Skip to main content

Posts

Showing posts from May, 2019

தீரனின் பார்வையில் 'முரண்'

‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்... பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்-- //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்...பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்...// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்...? ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் ந...

அறத்துப்பால்-இல்லறவியல்-வாழ்க்கைத்துணைநலம்-The Goodness of the Help to Domestic Life-Bien fait de la Compagne 51-60

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 இரக்க குணம் பொருந்தி , கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள் . எனது பார்வை: விரலுக்கேத்த வீக்கம் வேணும் எண்டு சொல்லுவினம். சும்மா அடுத்த வீடு பீ எம் டபுள் யூ வாங்கினால் தானும் வாங்கவேணும். கூட்டாளி மங்களம் பவியோன் வீடு வாங்கினால் தானும் வாங்கவேணும். 50 பவுணில தாலி போடவேணும் எண்டு புரியன்காறனை அரையண்டம் பண்ணாமல் அவன் எடுக்கிற சம்பளத்தில கட்டுச்செட்டாய் குடும்பம் நடத்திறவள் அச்சா மனுசி. As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she. Est compagne, l'épouse qui, unit aux bonnes qualités et conduite inhérentes à la vie familiale, le talent de proportionner les dépenses aux revenus de son mari. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பய...

தாலிபாக்கியம் - சிறுகதை

வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு ந‌டக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். த‌ன‌க்கு இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் என்று வ‌ள்ளிப்பிள்ளை க‌ன‌விலும் நினைக்க‌வில்லை.ந‌ட‌க்க‌ப்போவ‌து ந‌ல்ல‌தென்றுதான் அனைவ‌ரும் கூறுகிறார்க‌ள். ஆனால் அவ‌ளுக்கு இதி துளி கூட‌விருப்ப‌ம் இல்‌லை. வ‌ள்ளிபிள்ளையின் க‌ண‌வ‌ன் க‌ந்த‌சாமிக்கு வ‌லு ச‌ந்தோச‌ம். அவ‌ர‌து வாழ்நாளில் செய்ய‌முடியாத‌ சாத‌னை இன்று ந‌ட‌க்க‌ப்போகிற‌து என்பதில் அவ‌ருக்கு இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி.க‌ந்த‌‌சாமி...

ஓடி வந்தவர்கள்...- சிறுகதை

சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்திலையொன்றை நடு நரம்போடு இரண்டாகக் கிழித்தா; பிறகு நிதானமாகச் சுண்ணம்பைப் பூசத் தொடங்கினா. "நான் புதினம் சொல்லப்போக இவள் வெத்திலை போடுறாள்," என்று சின்னாச்சி அலுத்துக் கொண்டா. "அவள் கிடந்தாள் நீ விசயத்தைச் சொல்லு, " இன்னொரு ஆச்சி சொன்னா. இது நடப்பது வேதப் பள்ளிக்கூடத்துக்குப் ப...

வசூலிப்பு - கட்டுரை

வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது. எத...

அறத்துப்பால்–இல்லறவியல்-இல்வாழ்க்கை-Domestic Life-La vie familiale - 41 - 50

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. 41 இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர் , மனைவி , மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான். எனது பார்வையில்: வெளி நாட்டுக்குப் போனதன் பின்பு வெள்ளைக்காறியிடம் மயங்கி வீடுவாசலை மறந்து அவளோடை அடுகிடைபடுகிடையாகக் கிடையாக் கிடக்காமல், பெத்த தாய் தேப்பனையும் கட்டின மனுசி பிள்ளைகளையும் நினைச்சு கடுமையாய் உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாற்றி, தானும் ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தோட சந்தோசமாய் வாழுபவன்தான் சரியான குடும்பஸ்த்தன் என்பது என்ரை இவ்வளவு கால அனுபவமும், இந்தக் குறள் வரிகளிலை இருந்து நான் எடுத்துக் கொண்டதும்...... The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain. Le chef de famille le ferme soutien des (hommes des) trois autres clases qui ont renoncé au monde (étudiant, anachorète et ascète) en ce qu’il les aide à persister dans leur bonne voie. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்ப...

அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்-Assertion of the Strength of Virtue-Encouragement à la vertu 31-40

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31 அறம், வீடுபேற்றையும் சுவர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும்; ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தைவிட நன்மை உடையது வேறு ஒன்றும் இல்லை. எனது பார்வை: மனுசனாய் பிறந்தவை தங்களிட்டாய் இருக்கிறதை மற்றவைக்கும் குடுத்து சிவிச்சால் அவை திரும்பியும் ஒரு பிறப்பெடுக்க மாட்டினம். ஆனால் அவை சொர்க்கத்துக்கு போவினம் எண்டு பீலா விடுறது எனக்கு கடுப்படிக்குது.  It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain? Quel plus grand bien à la vie humaine que la vertu? Elle donne la grandeur, elle donne la richesse. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. 32 ஒருவனுக்கு, அறத்தை செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை; அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும் மேம்பட்ட கேடும் இல்லை. எனது பார்வை: கலி முத்தினால் கள்ளருக்கும் காடையருக்கும் பொய் பித்தலாட்டக் காரருக்கும் தான் வாழ்மானம் எண்டு சும்மாவே சொன்னாங்கள் No greater gain than virtue au...