Skip to main content

கோமகனின் 'தனிக்கதை ' - என்னுரை



எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும்
பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது.

இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. 

ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால் ஏற்பட்ட அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும், ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையை அம்மணமாகப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா? அந்த வகையில் அவற்றை அப்படியே விட்டிருக்கின்றேன்.

இந்த பதினாறு கதைசொல்லிகளும் எதோ ஒருவிதத்தில் எம்மைச்சுற்றி இருக்கும் குறைகளைத் தொட்டுச்செல்கின்றன. என்னைப்பொறுத்த வரையில் ஓர் எழுத்தாளன் என்பவன் வெறும் அழகியல் குறிப்புகளை எழுத்தில் வடிக்காது, எம்மைச்சுற்றியுள்ள கறுப்புப் பக்கங்களைத் தொட்டு வாசகர் மனதில் ஓர் பொறியை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும். அந்தவகையில் இந்தக் கதைகளில் ஓர் கதையாவது வாசகர் மனதில் ஓர் சிறு பொறியைக் கிளப்பியிருந்தால் நான் தொகுத்த இந்த சிறுகதை தொகுதியானது அதனது நோக்கில் வெற்றியடைந்திருக்கின்றது என்று எடுத்துக்கொள்கின்றேன்.

நான் எழுதத்தொடங்கிய காலங்களில் எனது கதைகளைப் பிரசுரித்து அதன் மூலம் பல வாசகர் வட்டங்களை உருவாக்கித்தந்த யாழ் இணையம், நிலாமுற்றம்,தமிழ்நண்பர்கள் இணையம்,"ஒருபேப்பர்"(பெரியபிருத்தானியா), "ஆக்காட்டி" இலக்கிய சஞ்சிகை, (பிரான்ஸ்),"எதுவரை" இலக்கிய சஞ்சிகை (பெரிய பிருத்தானியா) ,"மலைகள்" இலக்கிய சஞ்சிகை (இந்தியா),"அம்ருதா" இலக்கிய சஞ்சிகை (இந்தியா) ஆகியவற்றின் ஆசிரியர் குழுவினரையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவுகூர்கின்றேன். இந்த சிறுகதை தொகுதியை அழகாக வடிவமைத்து வெளியிடும் மகிழ் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி...................... வணக்கம் !!!





கோமகன்
மின்னஞ்சல் தொடர்பு : koomagan93@gmail.com


June 14, 2015

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...