Skip to main content

கருத்துச்சுதந்திரம் -Freedom of speech- liberté d'expression



நகரின் மத்தியில் ஓர் பிரபல்யமான சீன உணவகம் இருந்தது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் உடனுக்குடன் உயிர் மீனை பிடித்து வெட்டி விதம் விதமான மீன் கறிகளை நாவுக்கு ருசியாக அதன் தலைமை சமையல்காறர் செய்து கொடுப்பார். இதனால் எப்பொழுதும் அந்த சீன உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அந்த சீன உணவகத்தில் அழகான ஓர் பெரிய விசாலமான மீன் தொட்டி இருந்தது. அதில் பலவகையான மீன்கள் தங்களுக்குள் கதைத்தும் பேசியும் மகிழ்வாக ஓடித்திரிந்தன. அந்த மீன்களுக்கு இந்த உலகமானது மிக மிகப்பிரமாண்டமானது என்றதோர் மிகப்பெரிய எண்ணம் இருந்தது. 

அதில் இருந்த ஓர் மீன் வடிவாக மீன் தொட்டியை சுற்றி விட்டு வந்து மற்ற நண்பர்களுக்கு சொன்னது, "நீங்கள் எண்ணுவது பிழை. இந்த மீன்தொட்டிதான் எங்கள் உலகம். இடையில் ஓர் கண்ணாடி இருக்கின்றது" என்று சொன்னது. மீனின் இந்தப் பதிலால் சில மீன்கள் கடும் கோபமுற்று அந்த மீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின அந்த மீனும் மனம் தளராமல் " நண்பர்களே நீங்களும் ஒருமுறை நான் சொன்னதை பரிசோதனை செய்துபாருங்கள் அப்பொழுது நான் சொன்னதன் உண்மை தெரியும்" என்று சொன்னது. அந்த நேரம் மீன் தொட்டிக்கு வெளியில் நின்ற ஓர் வாடிக்கையாளர் ஒருவர் ஓர் மீனைக் கையால் காட்ட, தலைமை சமையல்காறர் அந்த மீனை துடிக்கத்துடிக்க வெட்டுவதற்கு பிடித்துக்கொண்டு போனார்.

தாங்கள் கொல்லப்படுவதற்காகதான் இந்த மீன்தொட்டியில் இருக்கின்றோம் என்ற உண்மை அப்பொழுதான் மற்றைய மீன்களுக்கு தெரிய வந்தது. எல்லா மீன்களுக்கும் பதட்டமும் மரணபயமும் வந்துவிட்டது. அப்பொழுது ஒரு மீன் மற்றைய மீன்களைப் பார்த்து சொன்னது , " நண்பர்களே!! நாங்கள் தலைமை சமையல் காறனால் சாகத்தான் போகின்றோம். ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியாது. இப்பொழுது இருக்கும் இந்த நிமிடத்தை சந்தோசமாய் கதைத்து மகிழ்ச்சியாக இருப்போமே" ? என்று ஓர் ஆலோசனை சொன்னது . எதை கதைப்பது என்று மற்றைய மீன்கள் மரண பயத்தில் முழுசின. அப்பொழுது அந்த மீன் சொன்னது , " கதைக்கா பஞ்சமில்லை. நாங்கள் இறந்த பின்னர் இந்த தலைமை சமையல் காறர் எந்த விதமான சோசில் எப்படி எப்படியெல்லாம் எங்களைக் கறியாக்குவார் என்பது பற்றி கதைப்போமே" என்றது. மற்றைய மீன்களும் மிக சந்தோசமாக தலைமை சமையல்காறர் செய்யப்போகும் சோசைப் பற்றியும்  தங்கள் எதிர்பார்ப்புகளையும் ஆரூடங்களையும் சொல்லத்தொடங்கின.

நன்றி :

போன கிழமை கலைச்செல்வனின் 10 ஆவது வருட நினைவு நாள் நிகழ்வில் நண்பர் வாசுதேவன் கருத்துச்சுதந்திரம் பற்றிய பேச்சில் இருந்து .

கோமகன்

April 06, 2015



Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...