Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 (ஒழிச்சு வை)


ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!! 



வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு,

 "அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ "?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா , 

"உமக்கு ஆரையும் தெரியுமோ "? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் .

வந்த பெடி உரு ஏறி,

 "உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் " எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான். 

அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா " நில்லு தம்பி புத்தகம் கிடக்கு" எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிருந்த ஆயுத எழுத்து புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து குடுத்தார். எனக்கெண்டால் நான் மெட்றாசிலை பாரிஸ் கோர்னர் , பாண்டி பஜாரிலை நிக்கிறமாதிரி ஒரு பீலிங் . ஏனெண்டால் அங்கைதான் உந்த மஜா புத்தகங்கள் , சீடி க்கள் ஒழிச்சு வைச்சு சனங்களுக்கு விப்பாங்கள் , அதுவும் வலுகலாதியாய் கறுப்பு சொப்பிங் பாக்கிலை குடுக்கிறவங்கள்.

மாத்தையாவும் ஒரு கறுப்பு பையிலை போட்டு பதினைஞ்சு யூறோ வாங்கி கொண்டு பெடியை அனுப்பிவிட்டார். எனக்கெண்டால் அண்டம் கிண்டமெல்லாம் பத்திபோட்டுது. நான் மாத்தையாவை பாத்து , 

"உதென்ன விசர் வேலை பாக்கிறாய் ?? வெளிலை வைச்சு மரியாதையாய் புத்தகத்தை வில்லன்" எண்டு மாத்தையாவோட ஏறினன். அதுக்கு அந்தாள் சொல்லுது,

"உங்களுக்கு விஷயம் தெரியாது சுறுக்கர். பேந்து நான் கடை வைச்சிருக்கிறேலையோ"?? எண்டு . நான் கேட்டன், "அதென்ன தமிழ்க்கவி குஞ்சி எழுதின ஊழிக்காலத்தை பப்ளிக்கிலை வைச்சு விக்கிறாய் . இதுக்கு மட்டும் வித்தாரம் பறையிறாய் " எண்டு .

சுறுக்கர் வீட்டை போங்கோ மனுசியெல்லொ தேடுவா எண்டு என்னை சமாளிச்சு வீட்டை அனுப்பிறதிலையே மாத்தையா பிறியப்பட்டார். நான் சொன்னன் "நீ என்ன மசிருக்கு புத்தகக்கடை வைச்சிருக்கிறாய்?? எழுதின ஆக்களை பாத்து பொன்னையங்கள் மாதிரி புத்தகம் விக்காதை . நீ வியாபாரி எண்டதையும் மறக்காதை" எண்டு நெவிள் பறக்க பேசிப்போட்டு வந்திட்டன் .அதென்ன பழக்கம் புத்தகத்தை ஒழிச்சு வைச்சு விக்கிறது?? அழுகல் பழக்கம் . அப்ப நான் வரட்டோ?

சுருக்கு சுறுக்கர்
06 மாசி 2015



Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...