Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240


 
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231

வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை.

எனது கருத்து:

மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான். 

See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.

Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232

இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும்.

எனது கருத்து:

அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல்லோ.

The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renown.

De tous les éloges qu’on décerne, seul reste permanent, celui qui est fait de quelqu’un qui donne (aux pauvres).

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். 233

நெடு நாள் நீடித்து நிலைக்கும் புகழுக்கு ஒப்பான ஒரு பொருளை உலகில் காண்பது மிகவும் அரிதாகும்.

எனது கருத்து:

ஒரு கெட்டவன் எண்ட பேரை ஐஞ்சு நிமிசத்தில எடுக்கலாம் ஆனால் ஒருத்தன் நல்லவனா வள்ளலாய் இருந்து புகழ் எடுக்கிறது செரியான கஸ்ரம் பாருங்கோ ஆனால் அந்தப் புகழ்தான் உலகத்தில நிலையானது

Save praise alone that soars on high, Nought lives on earth that shall not die.

Il n’y a en ce monde rien qui puisse égaler la grande gloire de quelqu’un. Tout le reste est détruit ici-bas.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234

உலகம் உள்ளவரை புகழோடு வாழ்பவனையே மேல் உலகம் போற்றிப் புகழும் . ஞானிகளை ஒருக்காலும் புகழாது.

எனது கருத்து:

எனக்கு மேல்உலகம் இருக்கிது எண்டு நம்பிக்கையில்லை ஒருத்தன் உயிரோட இருக்கேக்கை அவன் புகழின்ரை உச்சாணியிலை இருக்கேக்கை சனம் அவனை புகழவேணும் அதேநேரம் அறிவுள்ள ஆக்களையும் கைவிடக்கூடாது

If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned.

Si quelqu’un acquiert ici-bas une gloire indestructible, le monde des dévas ne célèbrera pas les bienheureux qui s’y trouvent.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. 235

புகழ் உடலுடன் வாழ்வது ,நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும். மற்றவர்கட்குக் கிடைக்காது.

எனது கருத்து:

முதல் குறளில சொல்லுறார் ஞானியளை மேல் உலகம் மதிக்காது எண்டு அதோடை அறிவாளி எண்டு சொல்லுறவையெல்லாம் அந்த அறிவுக்கு ஏத்தமாதிரி நடக்கினமில்லை புகழோட சீவிக்கிறதும் செத்தாப்பிறகும் புகழோட இருக்கிறதும் ஞானியளால தான் முடியுமெண்டால் படிக்காத மேதையளை என்ன சொல்லுறது

Loss that is gain, and death of life's true bliss fulfilled,Are fruits which only wisdom rare can yield.

Seuls, les Sages peuvent accroître leur gloire et la rendre immortelle.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 236

மனிதனாகப் பிறக்க விரும்பினால் புகழுடன் தோன்றுவது நல்லது .இல்லையேல் மனிதப்பிறவியாய் தோன்றாமலிருத்தலே நலம் .

எனது கருத்து:

ஒரு விசையத்தில இறங்கினால் அதிலை முடிவுகண்டு வெற்றியோட புகழ் எடுக்கவேணும் . அப்பிடி செய்யேலாதவை அதிலை இறங்காமல் விடுறதுதான் நல்லது.

If man you walk the stage, appear adorned with glory's grace;Save glorious you can shine, 'twere better hide your face.

Si l’on nait, il faut naître avec les qualités propres à acquerir la gloire. Si non, il vaut mieux ne pas pas naître.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். 237

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள் தம்மை நொந்து கொள்ளாமல் , தம்மை இகழுகின்ற உலகத்தவரை நொந்து கொள்வது எதற்காகவோ ?

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தியள் எண்டால் தாங்கள் விட்ட விடுகின்ற பிழையளை ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமாட்டினம் . ஆராவது அக்கறைல நல்லது கெட்டதுகளைச் சொன்னால் உடன விசர்பத்தி சொன்னவயோட சண்டைக்குப் போடுவினம். ஆனால் ஒருத்தர் ஏதாவது பிழையள் விட்டால் அதுக்கு கவலைபட்டு , பேந்தும் அதேபிழை வராமல் பாத்து நடக்கவேணும் . அவைதான் மனிசர் .

If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You've yourself to blame.

Ceux qui ne vivent pas avec gloire ne se plaignent pas d’eux-mêmes. Pourquoi se plaignent-ils de ceux qui les méprisent.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். 238

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாமல் விட்டு விட்டால் , அத்தகைய வாழ்க்கை எல்லார்க்கும் பழி என்று நல்லோர் சொல்லுவர் .

எனது கருத்து:

ஒருத்தர் பேராப்புகழாய் இருக்கவேணும் தான் .ஆனால் அந்தப் புகழ் எண்டபோதையில இப்ப கனபேர் உள்ளஊரிக் கோல்மால் வேலையெல்லாம் செய்யினம். என்னைப் பொறுத்தவரையில புகழுக்கு மயங்காமல் மனச்சாட்சியோட அறவாழ்க்கை வாழுறவன்தான் மனிசன் .

Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men.

C’est une honte dit-on, pour tous homme que de ne pas acquérir la réputation.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 239

புகழ் இல்லாதவனுடைய உடம்பைச் சுமந்த நிலம் பயிர் வழம் குன்றிச் செழிப்பின்றிக் காணப்படும் .

எனது கருத்து:

சும்மா இருந்தம் போனம் எண்டு புகழ் இல்லாத உடம்பை சுமந்த நிலம் பாலைநிலமாய் பொய்விடுமெண்டு ஐயன் ரென்சனாய் சொல்லுறார்.

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown.

Le champ qui support un corps sans gloire produit une moisson dérisoire.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

இவ்வுலகில் பழியில்லாமல் புகழுடன் வாழ்பவரே உயிர் வாழ்பவராக மதிக்கப்படுவர். புகழ் இல்லாமல் பழியோடு வாழ்பவர் இறந்தவருக்குச் சமனாகவே மதிக்கப்படுவர் .

எனது கருத்து:

இருந்தால் கியாதியாய் இருக்கவேணும் இல்லாட்டி செத்துதுலையிறது நல்லது எண்டு ஐயன் சொன்னாலும், எப்பிடிப்பட்ட கியாதியோட இருக்கவேணும் எண்டு தெளிவாய் சொல்லேல. நல்லவர்களும் கியாதியோடேதான் இருக்கிறாங்கள் நாலு குடும்பத்தை துலைச்ச கெட்தவங்களும்  கியாதியோடேதான் இருக்கிறாங்கள்.

Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seem.

Ceux-la vivent, qui vivent sans honte; ceux-là ne vivent pas, qui vivent sans réputation.





Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம