01 கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
அமெரிக்கா
02. சிரிக்க வைக்கும் வாயு எது ?
நைட்ரஸ் ஒக்ஸைட்
03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின் பெயர் என்ன?
இனியாக்
04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
ஒஸ்மோலியன்
05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
சீனர்கள் (1948)
00000000000000000000000
01 தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
அயூரியம்.
02 பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ?
10 மாதம்
03 கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
1900
04 கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
21 நாட்கள்
05 தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
மைக்கோபக்டீரிம் என்னும் பக்ரீறியா
0000000000000000000000000
01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?
பிரான்ஸ்
02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
சிரியஸ்
04 அணுவை பிளந்து காட்டியவர் ?
ரூதர் போர்டு
05 மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8 எலும்புகள்
000000000000000000000000
01 தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் என்ன ?
அழகர் குறவஞ்சி
02 அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
ஜெருசெலேம்
03 கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் யார் ?
ஆண்டாள்
04 கூகுள் தேடு பொறி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது ?
1998
05 குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது என்ன ?
கந்தர் கலிவெண்பா
000000000000000000000000
01 நியூயார்க் டைம்ஸ் இதழ் எந்த ஆண்டில் முதன் முதலில் வெளியிடப்பட்டது ?
1851
02 முல்லைப்பாட்டைப் பாடியவர் யார் ?
நப்பூதனார்.
03 தூது இலக்கியத்திற்குரிய யாப்பு என்ன ??
கலிவெண்பா
04 சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
குமரகுருபரர்
05 ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் என்ன ?
லூசிட்டானியா
0000000000000000000000
01 எப்பொழுது அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது?
1962
02 சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பிட்மேன்
03 திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் ?
சமணம்
04 சார்பெழுத்துக்களில் எத்தனை வகைகள் உள்ளன ?
ஐந்து
05 இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக எந்த உடன்படிக்கை அமைந்தது ?
வெர்சேல்ஸ் உடன்படிக்கை
00000000000000000000000
01 சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள்?
வன்மீகம்
02 பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது ?
மதுரைக் காஞ்சி
03. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?
பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் .
04 இராவண காவியம் எழுதியவர் யார் ?
புலவர் குழந்தை
05 விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்
0000000000000000000000
01 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
வில்லோ மரம்
02 நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
வெற்றிவேற்கை
03 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?
நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்
04 குறிப்பு பெயரெச்சம் என்றால் என்ன ?
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். உதாரணம் : நல்ல மாணவன் , அழகிய மலர்
05 திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் யார் யார் ?
பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
கருடாம்சம் - பெரியாழ்வார்
சுதர்சனம் - திருமழிசையாழ்வார்
களங்கம் - திருமங்கையாழ்வார்
000000000000000000000000
01 ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா
02 பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து.
03 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் என்ன?
மலைபடும்கடாம்
04 தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் ?
செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை
05 மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி யார் ?
அறவண அடிகள்
000000000000000000000000
01 கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் யார் ?
இரட்டைப் புலவர்
02 தொல்காப்பியத்தின் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது ?
அகத்திணை, புறத்திணை.
03 தென்னவன் பிரமராயன் என்ற விருதைப் பெற்ற நாயன்மார் யார் ?
மாணிக்கவாசகர்
04 அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் யார்?
குலசேகரர்
05 உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
கருவிழி
0000000000000000000
01 காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம்
சிக்காகோ
02 குண்டலகேசியின் ஆசிரியர் யார் ?
நாதகுத்தனார்
03 இரண்டாம் குலோத்துங்க மன்னனின் சிறப்பு பெயர் என்ன ?
கிருமி கண்ட சோழன்
04 அமில மழை என்றால் என்ன ?
காற்றில் கலந்துள்ள மாசுக்களான சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் ஆக்சைடுகள் எளிதில் மழை நீரில் கரைந்து அமிலங்களை தோற்றுவிக்கின்றன. இதற்கு அமில மழை என்று பெயர்.
05 திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் யார் ?
காரைக்கால் அம்மையார்
0000000000000000000000000
1 வினைத்தொகை என்றால் என்ன?
மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.
02 தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்றால் என்ன?
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.
03 முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
இத்தாலி
04 உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?
குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள்,
05 பஞ்சகவ்வியம் என்பது யாது?
பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர்
00000000000000000000000000
01 திருவிழா என்றால் என்ன ?
ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர்.
02 யார் யார் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளாக பவனி வருவார்கள் ?
விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர் .
03 டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
மன்சூர் அலிகான் பட்டோடி.
04 முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது சிறப்புப் பெயர் என்ன ?
பொன்வேய்ந்த பெருமாள்.
05 தமிழ் இலக்கணத்தில் தொடை என்றால் என்ன ? அவை எத்தனை வகைப்படும் ? அதன் விபரங்கள் யாது ?
எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பது தொடை ஆகும் . இவை எதுகைத்தொடை , மோனைத்தொடை, முரண்தொடை, இயைபுதொடை, அளபெடைத்தொடை என ஐந்து வகைப்படும்.
00000000000000000000000
01 எந்த ஆண்டு மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன?
1630
02 மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?
ஆஸ்திராலாய்டுகள்.
03 தொல்காப்பியத்தில் அகப்பொருள் உரைக்கும் நான்கு இயல்கள் எவை ?
திணையியல், களவியல், கற்பியல் , பொருளியல்
04 தமிழ் இலக்கணத்தில் வினையாலணையும் பெயர் என்றால் என்ன ? உதாரணம் தருக ?
ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்.
உதாரணம் : படித்தவன், கண்டவர் , சென்றனன்
05 சிவன் கோவில்களில் ஆறாதார ஸ்தலங்களை வரிசைப்படுத்துக ?
திருவாரூர் (மூலாதாரம்)
திருவானைக்கா (சுவாதிஷ்டானம்)
திருவண்ணாமலை, (மணிபூரகம்)
சிதம்பரம், (அநாகதம்)
திருக்காளத்தி, (விசுத்தி)
காசி (ஆக்ஞை)
00000000000000000000000000
01 யார் யார் திருக்கயிலாய சந்தான குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?
மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார்
02 பரஞ்சோதி மாமுனிவருக்கு குருவானவர் யார்?
சத்தியஞான தரிசனிகள்.
03 மரதன் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும்?
26 மைல்கள்
04 ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
1920
05 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மனிமேகலையை எழுதியவர் யார் ?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
000000000000000000000
01 ஒருவர் இருமும்பொழுது அந்த இருமலின் வேகம் மணிக்கு எவ்வளவு வேகமாக இருக்கும் ?
100 கிலோ மீட்டர்
02 எரிமலை இல்லாத கண்டம் எது ?
அவுஸ்திரேலியா
03 தமிழ் இலக்கணத்தில் எண்ணும்மை என்றால் என்ன ? உதாரணம் தருக ?
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும். உதாரணம் : அவன் இவன் , இரவு பகல் , இராப்பகல்
04 தமிழ் இலக்கணத்தில் தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன ?
காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.
05 சூக்கும உடம்பு என்றால் என்ன ?
ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் காரண தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அனுபவித்தற்குக் கருவியாய் ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு எனப்படும்
00000000000000000000
01 சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டு நூல்களையும் அருளிச் செய்தவர் யார் ?
திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார்
02 திருவிழாவில் கொடியேற்றத் தத்துவம் என்ன ?
திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாகும்.
03 திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் அண்ணளவாக இருக்கும் ?
8 ஆயிரம் லிட்டர்.
04 சூளாமணி என்ற நூலை எழுதியவர் யார் ?
தோலாமொழித்தேவர்
05 யசோதர காவியம் எதனை செய்யாதே என்று கூறி நிற்கின்றது ?
உயிர்க்கொலை தீது எனச் சொல்கின்றது
0000000000000000000000
01 பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் யார் ?
பாஸ்கோ நூனியெத் தே பால்போவா
02 பிரான்சில் எந்த ஆண்டில் குடியரசு நிறுவப்பட்டது ?
1792
03 முதன் முதலில் நில அளவை முறையை எந்த மன்னன் அறிமுகப்படுத்தினான் ?
முதலாம் இராஜராஜன்
04 திரு ஞானசம்பந்தர் முயற்சியினால் சமண சமயத்தில் இருந்து சைவ சமையதுக்கு மாறிய பாண்டிய மன்னன் யார் ?
கூன் பாண்டியன்
05 தமிழ் இலக்கணத்தில் முற்றெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?
ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல் வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர். இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது
உதாரணம் :
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
படித்தனர் தேர்ந்தனர்
எழுதினன் முடித்தனன
000000000000000000000
01 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? என்று பாடியவர் யார் ?
பத்திரகிரியார்
02 திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம் இயற்றியவர் யார் ?
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
03 முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்த தமிழின் முதல் நூல் எது ?
அகராதி நிகண்டு.
04 திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் யார் ?
கால்டு வெல்
05 இரும்பில் ஒலியின் வேகம் வினாடிக்கு எவ்வளவு ?
5040 மீ / வினாடி
0000000000000000000000
01 எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு ?
அனப்லெப்ஸ்
02 காண்டா மிருகத்தின் கொம்புகள் எதனால் உருவானவை ?
மயிரிழைகளால் ( கெரட்டின் )
03 ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? உதாரணம் தருக .
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம் தை , ஆ
04 எழுத்திலக்கணம் என்றால் என்ன ?
எழுத்துகளை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.
05 திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் யாரால் பாடப்பட்டது ?
பகழிக்கூத்தர்
00000000000000000000000
01 ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார் ?
மூவாதியார்
02 இடைச்சங்கத்தின் கால எல்லை எவ்வளவு ?
3700 ஆண்டுகள்
03 கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு
04 எந்த தானியம் மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?
சோளம்
05 சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றியவர் யார் ?
குமரகுருபரர்
January 03, 2014
Comments
Post a Comment