Skip to main content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-பாகம் 2




01 உவமைத் தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக .

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உதாரணம் மதிமுகம் , கனிவாய்

02 உரிச்சொல் என்றால் என்ன ? உதாரணம் தருக .

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் . உதாரணம் : நனி பேதை , சாலத் தின்றான் , கடி மலர் .

03 சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது?

முக்கூடற்பள்ளு.

04 புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ .வேதங்களின் கருத்துக்களை மறுத்தது

ஆ. சடங்குகளை மறுத்தது

இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது

05 நாலறிவு கொண்ட உயிரினங்கள் எவை ?

நண்டு, தும்பி, வண்டு.

0000000000000000000000

01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ?

சுவிட்சர்லாந்து.

02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ?

சாவுப் பள்ளத்தாக்கு கலிபோர்னியா ( Death Valley, California. A remarkable high temperature of 56.7°C (134°F) was measured there on 10 July 1913, at Greenland Ranch. Death Valley keeps setting records. Just over a year ago – on April 22, 2012 – the hottest temperature ever during the month of April in North America was recorded in Death Valley: 113°F, which eclipsed the old record by 2 degrees.

03 கந்த புராணத்தில் எத்தனை காண்டங்கள் , படலங்கள் , பாடல்கள் அடங்கியுள்ளன ?

06 காண்டங்கள் 135 , படலங்கள் , 10345 பாடல்கள் உள்ளன.

04 சொக்கநாத வெண்பாவை இயற்றியவர் யார் ?

தி ருஞான சம்பந்தர்

05 திண்மைக்கும் தின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

திண்மை = வலிமை , தின்மை = தீமை

00000000000000000000000000

01 தமிழ் இலக்கணத்தில் மல்லிகை சூடினாள் என்பது எதைக் குறிக்கும் ?

முதலாகு பெயர் .

02 சங்கு என்பது எந்தவகை உகரத்தைக் குறிக்கும் ?

மென்தொடர் குற்றியலுகரம் .

03 நீர்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார் ?

பாஸ்கல் .

04 எந்தக்காலத்தில் மனிதகுல முனேற்றம் ஏற்பட்டது ?

இரும்புக்காலம் .

05 குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுவது யாது ?

இலக்கண விளக்கம் .

0000000000000000000000

01 மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய மிருகம் எது ? அண்ணளவாக எவ்வளவு வருடங்கள் ?

முதலை . முதலை ஏறத்தாழ 300 வருடங்கள் வாழக்கூடியது .

02 மனிதனுடைய காதுகளால் உணரக்கூடிய அதிகபட்ச ஒலியின் அளவு எவ்வளவு ?

130 டெசிபல் .

03 தமிழ் மொழியில் ” காண் ” க்கும் ” கான் ” க்கும் உள்ள வேறுபாடு என்ன ?

காண் = பார்த்தல் , கான் = காடு .

04 யானையும் சிலந்தியும் வழிபட்ட கோவில் எது?

திருவானைக்கா .

05 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சம் என்ன ?

கடம்ப மரம்.

0000000000000000000000

01 தமிழ் இலக்கணத்தில் தளை என்றால் என்ன ? அவை யாவை?

நின்ற சீரின் ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும் அவையாவன ஒன்றிய வஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை , கலித்தலை ,வெண்சீர் வெண்டளை , நேரொன்றாசியத்தளை , நிரையொன்றாசிரியத்தளை என ஏழு வகைப்படும்.

02 குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் எது ?

நீலகேசி

03 உளவியலில் வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் ?

எட்வேர்ட் பிராட்போர்ட் டிட்ச்னர் ( Edward Bradford Titchener)

04 சேர, சோழ, பாண்டியர்களான முவேந்தர்கள் எந்த வகையான பூக்களை மாலைகளாக அணிவார்கள் ?

சேரர்களின் மாலை – பனம்பூ மாலை

சோழர்களின் மாலை – அத்திப்பூ மாலை

பாண்டியர்களின் மாலை – வேப்பம்பூ மாலை.

05 முடிச்சாயம் தயாரிக்க பயன்படுதப்படும் வேதியல் பொருள் என்ன ?

சில்வர் நைட்ரேட்

000000000000000000000000

01 கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்டுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்கலின் பெயர்கள் என்ன ?

அர்த்தநாரீஸ்வரர் , அரி அரர் .

02 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதல் சாத்திரம் எது ?

திருவுந்தியார் .

03 இறைவனால் நம் பாவங்கள் கழுவப்படுகின்றது என்பதை விளக்கும் சைவ சித்தாந்தத் தொடர் எது ?

மலபரிபாகம்.

04 சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

சிறந்த நகர்ப்புற திட்டமிடல்.

05 பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

புஷ்யமித்திரர்

00000000000000

01 சூரியனின் ஒளி புவியை அடைய எத்தனை நிமிடங்கள் எடுக்கின்றன ?

8.3 நிமிடங்கள்

02 ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை எத்தனை மடங்குகள் பெரிதாகக் காட்ட வல்லது ?

2 லட்சம் முதல் 3 லட்சம் வரை

03 தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் யார் ?

தேவநேயப் பாவாணர்

04 கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் யார் ?

திருஞானசம்பந்தர்

05 பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு முதுமொழி அந்தப் பத்து எவை ?

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

00000000000000000000000

01 மிகவும் பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் எது ?

ரொய்ட்டர்

02 வேர்களே இல்லாத தாவரம் எது ?

இலுப்பை

03 உலகில் விவாகரத்து செய்யமுடியாத நாடு எது ?

அயர்லாந்து

04 புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

பாளி

05 களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி எது?

பிராக்கிருதம்

0000000000000000000000

01 ” அமர் ” என்ற சொல்லின் பொருள் யாது ?

போர்

02 அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் எது ?

முதுமொழிக்காஞ்சி

03 .250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250

கூடைப் பந்து = 55

இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250×100=22%

எறிபந்து = 63

63/250 எனக் குறிப்பிடலாம்

63/250×100=25.2%

04 ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன ?

ஈரிலக்க எண் 42 (4+2=6)

42 – 18 = 24

இடம் மாறினால் – 42 விடை = 42

05 ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்

00000000000000000000000000

01 ஓவியம் என்ற சொல்லுக்கு எத்தனை வகையான மறுசொற்கள் இருக்கின்றன? அவை யாவை ?

7 வகை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.

02 தொகை நிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

6 வகைப்படும் . வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை

03 உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?

லெனின்

04 மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

ஜப்பான்

05 புராணங்கள் எதனை வகைப்படும் ?அவை யாவை ?

18 வகைப்படும் , சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், கூர்மம், ப்ரம்மாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், ப்ரம்மம், பத்மம், ஆக்னேயம், ப்ரம்மகைவர்த்தம் எனற பதினெட்டும் ஆகும்

000000000000000000000

01 சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது ?

நுரை மிதப்பு முறை.

02 நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் ?

நந்திவர்ம பல்லவன்.

03 இரும்பின் கியூரி வெப்பநிலை எத்தனை செல்சியஸ் ?

770 டிகிரி சென்டிகிரேட்.

04 செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

ஆண்ட்ரூஸ் செல்சியஸ்.

05 திருக்கடைக்காப்பு நூலை இயற்றியவர் யார் ?

சம்பந்தர்.

00000000000000000000000

01 வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது ?

இந்தியா

02 செம்பைப் எந்த நாகரீகம் பயன்படுத்தியது ?

ஹரப்பா நாகரிகம்.

03 யார் யார் இடையேழு வள்ளல்கள் ?

1.அக்குரன்

2.அந்திமான்

3.கர்னன்

4.சந்தன்

5.சந்திமான்

6.சிசுபாலன்

7.வக்கிரன்

04 தமிழ் இலக்கணத்தில் சொல் என்றால் என்ன ?

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

05 பாவங்கள் என்பன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.

01 எந்த ஓவியங்கள் பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுகின்றது ?

சித்தன்னவாசல் ஓவியங்கள்.

02 எந்த வெனிஸ் வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார் ?

மார்க்கோ போலோ.

03 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

ராமானுஜர்.

04 புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை என்ன ?

அறியாமை அகற்றுதல்.

05 தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகையை வகைப்படுத்துக ?

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

0000000000000000000000000

01 மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன ?

ஆன்ட்ரோபோபியா.

02 தமிழ் இலக்கணத்தில் அணி எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

10 வகைப்படும்

1.தன்மையணி

2.உவமையணி

3.உருவக அணி

4.பின்வருநிலையணி

5.தற்குறிப்பேற்ற அணி

6.வஞ்சப் புகழ்ச்சியணி

7.வேற்றுமை அணி

8.இல்பொருள் உவமையணி

9.எடுத்துக்காட்டு உவமையணி

10.இரட்டுறமொழிதலணி

03 வல்லெழுத்து மிகுதல் என்றால் என்ன ?

இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் – க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் எனப்படும் .

04 அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

ஜான் கூடன்பர்க் ( ஜெர்மனி )

05 ஆணவம் என்றால் என்ன ?

இறைவனுடைய சிந்தனையில் ஒன்றாமல் இருக்கும் தன்முனைப்பே ஆணவம் ஆகும். செம்பில் களிம்புபோல் உயிர்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால எல்லையிலே நீங்கும் அநேக சத்திகளையுடையதாய்ச் சடமாய் இருப்பது.

000000000000000000000

01 ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

6 கி.மீ

02 .கரையான் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை இடும்?

மூவாயிரம் ( ஈசல்கள் ஒருநாளைக்கு 40,000 முட்டைகள் வரை இடும் .)

03 வினைத்தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக ?

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.

“சுடுசோறு” –

சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)

சுட்ட சோறு (இறந்தகாலம்)

சுடும் சோறு (எதிர்காலம்)

04 தமிழ் இலக்கணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

பெயரெச்ச வகைகளில் “ஆ” என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும் . உதாரணம் : எய்துவர் எய்தாப் பழி – எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நாறா மலரனையர் – நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

05 முதல் ஏழு வள்ளல்கள் யார் யார் ?

1.சகரன்

2.காரி

3.நளன்

4.துந்துமாரி

5.நிருதி

6.செம்பியன்

7.விராடன்

0000000000000000000

01 ஓவியம் வரைபவர்களில் ஆண் ஓவியர் பெண் ஓவியரின் சரியான தமிழ் பெயர் என்ன ?

ஆண் : சித்திராங்கதன், பெண் : சித்திரசேனா.

02 ஓவியங்கள் வரைகின்ற இடங்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள்?

சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

03 எத்தனையாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?

பதினோராம் திருமுறை

04 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் யார் ?

திருத்தக்கதேவர்

05 அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் என்ன ?

வினிகர்

00000000000000000

01 ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கின்றது ?

3 லட்சம் கி.மீ.

02 சூரியக் கதிர்வீச்சு அண்ணளவாக எவ்வளவு இருக்கும் ?

1372 வாட்ஸ்/மீ (சூரியக் கதிர்வீச்சை இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை , அண்ணளவாக )

03 புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் எவை?

அன்பு மற்றும் பொறாமை

04 முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார் ?

மதுரைக் கூடலூர்கிழார்

05 கணித சாஸ்திரத்தில், “பை’ என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் யார்?

புதையனார் , 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

000000000000000000000

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் .

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

கல்லடி வேலுப்பிள்ளை . எழுதிய நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி .

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

மங்கள நாயகி . 1914 இல் ‘ நொறுக்குண்ட உதயம்’ என்றும் 1926 இல் ‘ அரியமலர்’ என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

ரஷ்யா

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

வைரம்

January 05, 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...