"கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத் தன்மையுடனும் தன்னை வெளிப்படுத்துவதுதான்." - கவிதா லட்சுமி
புலம் பெயர்ந்த ஈழத்து அகதிகளின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக இருப்பவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று பல்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர். ஈழத்தின் இரண்டாம் புலம்பெயர் தலைமுறையில் தனக்கென்று தனிமுத்திரை பதித்த கவிதா பெண்ணிய, சமூக சிந்தனைகளையுடையவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவரது கவிதைகள் பெண், சமூகம் போர், வாழ்தல், காதல், மொழியாக்க கவிதைகள் என்று பல்வேறுபட்ட தளங்களில் படுபொருள்களைக் கொண்டவை. இவரது கவிதைகளிலே இலகு சொல்லாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஞானம்தேடிச் சென்றவர் கதை ஒருவனுடைய தலைகள் அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது கடைகளில் எல்லாம் அதே தலைகள் கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள் இந்தத் தலைகள்தான் முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ முழுமை விட்டுப்போனதோ சுயத்தை முழுதாய் இழந்த தலைகள் இவைகள் எதற்கும் தயார...