Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பாகம் 08



ஐமிச்சம் ஐயம்பிள்ளையும் அம்மாக்குஞ்சியும்



மெய்யே பிள்ளையள்......... இதை ஒருக்கால் கேளுங்கோவன். இப்ப ரெண்டு மூண்டு நாளைக்கு முன்னம் ஒருத்தனும் ஏன் நாயே எண்டு கேக்காத நேரத்திலை முகப்புத்தகத்துக்கு நான் மண் எடுத்துக்கொண்டிருந்தன். அப்ப அதிலை ஒரு விசையத்திலை எல்லாரும் லைக்கி மோர் கடைஞ்சு கொண்டு இருந்தினம். நானும் ஐமிச்சத்திலை என்ன ஏது எண்டு எட்டிப்பாத்தால் அங்கை இந்த பேரன் பேத்தியளை எப்பிடி அவையின்ர அம்மம்மாமார் பாக்கினம் எண்ட மாற்ரர் ஓடிக்கொண்டிருந்திது.

ஐயம்பிள்ளையருக்கு உந்த பொசிப்பெல்லாம் சிவசத்தியமாய் கிடைக்கேலை பாருங்கோ.அவற்றை அம்மம்மாவும் அம்மப்பாவும் ரிக்கெட் எடுத்துப்போட்டினம். ஆனால் ஐயம்பிள்ளை உறுக்கிணிக்குழுவனாய் இருக்கேக்கை அவற்றை பூட்டியோடை தான் சிங்கன் வாலாயம். அவாவின்ரை பேர் சிதம்பரம் எல்லாரோடையும் கொழுத்தாடு பிடிக்கிற கிழவி இவரோடை மட்டும் ஒரு தனகலும் இல்லாமல் ஒட்டெண்டால் அப்பிடியொரு பிலக்காய்பால் ஒட்டு.

அந்த நேரத்திலை ஐயம்பிள்ளைக்கு ரெண்டு எளிய பழக்கம் இருந்தீச்சுது. ஒண்டு விரல் சூப்பிறது. மற்றது கேட்டு கேள்வியில்லாமல் கண்ட கடியளையும் வாயுக்கை போடிறது. எல்லாரும் தான் சின்னிலை விரல் சூப்பிச்சினம். ஆனால் ஐயம்பிள்ளையின்ரை ஸ்ரைல் வேறை. வலக்கை நடுவிரல் ரெண்டும் வாயுக்கை கிடக்கும். இதாலை ஐயம்பிள்ளையின்ரை ரெண்டு விரலும் சூம்பி பாக்க அரயண்டமாய் கிடக்கும். அதோடை அவற்றை அடுத்த வேலை, அம்மாக்குஞ்சியின்ர சொருசொருத்த கையிலை துப்பலை நல்லாய் பூசிப்போட்டு, அவாக்கு பக்கத்திலை படுத்துக்கொண்டு காதை கையிலை வைச்சு எடுக்க "டொக் " எண்டு ஒரு சத்தம் வரும். இப்பிடி காதை அம்மாக்குஞ்சியின்ரை கையிலை வைச்சு வைச்சு டொக் சத்தம் கேக்கிறதிலை ஐயம்பிள்ளைக்கு ஒரு திறில். இதுகளை பாத்த அம்மாக்குஞ்சிக்கு கடும் கடுப்பு எல்லாரையும் தூசணத்தாலை பேசிற குஞ்சிக்கு இந்த உறுக்குணிக் குழுவனோடை றாட்ட மனம் வரேலை. உறுக்குணிக் குழுவனுக்கு நாலுகதையளை பொழிப்பாய் சொல்லி வேப்பம் எண்ணையை பூசி விட்டுது. ஐயம்பிள்ளைக்கு பேந்து விரல் சுப்பிற நோக்கம் சிந்தனையள் வரேலை கண்டியளோ.

உப்பிடித்தான் ஒருக்கால் கண்டதையும் வாய்க்குள்ளை போடிற அழுகல் பழக்கத்தாலை ஒருநாள் அம்மாகுஞ்சிக்கு கிட்ட படுத்திருந்த ஐயம்பிள்ளை அம்மாக்குஞ்சியை உச்சிப்போட்டு பக்கத்திலை கைவிளக்கிலை கிடந்த மண்ணெண்ணையை வாய்க்குள்ளை விட்டு குடிச்சுப்போட்டார். என்ன ஐயம்பிள்ளையின்ரை அசுமாத்தத்தை காணேலை எண்டு பாத்த அம்மாக்குஞ்சி, மண்ணெண்ணை ஐயம்பிள்ளையின்ரை வாயிலை மணக்க ஊரைக்கூட்டி ஒப்பாரி வைச்சு ஆளை ஆசுபத்திரியிலை கொண்டு போய் பிழைக்க வைச்சா. இப்பிடியெல்லாம் அன்பாய் பாசமாய் இருந்த அம்மாக்குஞ்சி, ஐயம்பிள்ளை கொஞ்சம் வெடிச்சு வளந்து வர ஒரு நாள் சேடம் இழுத்து செத்துபோனா. அப்ப கிட்ட முட்ட அவாக்கு ஒரு 98 வயசு இருக்கும். அம்மாக்குஞ்சி செத்துப்போனது ஐயம்பிள்ளைக்கு செரியான மனத்தாக்கமாய் போச்சுது. இண்டைக்கும் ஐயம்பிள்ளையர் வட்டுறுட்டிதலையோடை ஹண்ட்சம்மான போய் எண்டால் அதுக்கு ஆம்மாக்குஞ்சியின்ரை வளப்பு விறுத்தம் தான் கண்டியளோ. அம்மாக்குஞ்சியின்ரை நினைப்பு எப்பவும் ஐயம்பிள்ளைக்கு பிலாக்காய்பால் மாதிரி ஒட்டிக்கொண்டுதான் கிடக்கும்.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை

00000000000000000000000000

ஹாய் பிள்ளையள்!!!!

வந்ததுதான் வந்தன் சுறுக்காயும் ,சுருகெண்டு ஒண்டை சொல்லிப் போட்டு போறன். இப்ப கிடடியிலை வந்த ஜனாதிபதி "என்ரை திரி" ஒரு 100 நாள் திட்டம் ஒண்டை அறிவிச்சவரேல்லோ?? அதிலை ஒண்டு இந்த சம்பளம் கூட்டிறது கண்டியளோ. புதுக்க துணி வெளுக்க வாறவன் கரை கட்டி வெளுப்பான் எண்ட நினைப்புத்தான் எனக்கு அப்ப மண்டையுக்கை அடிச்சது. இப்ப என்னடாவெண்டால் கொர்ணமேந்திலை கோழி மேய்க்கிறவைக்கு ஆக குறைஞ்ச சம்பளம் 330000 ரூபாயாம் (218 யூறோ). என்ரை கேள்வி என்னவெண்டால், கோழி மேய்க்கிறவையின்ரை சிலவு சித்தாயத்தையுமேல்லோ சொல்ல வேணும் பாருங்கோ. எடுக்கிறது ரூபாயிலை விடுறது சூறோவிலை எண்டால் , என்ரை கூட்டாளி ஐயம்பிள்ளையன் எங்கை போறது கண்டியளோ ??

000000000000000000000000

வணக்கம் பிள்ளையள். ஐ யாம் ஐமிச்சம் ஐயம்பிள்ளை . எனக்கு இண்டைக்கு வந்த ஐமிச்சங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அது என்னவெண்டால் , இப்ப கொஞ்ச நாளாய் நானும் இந்த பேஸ் புக்கிலை பாக்கிறன் , இந்தியாவிலை ஆரோ பெருமாள் முருகனாம் மாதொருபாகன் எண்டு ஒரு கதை எழுதினவராம் ,அந்த கதையை எரிச்சு அந்தாளையும் போட்டு கொஞ்ச மோட்டுக்கூட்டம் பாடாய் படுத்தினமாம் உண்மையோ ?? எனெண்டால் இந்த இந்து சமய புராண கதையளிலை இருக்கிற செக்ஸ்சுகள் சொல்லி வேலையில்லை. உதுகளை தத்தாச்சாரி ஐயா எண்ட பெரிய வித்துவான் "இந்துசமயம் எங்கே போகிறது??" விலை கிலோக்கணக்கிலை வித்த நேரம் ஏன் இந்த கோஸ்ரியள் அந்தாளின்ரை புத்தகத்தை எரிக்கேலை ?? உந்த பாரதம், ராமாயணம் எல்லாமே செக்ஸ்சு கலன் கணக்கிலை வழியுது. ஏன் அதுகளை எரிக்கேலை?? இதுகளை பத்தி தமிழ்கவி குஞ்சியும் ரென்சனாகி கேள்வியள் கேட்டிருக்கு .எனக்கு இண்டைக்கு வந்த ஐமிச்சம் , செக்ஸ்சுகள் வழியிற புராண இதிகாசங்களை ஏன் இந்த கோஸ்ரியளாலை எரிக்காமல் போச்சுது ?? ஏன் இந்த மாதொரு பாகனை போட்டு குடையுதுகள் ??விளங்கின ஆராவது இந்த ஐமிச்சத்தை கிளியர் பண்ணுங்கோ . உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

0000000000000000000000000

வணக்கம் பிள்ளையள் .இண்டைக்கு ஊருலகத்திலை கண்டதைக்காணத மாதிரி பெடிப்புள்ளையள் எல்லாம் சர்வதேச வேட்டிதினம் எண்டு தாங்களும் கட்டி படமெடுத்து பகிடி விடுறாங்கள். நோக்கம் என்னவெண்டால் இதிலையாவது பெடிச்சியள் தங்களை பாத்து மருளுவாளவை எண்ட நினைப்பு தான். வேறை என்ன ?? ஆனால் பாருங்கோ சுறுக்கன் தன்ரை பிடியை ஒருக்காலும் விடமாட்டான். இதுதான் என்ரை உடுப்பு. புடிச்சிருந்தால் சொல்லுங்கோ. கதையோடை கதையாய் உந்தக்கோலத்தை பாத்துத்தான் என்ரை பொன்னாச்சி கவுண்டது எண்டால் பாருங்கோவன். என்னண்டாலும் சுறுக்கன் குறைவிளங்கமாட்டான். அதாலை எப்பிடியெண்டு சொல்லுங்கோ. சுறுக்கனுக்கும் பொழுது போகவெல்லோ வேணும் .

0000000000000000000000000

சொக்கிலை முத்தமிட்டால் ......................

மெய்யாலும் காரியம்......... ஐயம்பிள்ளைக்கு நடந்த விசையம் ஒருத்தனுக்கும் வரப்படாது கண்டியளோ . ஐயம்பிள்ளைக்கும் அவரோடை வேலைசெய்யிற பெடிச்சியளுக்கும் ஒட்டெண்டால் அப்பிடியொரு ஒட்டு. ஒவ்வருநாளும் விடியக்காத்தாலை ஐயம்பிள்ளையை கட்டிப்பிடிச்சு சொக்கிலை பிஸு ( உம்மா ) குடுக்காட்டில் அவளவைக்கு வேலை ஓடாது எண்டால் பாருங்கோவன். உப்பிடித்தான் ஐயம்பிள்ளை அண்டைக்கு வேலை செய்துகொண்டிருக்கேக்கை ஒருத்தி வந்து கட்டிபிடிச்சு ஹாய் ஷெரி ( டார்லிங் ) எண்டு ஐயம்பிள்ளையரின்ரை சொக்கிலை ஒரு உம்மா தந்தாள். ஐயம்பிள்ளையும் வஞ்சகமில்லாமல் ஒரு உம்மாவை கொடுத்தார். அதின்ரை எபெக்ட் போன திங்கள் பின்னேரம் தான் ஐயம்பிள்ளைக்கு தெரிஞ்சுது. இண்டை வரை வைரஸ் காச்சல் எண்டால் அப்பிடியொரு காச்சல். ஐயம்பிள்ளை நொந்து நூலாகி போச்சுது. இதுக்குள்ளை மனிசிக்காறி குடிநீர் வைக்கிறன் பேர்வழி எண்டு பரியாரி வேலை பாத்து ஐயம்பிள்ளையை வறட்டி எடுத்துபோட்டாள். அதாலை பெடியள் ஆரும் சும்மா உம்மா தந்தாலும் வேண்டிப்போடாதையுங்கோ சொல்லிப்போட்டன்.

ஐயம்பிள்ளை

0000000000000000000000000

உப்பிடித்தான் அண்டைக்கு கொழும்புக்கு கோச்சி எடுக்க கொடிகாமம் ரெயில்வே ஸ்டேசனிலை நிண்டு கொண்டிருக்கிறன். எனக்கு கொஞ்சம் தள்ளி 3 லேடீஸ் அண்ட் 1 ஜென்டில்மன் நிண்டு கொண்டு தாங்கள் கொண்டு வந்த ஐ பாட்டாலை படம் எடுத்துக்கொண்டு படம் காட்டிக்கொண்டு நிண்டினம். இடைக்கிடை இங்கிலிசு வேறை வந்து கொண்டு இருந்துது. நான் இவை அப்பிடி என்னதான் கதைக்கினம் எண்டு காதை கழட்டி அவைக்கு கிட்டவாய் வைச்சு போட்டு அவையை பாத்துக்கொண்டு நிண்டன். அந்த டமில் லேடீஸ், ஜென்டில்மனுக்கு இங்கிலுசுவிலை வெளுத்துக்கட்டி கொண்டு நிண்டினம். தாங்கள் அப்பத்தான் லண்டனாலை வந்து கொழும்பிலை நிண்டு இப்ப ஆரையோ கொடிகாமத்திலை சந்திக்கப் போகினமாம். அவையளை பாத்தால் அசல் பனங்கொட்டை டமில்ஸ் ஆய் கிடக்கு. பேந்து கொஞ்சத்தாலை கொடிகாமம் பார்ட்டியள் வர அவையோடை தமிழிலை கதைச்சு கொண்டு போச்சினம். அந்த நேரம் கொடிகாமம் ரெயில்வே ஸ்டேசனிலை நானும் மனுசியும் அவையளோடை என்னம் 2 பேர்தான் நிண்டிச்சினம். உங்களுக்கே தெரியும் கொடிகாமம் நல்ல வடிவான சின்ன கிராமம் எண்டு. சிவசத்தியமாய் பிள்ளையள் எனக்கு அவை இங்கிலிசுவிலை அதுவும் கொடிகாமத்திலை கதைச்சது தாங்கேலாமல் கிடக்கு கண்டியளோ.

சுருக்கு சுறுக்கர்

June 05, 2015

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...