை பகை வளர்க்கிறதை விட டேஞ்சரான விசையம். இதுதான் உலகத்திலை இருந்த சர்வாதிகாரிகளின்ரை கடைசிக்காலங்களிலை நடந்தது .
Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to forego.
Abandonner l'amitié des hommes de Bien est dix fois pire, que s'attirer personnellement la haine de plusieurs.
Comments
Post a Comment