01 புத்தி தனக்கு புத்தி நுறு என்றது மீன் – பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை – மல்லாத்தி ஏற்றினேன் கல்லை . எனக்குப் புத்தி ஒன்றே என்றது தவளை எட்டிப் பிடித்தேன்- பிடிக்குத் தப்பி தத்தித் தப்பிப் போகுது தவளைக் கவிதை – “நூறு புத்தரே ! கோர்த்தாரே ! ஆயிரம் புத்தரே ! மல்லாத்தாரே! கல்லேத்தாரே ! ஒரு புத்தரே ! தத்தாரே! பித்தாரே ! நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ?? 000000000000000000000000000000000 02. E=mc2 ஒற்றைக் குருட்டு வெண்விழிப் பரிதி திசையெங்கும் கதிர்க்கோல்கள் ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்