Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 05




வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை .
இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையிலை எனக்கு புல்லரிக்குது கண்டியளோ.

அடுத்த லெக்சனிலை மகிந்தர் தான் எண்டது இந்த யாழ்தேவியாலை கொண்போர்ம் ஆயிட்டுது . ஆக மொத்தத்திலை மெயின் சுவிச்சுகள் ஒண்டையும் ஒண் பண்ணாமல், யாழ் தேவி எண்ட மோகினியை விட்டு சனங்களை தன்ரை பக்கம் கொண்டு வந்த மகிந்தற்ரை மண்டை எங்கடை வித்துவானுகளுக்கு இல்லை எண்டதையும் சொல்லத்தான் வேணும் பாருங்கோ. இதுக்காக சனங்கள் இப்பிடியே இருக்கவேணும் எண்டு நான் சொல்லேலை. சனங்களும் பாவங்கள் அதுகளை வைச்சு அரசியல் பண்ணுறது வெரி பாட் கண்டியளோ .சரி பிள்ளையள் என்னமொரு இடத்திலை சந்திப்பம் .






சுருக்கு சுறுக்கர்

13 October 2014

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...