பொருட்பால்-அரசியல்-தெரிந்துசெயல்வகை-Acting after due Consideration-Manière d'agir en connaissance de cause. 460- 470
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனது கருத்து:
சிலபேரை பாத்தியள் எண்டால் எடுத்தன் கவுட்டன் எண்டு வேலையளை செய்யிறது. பேந்து அதிலை பிரச்சனையள் வரேக்கை கிடந்து முழிக்கிறது. முதலே பிளான் பண்ணி செய்தால் எடுத்த காரியம் வெற்றிதான். எப்பிடி அமெரிக்கா ஒரு அனியாயமான விசையத்திக்கு மற்றவையை தன்ரை பக்கம் கொண்டுவந்து ஈராக்கை அடிச்சுதோ , அப்பிடி செய்யவேணும் பாருங்கோ.
Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed.
Peser d'abord les conséquences désastreuses d'une entreprise, puis les avantages, enfin le profit qui peut résulter de ceux-ci et agir.
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல். 462
ஒருசெயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுவதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.
எனது கருத்து:
ஐயா எல்லாம் பக்காவாய் பிளான் பண்ணி நாலைஞ்சு கூட்டோடை கூட்டுவைச்சு ஒரு வேலையை செய்தாலும், காலமும் கைகுடுத்தால்தான் எந்த செயலையும் செய்யலாம். இல்லாட்டில் கஸ்ரம் பாருங்கோ .
With chosen friends deliberate; next use the private thought; Then act. By those who thus proceed all works with ease are wrought.
U n'y a pas de bien rare que ne puisse obtenir (le Roi) qui agit, après eu avoir délibéré avec son conseil choisi et après y avoir réfléchi lui-même, en particulier.
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 463
பின்னே கிடைக்கக் கூடிய இலாபத்தை எதிர்நோக்கி மூலதனத்தை இழந்துவிடும் காரியத்தை அறிவுடையோர் மேற்கொள்ளார்.
எனது கருத்து:
ஐயன் நீங்கள் சொன்னது உங்கடை காலத்திலை சரியாய் இருக்கலாம். ஆனால், இப்பபாருங்கோ எல்லா வியாபாரியளும் இருக்கிற சாமானுகளை அழியப்பண்ணிறதுக்கு " ஒண்டு எடுத்தால் மற்றது பிறீ ". இதுதான் அவையின்ரை வேலை. அப்ப இவையெல்லாம் அறிவில்லாத ஆக்களோ?
To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain.
Les hommes intelligents ne s'engagent pas, en escomptant un profit éventuel, dans une entreprise qui peut faire perdre le capital actuel.
தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 464
தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாதலைக் கண்டு அஞ்சுகின்றவர்கள், தெளிவில்லாத செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்.
எனது கருத்து:
நெஞ்சில ஈரமும் மனச்சாட்சிக்குப் பயப்பிட்டவனும் சோலி சுறட்டுகளுக்கு போகமாட்டாங்கள்.
A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear.
Ceux qui craignent le ridicule ne commencent pas d'agir, sans une mûre délibération préalable.
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதுஓர் ஆறு. 465
நன்கு ஆராய்ந்து பாராமல் ஆரம்பிப்பது, பகைவரை வளர்க்கும் வழியாகும் .
எனது கருத்து:
சிலபேரை பாத்தியள் எண்டால் "கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு திரிவினம்". இவையளாலை ஒருசதத்துக்கும் பிரையோசனமில்லை. ஒருத்தன் இப்பிடியே போனானல் அவினின்ரை பங்காளியிள் வலு சிம்பிளாய் அவனுக்கு பெட்டி கட்டி அடிப்பினம் பாருங்கோ .
With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow!
Partir en guerre, sans avoir minutieusement pesé et arrêté en détail, tous les moyens est une voie de fortifier l'ennemi sur un terrain soigneusement préparé.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். 466
ஒருவன் தனது நிலமைக்குத் தகாத செயல்களைச் செய்தாலும், செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான் .
எனது கருத்து:
ஒருத்தன் செய்யிற நேரத்திலை செய்யாமல் விடுகிறதாலை பெரிய அழிவு வரும். இதை எங்கடை இனம் வகைதொகையாய் அழிஞ்சதை சொல்லலாம். அதேமாதிரி ஒருத்தன் என்ன செய்யக்கூடாதோ அதை செய்யிறிதாலையும் அழிவுதான். எப்படியெண்டால் மகிந்து குறூப் மாதிரி இப்ப நித்திரையில்லாமல் ஓடித்திரியிறான்.
'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring.
(Le Roi) se perd en faisant ce qu'il ne doit pas faire; il se perd également, en ne faisant pas ce qu'il doit faire.
எண்ணித் துணிக கருமம் ;துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467
செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பின்பு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.
எனது கருத்து:
சிலபேரைப் பாத்தியள் எண்டால் ஏகாந்தம் ஏணாட்டத்திலை வேலை செய்யத் தொடங்குவினம் கடைசியிலை பாத்தால் அவை செய்யிற வேலையள் ஒண்டும் உருப்படாது இதைத்தான் பெரிசுகள் எண்ணித் துணிக கருமம் எண்டு திருத்திச் சொல்லியிருக்கினம்.
Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall be.
Que l'on entreprenne une action, après avoir réfléchi aux moyens de la faire aboutir Commencer d'abord, et réfléchir ensuite sont une faute.
ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 668
தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தாலும் முடியாமல் தவறிவிடும்.
எனது கருத்து:
"ஊர்கூடித் தேர் இழுத்தாலும் , முட்டி போடிறவன் ஒழுங்காய் முட்டி போடாட்டில் தேர் இருப்புக்கு வராது " எண்டு பெரிசுகள் இப்பிடிச் சொல்லுவினம். இதிலை அவை முட்டி போடிறது எண்டு சொல்லிறது திட்டம் போடிறதை கண்டியளோ.
On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive.
L'effort fait. sans avoir réfléchi au moyen de mener une entreprise à bonne fin, est perdu même si plusieurs viennent en aide.
நன்றுஆற் றல்உள்ளும் தவுறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை. 669
ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.
எனது கருத்து:
ஒருத்தனுக்கு நாங்கள் உதவி செய்ய வெளிக்கிட்டால் முதல் அவனின்ரை குணம் குறையளை வடிவாய் யோசிச்சுத் தன் உதவி ஒத்தாசையள் செய்ய வெளிக்கிடவேணும். இல்லாட்டில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கணக்காய் போடும் பாருங்கோ .
Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid.
Le Bien que l'on fait à autrui peut mal tourner, si l'on n'agit pas conforménent à son secret penchant.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும், தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. 470
அரசர் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வார் ஆயின், உயர்ந்தோர் அவரை இகழ்வர் . ஆதலால் உயர்ந்தோர் இகழாத வகையில் நல்லவனவற்றையே ஆராய்ந்து செய்தல் வேண்டும் .
எனது கருத்து:
சரி இப்பிடி சொல்லுறியள் ஐயன். சில இடங்களிலை அரசர்மார் மக்களாலை தானே வருகினம் அதுவும் ஒண்டில்லை பரம்பரையே மாறி மாறி வந்து கொண்டிருப்பினம். உலகமும் பாத்துக் கொண்டுதானே ஐய்யன் இருந்தது. இந்தக் காலத்த்திலை நேர்மைக்கு காலம் இல்லை கண்டியளோ. சும்மா கடுப்படியாதையுங்கோ.
Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise.
Le monde blâme les mesures que l'on prend et qui sont incompatibles avec sa position. Qu'on recherche les mesures qui. soient à l'abri du blâme et qu'on agisse ensuite.
Comments
Post a Comment