செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431
ஆணவமும் ( மதமும் ) , வெகுளியும் , அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது .
எனது கருத்து:
ஒருத்தர் எப்பிடியும் செல்வாக்காய் இருக்கலாம். ஆனால் அவருக்கு மண்டைக்கனம் , தொட்டதுக்கெல்லாம் சுடுதண்ணி ஊத்தின நாய் மாதிரி கோபப்படுகிறது , பொம்பிளை விசயங்களிலை அப்பிடி இப்பிடி இருக்கிறது , இவ்வளவும் இருந்தால் அவற்றை செல்வாக்கு செல்லாக்காசாய் போடும் பாருங்கோ.
Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain.
la prospérité (du Roi) qui n'a pas d'arrogance, de colère et de luxure, va en florissant.
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432
ஈயாத லோபமும் , மாட்சியில்லாத மானவுணர்வும் , தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும் .
எனது கருத்து:
நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் , தனக்கு சகுனப்பிழையெண்டாலும் எதிரிக்கு மூக்குடைஞ்சால் சரி எண்டு இருப்பினம் . அதோடை தன்ரைவயசிலையும் அனுபவத்திலையும் மற்றவன் மூத்தவன் எண்டு தெரிஞ்சும் அவனுக்குள்ள மரியாதையை குடுக்காத மண்டைக்கனம் . இதோடை ஒருத்தன் உதவி எண்டு வந்தால் கஞ்சாப்பித்தனம் விடுகிறது. இப்பிடியெல்லாம் இருக்கிற ஒராளுக்கு தலமைத்துவம் எண்டது சரிவராது பாருங்கோ.
A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith.
L'avarice, le défaut de dignité et l'excès de joie sont les défauts du Roi.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433
பழிச்சொல்லுக்கு நாணுகின்ற பெருமக்கள் , தினை அளவான சிறு குற்றம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதிகுற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர் .
எனது கருத்து:
மானம் மரியாதை மனச்சாட்சிக்கு பயந்தவன் தனக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் ஏதோ மலை கவிண்டு கொண்டுண்ட மாதிரி அதை பாதுகாத்து இருப்பினம்.
Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem.
Ceux qui redoutent le déshonneur, considèrent leurs défauts aussi petits qu'un grain de millet, comme s'ils sont aussi gros qu'un palmier.
குற்றமே காக்க பொருள்ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. 434
தனக்கு இறுதி பயக்கும் ( அழிவைத்தரும் ) பகைக் குற்றமே , ஆதலால் அக்குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மைதரும் .
எனது கருத்து:
அப்பிடி எண்டால் ஐயன் , இந்தப்பூமி பந்திலை சமாதானமும் சந்தோசமும் கொண்ட சனமல்லோ இருக்கவேணும் ? தான் செய்யிறது குற்றம் எண்டுதெரிஞ்சு தானே மகிந்துவும் அவனின்ரை கூட்டாளியளும் செய்யிறாங்கள். இண்டைக்கு உலகம் அவங்களைத்தானே தூக்கி பிடிக்குது ? சும்மா வயித்தெரிச்சலை கிளப்பாதையுங்கோ ஐயன்.
'Gainst these, for fault is fatal enmity.
C'est une faute que de s'attirer une haine mortelle; il faut se garder d'une pareille faute: on acquiert ainsi un Bien.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435
குற்றம் செய்வதற்கு முன்பே , வராமல் காத்துக் கொள்பவனுடைய வாழ்க்கை , நெருப்பின் முன்னே உள்ள வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
எனது கருத்து:
சில பேரை பாத்தியள் எண்டால் , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு எதிலையும் சீரியஸ் இல்லாமல் இருப்பினம். இவையள் தரவளயின்ரை சீவியம் நெருப்புக்கு முன்னாலை இருக்கிற வைக்கல் பட்டறை மாதிரி அழிஞ்சு போடும்.
His joy who guards not 'gainst the coming evil day, Like straw before the fire shall swift consume away.
La vie du Roi qui ne se gare pas des défauts, avant qu'ils ne l'atteignent, est détruite comme une meule de paille exposée à la flamme.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. 436
முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி , பிறகு பிறருடைய குற்றத்தை ஆராய்கின்ற தலைவனுக் ஒரு குற்றமும் ஏற்படாது.
எனது கருத்து:
ஒரு தலமைத்துவத்திலை இருக்கிறவன் , எடுத்ததுக்கெல்லாம் மற்றவையை குற்றம் குறை கண்டுபிடிச்சுக் கொண்டிருக்காமல் , முதலிலிலை தன்ரை முதுகுக்கு பின்னாலை இருக்கிற ஊத்தையளை கிளீன் பண்ணிப்போட்டு , மற்றவையை குற்றம் சொன்னால் பிழை வராது எண்டு ஐயன் சொன்னாலும், ஒருத்தருக்கு சரி எண்டு படுகிற குற்றம் மற்ரவருக்கு பிழையாய் படாதோ ஐயன்?
Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men.
De quoi peut on accuser le Roi, qui découvre d'abord ses défauts, les corrige, puis cherche à découvrir ceux de ses sujets?
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். 437
செய்யத்தக்க நன்மைகளை செய்யாமல் செய்யாமல் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் நிலைத்திராமல் அழிந்துபோய்விடும் .
எனது கருத்து:
நீங்கள் சிலபேரை பாத்திருப்பியள் , ஐஞ்சு சதம் மற்றவனுக்கு ஈயாமல் தங்களுக்களையே வைச்சிருப்பினம். கடைசியிலை மண்டையை போடிற நேரம் ஒண்டும் கொண்டு போகப்போறேலை எண்டு தெரிஞ்சும் இப்பிடி இருப்பினம். கடைசியிலை இவையளின்ரை சொத்துப்பத்துகள் எல்லாம் ஏதோ ஒரு வழியிலை அழிஞ்சு போயிடும் .
Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind.
Le trésor du Roi qui par une parcimonie serrée, se refuse ce qui ne s'acquiert que par la richesse, se détruit sans profit.
பற்றுஉள்ளம் என்னும் இவறுஅன்மை எற்றுஉள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று. 438
யாருக்கும் உதவமல் பொருளின் மீது பற்றுக் கொண்ட உலோபித்தனம் , குற்றங்களில் பெருங்குற்றமாகும் .
எனது கருத்து:
ஒருத்தன் பிழைசெய்யிறதே பெரிய பாவம். அதிலை தேடிற தேட்டங்களை மற்றவனுக்கு குடுக்காமல் பொத்திப் பொத்தி வைச்சிருக்கிற கஞ்சாப்பிக் குணம்தான் பிழையிலை பெரிய பிழை .
The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all.
L'avarice qui consiste à thésauriser sans faire les dépenses indispensables ne doit pas être comptée parmi tous les défauts (est plue grande que ceux-ci).
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை. 439
எப்போதும் தன்னை உயர்த்திப் பேசுதல் கூடாது ; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது .
எனது கருத்து:
ஆருக்கும் என்னவும் இருக்கலாம் மண்டைக்கனம் இருக்கக்கூடாது கண்டியளோ. இந்த மண்டைக்கனத்தாலை கவிண்டு கொட்டுண்டவை கனபேர். இதே மண்டைக்கனம் தான் ஒருத்தரை ஏதாவது நல்லவிசையம் செய்ய விருப்பப்பட்டாலும் தடுக்கிற சாமான். இந்த மண்டைக்கனம் ஒரு தலைமைத்துவத்திலை இருக்கிறவனுக்கு கூடவே கூடாது.
The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all.
Ne vous surestimez jamais par arrogance. Ne désirez pas même par la pensée, les entreprises qui ne peuvent vous causer du bien.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440
தம் விருப்பத்தை பிறர் அறியாத படி நுகர வல்லானாகில் , பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் பயன்ற்றுப் போகும் .
எனது கருத்து:
தான் என்ன செய்யப்போறன் எண்டதை மத்தவன் அறியாமல் செய்தால் பகையாளியாலை பிரச்சனை வராது எண்டால் , ஏன் இந்த போருகள் கன இடத்திலை தோல்வியிலை முடியுது?
If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove.
Le Roi qui a l'habileté de jouir des choses désirées, sans laisser deviner ses désirs et leur objet, rend vaines les machinations de ses ennemis.
Comments
Post a Comment