Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-பத்தி

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் -பாகம் 10

சுறுக்கரும் சம்பந்தனும்  விடியக்காலமை குளிச்சு முழுகி நெத்தியிலை பெரிய சைசிலை திருநூறும் பூசி வீட்டு முன்விறாந்தையிலை இருந்த ஈசி செயரிலை ரெண்டு காலையும் கிழிச்சு போட்டுக்கொண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை உதயன் பேப்பர் பாத்துக் கொண்டு இருக்கிறார் .பனைக்கருக்காலை செய்த படலை திறந்து கேட்டது ஐயம்பிள்ளை அரைக்கண்ணாலை படலையை பாக்கிறார் சுறுக்கர் லைட்டான தள்ளாட்டத்தோடை என்றியாகிறார் . இனி ..... 00000000000000000000000 சுறுக்கர்: மச்சான் ஐமிச்சம் என்னடாப்பா.......... எல்லா மாடும் ஒடீச்சுதெண்டு பாத்தால் சுப்பற்றை கொல்லைக்குள்ளை நிண்ட பேத்தை மாடும் ஒடீச்சுதாம் எண்ட கணக்காய் பேப்பர் படிச்சு கொண்டிருக்கிறாய் . ஐயம்பிள்ளை: உங்களுக்கு என்னோடை தனகாட்டில் பத்தியப்படாதே சுறுக்கர் . சுறுக்கர்: சரி....... சரி ......... உன்னோடைதானே தனகலாம் எல்லாரோடையும் செய்யேலுமே . என்ன பேப்பரிலை அவதியாய் படிக்கிறாய் ? ஐயம்பிள்ளை: உங்களுக்கு விசயம் தெரியாதே? சம்பந்தர் எல்லோ எதிர்கட்சி தலைவராய் போட்டார் . உங்களுக்கு ஏதாவது எத்துப்படுதே ? சுறுககர்: எனக்கு எத்துப்படுகிறது இருக்கட்டும் உனக்கு

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 09

தவறணையில் தத்துவ விசாரணை -தேர்தல் லொக்கேசன் : பருத்தித்துறை (கூவில்) முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர் ஆகின்றார். ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன?  சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு . ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் நீ கிறுங்க மாட்டாய் . உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது? சுறுக்கர் : இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு . ஐயம்பிள்ளை: அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ? சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்ச

மீன்பாடும் தேன்நாட்டில் முகமறியா நட்புகளுடன் ஓர் சந்திப்பு

மட்டக்களப்பு என்றாலே மந்திர தந்திரங்களும் அதன் வழிவந்த பாயொட்டி கதைகளும் தான் எனக்கு வியாக்கியானப்படுத்தியிருந்தன. காரணம் ,நான் பிறந்ததிற்கு ஒருபோதுமே மட்டக்களப்பு சென்றதில்லை. எனது அப்பா மட்டகளப்பிலும் ,அம்பாறையிலும், பொத்துவிலிலும் பிரதம தபாலதிபராக வேலை செய்திருந்தாலும் அப்பொழுது நான் சிறுவனாக இருந்ததால் என்னால் அங்கு போகமுடியவில்லை. மட்டக்களப்பு செல்லவேண்டும் என்ற எனது கனவு கனவாகிப் போய்விடுமோ என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக்கோடை விடுமுறை என்கனவை நனவாக்கியது. பிரான்சில் நின்றபொழுதே இந்த சந்திப்புகளுக்கான முன்னெடுப்புகளை செய்திருந்தேன். நண்பர்கள் றியாஸ் குரானா, முகமட் இம்மட், மற்றும் மைக்கல் கொலின் ஆகியோர் இலக்கிய சந்திப்புகளை நெறிப்படுத்தினார்கள். பருத்திதுறையில் இருந்து கல்முனைக்கு பஸ் இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்த வவுனியா சென்று அங்கிருந்து மட்டக்களப்பு செல்லத் தீர்மானித்தேன் . சிலமணிகளை விழுங்கிய பஸ் காலை 9மணியளவில் வவுனியாவைத்தொட்டது. அங்கிருந்து 10 மணியளவில் பஸ் புறப்பட்டது .பொலநறுவை ஹபறணை ,மின்னேரியா என்று காட்டுபகுதிகளால் பஸ் விரைந்தது. ஹபரணையில் இருந்து இரா

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பாகம் 08

ஐமிச்சம் ஐயம்பிள்ளையும் அம்மாக்குஞ்சியும் மெய்யே பிள்ளையள்......... இதை ஒருக்கால் கேளுங்கோவன். இப்ப ரெண்டு மூண்டு நாளைக்கு முன்னம் ஒருத்தனும் ஏன் நாயே எண்டு கேக்காத நேரத்திலை முகப்புத்தகத்துக்கு நான் மண் எடுத்துக்கொண்டிருந்தன். அப்ப அதிலை ஒரு விசையத்திலை எல்லாரும் லைக்கி மோர் கடைஞ்சு கொண்டு இருந்தினம். நானும் ஐமிச்சத்திலை என்ன ஏது எண்டு எட்டிப்பாத்தால் அங்கை இந்த பேரன் பேத்தியளை எப்பிடி அவையின்ர அம்மம்மாமார் பாக்கினம் எண்ட மாற்ரர் ஓடிக்கொண்டிருந்திது. ஐயம்பிள்ளையருக்கு உந்த பொசிப்பெல்லாம் சிவசத்தியமாய் கிடைக்கேலை பாருங்கோ.அவற்றை அம்மம்மாவும் அம்மப்பாவும் ரிக்கெட் எடுத்துப்போட்டினம். ஆனால் ஐயம்பிள்ளை உறுக்கிணிக்குழுவனாய் இருக்கேக்கை அவற்றை பூட்டியோடை தான் சிங்கன் வாலாயம். அவாவின்ரை பேர் சிதம்பரம் எல்லாரோடையும் கொழுத்தாடு பிடிக்கிற கிழவி இவரோடை மட்டும் ஒரு தனகலும் இல்லாமல் ஒட்டெண்டால் அப்பிடியொரு பிலக்காய்பால் ஒட்டு. அந்த நேரத்திலை ஐயம்பிள்ளைக்கு ரெண்டு எளிய பழக்கம் இருந்தீச்சுது. ஒண்டு விரல் சூப்பிறது. மற்றது கேட்டு கேள்வியில்லாமல் கண்ட கடியளையும் வாயுக்கை போடிறது.

கருத்துச்சுதந்திரம் -Freedom of speech- liberté d'expression

நகரின் மத்தியில் ஓர் பிரபல்யமான சீன உணவகம் இருந்தது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் உடனுக்குடன் உயிர் மீனை பிடித்து வெட்டி விதம் விதமான மீன் கறிகளை நாவுக்கு ருசியாக அதன் தலைமை சமையல்காறர் செய்து கொடுப்பார். இதனால் எப்பொழுதும் அந்த சீன உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அந்த சீன உணவகத்தில் அழகான ஓர் பெரிய விசாலமான மீன் தொட்டி இருந்தது. அதில் பலவகையான மீன்கள் தங்களுக்குள் கதைத்தும் பேசியும் மகிழ்வாக ஓடித்திரிந்தன. அந்த மீன்களுக்கு இந்த உலகமானது மிக மிகப்பிரமாண்டமானது என்றதோர் மிகப்பெரிய எண்ணம் இருந்தது.  அதில் இருந்த ஓர் மீன் வடிவாக மீன் தொட்டியை சுற்றி விட்டு வந்து மற்ற நண்பர்களுக்கு சொன்னது, "நீங்கள் எண்ணுவது பிழை. இந்த மீன்தொட்டிதான் எங்கள் உலகம். இடையில் ஓர் கண்ணாடி இருக்கின்றது" என்று சொன்னது. மீனின் இந்தப் பதிலால் சில மீன்கள் கடும் கோபமுற்று அந்த மீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின அந்த மீனும் மனம் தளராமல் " நண்பர்களே நீங்களும் ஒருமுறை நான் சொன்னதை பரிசோதனை செய்துபாருங்கள் அப்பொழுது நான் சொன்னதன் உண்மை தெரியும்" என்று சொன்னது. அந்த நேரம் மீன் த

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 (ஒழிச்சு வை)

ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!!  வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு,  "அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ "?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா ,  "உமக்கு ஆரையும் தெரியுமோ "? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் . வந்த பெடி உரு ஏறி,  "உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் " எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான்.  அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா " நில்லு தம்பி புத்தகம் கிடக்கு" எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிர

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 06

இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத் தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய் சுடுறாங்கள்.ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ. நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ. இந்த நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள். ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 05

வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை . இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையில

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை-பத்தி

இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வ

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி

பிள்ளையள் வணக்கம், எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்க

ஐடியா சின்னத்தம்பியர் – பத்தி

ஒரு ஊரிலை சின்னதம்பி எண்டு ஒரு பெரிய ஆள் இருந்தார் . அவரிட்டை இருக்கிற ஒரு குணம் என்னவெண்டால் தீராத பிரச்னை எல்லாத்தையும் தீர்க்கிறதிலை சின்னதம்பியர் தான் சிங்கன் . இப்பிடித்தான் ஒருநாள் ஒருதற்றை வீட்டு ஆட்டுக்குட்டி ஒண்டு விளையாட்டுதனமாய் தன்ரை தலையை ஒரு மண் குடத்துக்கை குடுத்துப்போட்டுது . எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது . உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடி

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்.

கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் . இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் . அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை கோயில்லை குளறி சின்னத்தம்பியர் எண்டு ஒரு நாட்டாண்மை இருந்தவர் . அவற்றை வேலை எங்களை கொண்றோல் பண்ணுறது . பொம்பிளையளுக்கு முன்னாலை தான் ஒரு பயில்வான் எண்டு காட்டிறது . அவரை ஏன் குளறி சின்னத்தம்பி எண்டு சொல்லிறனாங்கள் எண்டால் அந்தாள் ஒருக்காலும் மெல்லிசாய் கதைக்கிற மனுசன் இல்லை . பக்கத்திலை நிண்டால் காது கன்னம் எல்லாம் வெடிக்கும் . அவருக்கு தண்ணி வென்னியோ சு