இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத் தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய் சுடுறாங்கள்.ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ.
நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ. இந்த நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள். ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச கனவானுகள்.சரி அதுகள்தான் போகட்டும், இந்த கேடுகெட்ட கொலையளை செய்தவங்களை சட்டத்துக்கு முன்னாலை கொண்டு வந்து கிலைசை கெடுத்துவம் எண்டு இல்லை. இப்ப வந்து சும்மா ரைம் பாசுக்கு தடையை எடுக்கிறம் எண்டால் என்ன கணக்கு பாருங்கோ?? அதுக்கு எங்கடை சனங்களும் எதோ தமிழ் ஈழம் கிடைச்ச மாதிரி ஆளாளுக்கு சவுண்டுகள் வுடுகினம். இந்த வழக்கை ஆடின அப்புக்காத்து ஒரு வெள்ளை எண்டு கொஞ்ச பேர் பெருமை படுகினம். முந்தி எல்லாம் வெள்ளையளுக்கு வழக்காடினவங்கள் எங்கடை அப்பன்மார். அப்பிடி ஒரு அப்புக்காத்தும் இங்கை இல்லையோ?? எண்ட கேள்வியும் என்ரை மண்டையுக்கை அடிக்குது. எல்லாம் முடிஞ்சு போய் , எல்லாரும் செத்து புல்லு முளைக்கிற நேரம் வந்து தடையை எடுக்கிறம் எண்டால் இதை வைச்சு என்ன நாக்கே வழிக்கிறது?? கதைக்கிற நேரம் பாத்து கதைக்காமல் இருந்து போட்டு எல்லாம் முடிய இப்ப ஓடியந்து, நீங்களும் ஒரு மனுசர் எண்டு சாட்டுக்கு அழுகிறது ஆரின்ரை நிகழ்ச்சி நிரலிலை நடக்குது ??
இதிலை என்னம் ஒண்டையும் சொல்லவேணும் கண்டியளோ , எங்கடை வித்துவானுகள் பால்குடி பபாக்கள்,விரல் சூப்பி கொண்டு நிண்ட அதுகளை அநியாயமாய் முடக்கி போட்டினம் எண்டு நான் சொல்லேலை. உப்பு திண்டவன் தண்ணியை குடிக்கவேணும். வினை விதச்சவன் தினை அறுக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம். எங்கடையாக்களும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிச்சினம். நல்லாய் பட்டு தெளிஞ்சிட்டினம். அனால் தீர்ப்பிலை வலு கட் அன்ற் றைற்ராய் ரெண்டு விசயத்தை சொல்லி இருக்கிறாங்கள். ஒண்டு, மூண்டு மாசத்துக்குள்ளை ஐரோப்பா பாளிமென்ற் எடுக்கிறதோ இல்லையோ எண்டு ஒரு முடிவுக்கு வரவேணும். ரெண்டாவதுதான் மெயின் மாற்றார் கண்டியளோ. எந்த வளத்தாலையும் காசு சேக்கப்படாது. இல்லை நாங்கள் பெரிய பிஸ்கோத்துகள், எங்கடை விலாசங்களை காட்டுவம் எண்டு வெளிக்கிட்டால் ஆராலையும் காப்பேத்தேலாது. இதோடை யாகம் வளக்கிறம், அடிக்கடி பாளிமென்ருக்கு லெக்சன் வைக்கிறம் ,ஸ்கைப்பில அரசாங்கம் நடத்திறம், உள்ளுக்கை போன அம்மாவுக்காக கவலைப்படுறம் எண்டு விலாசம் காட்டாமல், நாங்கள் எல்லாரும் ஒண்டாய் சேந்து இந்த கொலையள் செய்தவையை கிலிசை கெடுத்தவேணும் பாருங்கோ. ஒரு பதவியிலை இருக்கிற ஆளை எப்பிடி கோட்டுக்கு கொண்டுவாறது, உது லூசு வேலை எண்டு நினைக்கப்படாது. ஒரு பதவியிலை இருந்தவர் கொலையள் செய்யிற நேரம் ஒண்டும் செய்யாமல், இப்ப வந்து தமிழ் சனங்களே நீங்கள் பாவங்கள் எண்டு அழுகிற நீதிவானுகளாலை மனமிருந்தால் பதவியிலை இருக்கிறவரை கோடேத்தேலும் கண்டியளோ. அதுகளை செய்யாமல் விட்டு போட்டு பேந்தும் எங்கடையாக்கள் சன்னதம் ஆடினால் ஒருத்தராலையும் காப்பாத்தேலாது கண்டியளோ. அப்ப பிள்ளையள் பேந்து ஒரு இடத்திலை சந்திப்பம்.
Comments
Post a Comment