பொட்டலங்களாக பிரிந்து இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார்கள். எனது பார்வையில் இருந்து பரந்தன் மெதுவாக மறைய தொடங்கியது. தூரத்தே ஆனையிறவு வருவதற்கு சாட்சியாக உப்புக்கலந்த காற்று என் முகத்தில் அடித்தது. எமது வாழ்விலும் ஆனையிறவு பல திருப்பங்களை தந்த இடமாகும். மாற்றங்கள் என்பதனை மாறும் களங்களே தீர்மானிக்கின்றன என்பது போல நாங்கள் எடுத்த வியூகங்களும் பல மாறும் களங்களை எடுத்து தந்தன. அதுவே பலர் எம்மீது உறக்கத்தை தொலைத்த ஒரு காலமும் இருந்தது. உறக்கத்தை தொலைத்தவர்கள் நிதானமாக உறக்கத்தில் இருந்து மீள , நாங்களோ வெற்றி தந்த மிதப்பில் மீள முடியாத உறக்கத்துக்கு சென்ற காலப் பிறழ்வும் இங்கேயே ஆரம்பித்தது. இரு பக்கமும் ஆழம் குறைந்த கடல் ஆணை கட்ட. அதன் நடுவே இருந்த ஏ 9 பாதையால் பஸ் விரைந்து சென்றது . கடலில் அங்காங்கே திட்டுத்திட்டுகளாக வெள்ளையாக உப்பு படர்ந்து கொண்டு இருந்தது. இடையில் இருந்த குட்டைகளில் ஒரு மீனாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பல கொக்குகள் ஒற்றைக்காலில் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தன. அந்த வெளியில் இருந்த ஒரே ஒரு படை முகாமையும் தாண்டி அந்த பஸ் இயக்கச்சியை ஊடறுத்து ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்