Skip to main content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்




01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

தொல்காப்பியம்.

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

விஷ்ணுகோபன்.

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

சுமேரிய நாகரீகம்.

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

கௌதமபுத்தர்.

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

15 பகுதிகள்.

00000000000000000000000

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

3ஆம் நந்திவர்மன்.

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

19 ஆம் நூற்றாண்டு.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது?

74 கி .மீ.

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14000 வகைகள்.

0000000000000000000000000000

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

பூரிக்கோ.

02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்?

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து.

05தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

000000000000000000000000000

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

சிந்தாதேவி.

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

சடையப்பவள்ளல்.

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

நம்பியாண்டார் நம்பி.

04 சேக்கிழாரின் இயற்பெயர் என்ன ?

அருண்மொழித் தேவர்.

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

00000000000000000000000000000

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?

இருபத்தாறு.

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை – 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

இந்திர பிரஸ்தம்.

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

வினாக்கள் ஆறுவகைப்படும் .
அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை ?

விடைகள் எட்டு வகைப்படும்.
கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.

00000000000000000000000

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

போர்.

02 எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

கலம்பகம்.

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

இரும்பு இல்லாததால்.

04 எந்த தாவரம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

கிழாநெல்லி.

05 மனோதத்துவத்தில் “மனபிம்பம்” என்றால் என்ன ?

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

000000000000000000000000

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

மனப்போரட்டம்.

02 மனநலமுடையோர் என்றால் யார் ?

தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் .

03 தமிழ் இலக்கணத்தில் “பால் ” எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

ஐந்து வகைப்படும் . ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று சொல்லப்படும் .

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

சர்க்கரை வியாதி.

May 12, 2014

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...