Skip to main content

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி




நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன்.

நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி புஸ்பமாய் குளிச்சு பல்கணியிலை நிண்டு ரீயும் சிகரட்டும் அடிச்சு, நாலே முக்கால் போலை ரெயில்வே ஸ்டேசனுக்கு போனன். அங்கை கொஞ்சப்பேர் நிண்டினம். நேரம் செல்லுது கோச்சி வாற அறியும் இல்லை குறியும் இல்லை. ஐஞ்சு மணிக்கு வாற கோச்சி ஐஞ்ச முக்காலுக்கு ஆடிப்பாடி வந்துது. சனங்கள் கோச்சிக்குள்ளை ஏறுறதில்லை அடிபாடு. எனக்கெண்டால் விடியக்காத்தாலை இதுகள் இப்பிடி அடிபடுகுதுகளே எண்டு வாழக்கை வேறுத்துப்போச்சுது. ஆறுமணிக்கு வேலைக்கு ஏழுமணிக்கு வேலையிடத்துக்கு போய் சேர்ந்தன். நான் வேலை செய்யிற நேரமமும், எனக்கு இவர் அறிமுகப்படுத்திற ஆள் ஆராய் இருக்கும்? எண்டு எனக்கு ஒரே மண்டை குடைச்சல். இண்டைக்கு எண்டு பாத்து எல்லாரும் காலமை சாப்பிடவேணும் எண்டு லைன் கட்டி நிக்கிறாங்கள். வேலை பிராக்கிலை சோபாசக்தி சொன்ன விசயம் எனக்கு மறந்து போச்சுது.வேலை முடிஞ்சு வெளியிலை வந்து ரெலிபோனை பாத்தால் நாலைஞ்சு ரெக்ஸ்ரோ கிடக்கு இண்டையான் சந்திப்பை பற்றி. ஆனால் ஆர் ஆள் எண்டு சொல்லேலை.

நான் யோசனையோடை லாச்சப்பலுக்கு மெட்றோ எடுத்து போனன் .நாங்கள் வழக்கமாய் சந்திக்கிற பாண்டிச்சேரி ரெஸ்டோரன்ட்க்கு போனால், அங்கை ஆக்காட்டி பிரபாவும் இன்னுமொரு கூட்டாளியும் நிண்டாங்கள். அவங்கள் என்னை சந்திக்கிறதுக்கு நிக்கிறதாய் சொன்னாங்கள்.என்ன விசயம் எண்டு கேட்டன் .வாங்கோவன் ஒருக்கால் வாசுதேவனையும் சந்திசுப்போட்டு வருவம் எண்டாங்கள் .எனக்குப் பசிக்களை ஒருபக்கம் அவங்கடை முகத்தையும் முறிக்கேலாமல் இருந்திச்சுது. சரி போவம் எண்டு வாசுதேவவன்ரை ஒபிசுக்குப் போனம். அங்கை வெள்ளை தாடி சனமில்லாமல் இருந்திச்சுது. எனக்கும் வாசுதேவனை சந்திக்க வேணும் போலைதான் இருந்தது. ஏனெண்டால் போனகிழமை நடந்தை திறனாய்வு விழாவுக்கு வந்தவருக்கு என்னாலை ஒரு நன்றி சொல்லவேணும் போலை கிடந்திது. எங்களை கண்டது ஆளுக்கு பெரிய புழுகமாய் இருந்திது. நான் அவர் வந்ததுக்கு நன்றி சொல்லி அவரோடை கொஞ்ச நேரம் தத்துவ விசாரம் செஞ்சம். தாடிக்கு தத்துவம் எண்டால் சீனி திண்ட மாதிரி. பிரபா நாங்கள் பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போறதை நினைவு படுத்தினான். நாங்கள் அவரிட்டை விடைபெற்றுக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போய் உள்ளுக்கை உள்ளட்டம். பிரபாவும் கூட்டாளியும் பசிக்குது எண்டு கொத்து றொட்டி எடுத்தாங்கள். நான் றோல்சும் ரீயும் எடுத்தன். நாங்கள் ஆக்காட்டியிலை என்னென்ன செய்யவேணும் எண்டு கதைச்சு கொண்டு இருந்தம். நாங்கள் சாப்பிட்டு முடிய நான் வெளியிலை வந்து ஒரு சிகரட்டை எடுத்து பத்த வைச்சன். பேந்தும் நான் உள்ளுக்கை போய் ஆக்காட்டியை பத்தி கதைச்சு கொண்டிருந்தன்.

நாங்கள் கதைச்ச நேரத்திலை சோபா சக்தி ஒரு பொம்பிளையோடை ரெஸ்டோரன்ட்க்குள்ளை என்ரர் ஆனார். எல்லாரையும் சுகம் கேட்டார் நான் ஒரு தந்திரோபாய பின்வாங்கலிலை ஒண்டும் பேசாமல் இருந்தன். உடனை என்ரை பக்கம் திரும்பி அந்நியன் ஸ்ரைலில தலையை மேசைப்பக்கம் கவிட்டுக்கொண்டு, “கோமகன் நான் சொன்ன ஆள் இவாதான். இவான்ரை பேர் “ராஜாத்தி சல்மா”. தமிழகத்திலை இருந்து வந்திருக்கிற பிரபல பெண்கவிஞர்” எண்டு என்னையும் அவாக்கு அறிமுகம் செய்து வைச்சார் .எவ்வளவு பெரிய கவிஞர் என்னை பாக்க வந்திருக்கிறாவே எண்டு எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சுது. அவாவும் பெரிய கெப்பர் இல்லாமல் எங்களோடை சாதாரணாமாய் கதைச்சா. நாங்கள் எங்களுக்கு நடைமுறை இலக்கியதிலை இருக்கிற ஐமிச்சம் எல்லாம் கேட்டு தெரிஞ்சு கொண்டம். அவாவும் எங்கடை கேள்வியளுக்கு மறுமொழி சொன்னா. நாங்கள் பம்பலாய் கதைச்சதிலை நேரம் போனதே தெரியேலை. ஐஞ்சு மணிபோலை நான் ராஜாத்தி சல்மாவிடமும் சோபாசக்தியிடமும் விடை பெற்றேன். மொத்தத்திலை இண்டையான் நாள் நொந்து நூடில்ஸ் ஆன பரபரப்பான நாள் எண்டாலும், ராஜாத்தி சல்மாவை இலக்கியசம்பந்தமாக சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.






கோமகன் 

23 September 2014

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம