Skip to main content

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை-பத்தி




இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வதில்லை . வட்டம், சதுரங்களுக்கு நடுவில் நின்று கொண்டே செய்திகளை சொல்லி ஒருவித அனுதாப அலைகளை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள். குடும்பத்தில் வன்முறையென்பது, அது ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். “நான் ” என்ற மனோபாவம் எந்தப்பக்கத்தில் அதிகரிக்கின்றதோ, அந்தப்பக்கதால் வன்முறை துளிர்விடும் .இந்த வன்முறையானது அருவருக்கத்தக்கதொன்றாகும். எல்லா பெண்மணிகளும் இவ்வாறு நடப்பதாக எண்ண வேண்டாம் தங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன் குடும்பத்தை பிக்கல் பிடுங்கல் இன்றி நடத்தும் பெண்மணிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் அவர்களது விகிதாசாரம் புலத்தில் குறைவாகவே உள்ளது.

குடும்பம் என்பதே இருவர் கூட்டணியுடன் நடைபெறும் ஓர் நிறுவனம். அதில் கருத்து முரண்கள் வரத்தான் செய்யும். கணவன் நிதி நிர்வாகம் என்றால், மனைவி அவனது இணை இயக்குனர். அதில் “நான் ” என்ற மனோபாவம் எங்கு தூக்கலாக இருக்கின்றதோ, அதன்வழியாக பிரச்னை வெளியே கசியும். அதை ஊதிப் பெரிதாக்க பலர் ” நட்பு ” என்ற போர்வையில் இருப்பார்கள். அமைதியாக இருந்த குடும்பம் சந்தைக் கடையாக மாறும். வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம் . பிரச்சனைகள் என்றுமே நிறம் பார்ப்பதில்லை. இந்தப் பெண்மணிகள் தங்கள் வாதங்களுக்கு என்றுமே வெள்ளை இனத்தவர்களை முன் உதாரணம் காட்டுவதுண்டு . தோல் வெள்ளை என்பதால் அங்கு பிரச்னை இல்லை என்பதல்ல அர்த்தம். இதைவிட கொடுமையான சம்பவங்கள் வெள்ளையின மக்களிடமும் உண்டு. அவை செய்திகளில் வந்த படிதான் உள்ளன. பிரான்சில் உள்ள குடும்ப வன்முறை பற்றிய சமீபத்திய அறிக்கைகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன ………..

” One woman dies every three days of domestic violence in France

47,573 events were recorded by the gendarmerie and the police, which is an increase of over 30% compared to 2004 (36,231), but not an increase in the number of cases: there are more reports before (encouraged by the police and justice), and there is a new definition of domestic violence that now includes violence by a former spouse.

Domestic violence represents more than a quarter of all acts of violence.

In 2006, 137 women died of beatings by their partners (a woman every three days) and more than 3,000 acts of violence led to an inability to work more than eight days (down slightly from 3 360-3 103).

Statistically, this corresponds to 18.7 acts of domestic violence for 10,000 women, but with spikes in certain departments beyond 30 per 10,000 women.

This number is compared to a victimization survey conducted in 2007 for acts of 2005 and 2006: 410,000 women reported having experienced violence from their spouse or ex-spouse, or 2.3% of all women aged 18 to 60. Less than a quarter have therefore resulted in a complaint (21%).

One man dies every ten days of domestic violence in France

But the victimization survey also reveals that 127,000 men are victims of violence by their partner, or 0.7% of all 18 to 60 for the same period men. However, only 2,317 complaints were recorded for such deeds, men giving more than women to complain.

This means that just under a quarter of the facts of domestic violence are exercised over men.

In 2006, 37 men died, killed by their wives, but in three quarters of cases, the men beat their partners.

Origins of violence causing death

The circumstances of the deaths by domestic violence are relatively conventional and predictable: argument, alcohol, separation and jealousy.”


எதோ எங்கள் சமூகத்தில் மட்டும்தான் இந்த குடும்ப வன்மூறை (violence conjugales) இருப்பது போன்ற தோற்றத்தை இந்த பெண்மணிகள் உருவாக்குகின்றார்கள் . இது எல்லா இன குழுமங்களிலும் உள்ளது. அதற்கான தீர்வு மேலே நான் கூறிய ” வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் , மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறை என்ற பிரச்சனைகளும் மாறும். “





கோமகன் 

25 புரட்டாசி 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...